செய்திகள் :

அரசுப் பள்ளி ஆண்டு விழாவில் மது குடித்து வந்த மாணவிகள் - அதிச்சியில் ஆசிரியர்கள்; கவலையில் பெற்றோர்

post image

கும்பகோணம் மாவட்டத்தில் உள்ள அந்த அரசு மேல்நிலைப்பள்ளியில் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். 10க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். கடந்த பிப்.20ம் தேதி, பள்ளியில் ஆண்டு விழா நடந்துள்ளது. அப்போது பிளஸ் 2 மாணவிகள் நான்கு பேர், பள்ளியின் அருகே உள்ள காவிரி ஆற்றின் கரையில், அமர்ந்து மது குடித்தாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, அப்பகுதி மற்றும் பள்ளியில் போதையில் தள்ளாடியபடி சுற்றியுள்ளனர்.

கும்பகோணம்

மாணவிகளின் இந்த செயலை பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். உடனே பள்ளியின் ஆசிரியர்கள் மாணவிகளிடம் `என்ன காரியம் செஞ்சிருக்கீங்க, எப்படி தைரியம் வந்துச்சினு?' சத்தம் போட்டுள்ளனர். அதை கேட்க கூடிய நிலையில் மாணவிகள் இல்லை. இதையடுத்து பள்ளியின் தலைமையாசிரியர் மாணவிகளின் பெற்றோரை வரவழைத்து பேசியுள்ளனர். அப்போது, மாணவிகளை இனி பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். தேர்வு எழுதுவதற்கு நேரடியாக அனுப்பி வையுங்கள், இனி இது போன்று நடந்துக்கொள்ள கூடாதுனு அட்வைஸ் பண்ணி அனுப்பியுள்ளனர். மாணவிகள் மது குடித்த விவகாரம் குறித்து சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இது குறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது, `பள்ளி ஆண்டு விழாவிற்கு மாணவிகள் மது குடித்து விட்டு வந்தது தெரிந்து மனவேதனை அடைந்தோம். பிற மாணவ, மாணவிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக சம்மந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களை அழைத்து அறிவுரை வழங்கி, அனுப்பி வைத்தோம். மேலும், எங்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளோம். இந்த விவகாரத்தை விசாரித்து வருவதாக' தெரிவித்தனர்.

பெற்றோரோ, `இதை கேள்விபட்டதிலிருந்தே எங்க மனசு பதைபதைக்குது, பள்ளிக்கு கெட்டப்பெயர் ஏற்படும் என்பதால் இதை மூடி மறைக்காமல் மாணவர்களுக்கு கவுன்சிலிங்க் கொடுத்து நல்வழி படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

__________________________________________

உங்கள் தொகுதியின் தீர்க்கப்படாத பிரச்னைகளையும், தேவைகளையும், தொகுதி எம்.எல்.ஏ.வின் செயல்பாடுகளுக்க உங்கள் மதிப்பீட்டையும்- link-ஐ க்ளிக் செய்து பதிவு செய்யுங்கள்.!