மத்தியப் பிரதேசம்: தேர்வு எழுதும்போது பிரசவம்; கழிவறையில் குழந்தை பெற்ற பள்ளி மா...
வேலூர்: காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து - கைதுக்கு பயந்து இளைஞன் தற்கொலை
வேலூர் அருகேயுள்ள அரியூர் ஜீவா நகரைச் சேர்ந்த 19 வயது இளைஞன் விக்னேஷ். ப்ளஸ் டூ வரை பயன்ற விக்னேஷ் உயர்க்கல்வியைத் தொடராமலும், வேலைக்குச் செல்லாமலும் வீட்டிலேயே இருந்து வந்தாராம். இந்த நிலையில், தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் 19 வயது மாணவியை விக்னேஷ் ஒருதலையாக காதலித்துவந்ததாக தெரிகிறது. தினமும் மாணவி கல்லூரிக்குச் சென்று திரும்பும்போது தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது. நேற்றைய தினமும் வழக்கம்போல் தொரப்பாடி ராம்சேட் நகர் வழியாக கல்லூரிக்குச் சென்றுகொண்டிருந்தார் அந்த மாணவி. அப்போது அவரைப் பின்தொடர்ந்து சென்ற விக்னேஷ், கத்தியைக் காட்டி மிரட்டி காதலிக்கச் சொல்லி மாணவியை மிரட்டினாராம்.

மாணவி மறுக்கவே, ஆத்திரமடைந்த விக்னேஷ் கத்தியால் மாணவியை தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில், மாணவிக்கு கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. பொதுமக்கள் அவரை மீட்டு அடுக்கம்பாறையிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, தன் வீட்டுக்குச் சென்ற விக்னேஷ் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். இந்த சம்பவம் குறித்து, அரியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கைதுக்கு பயந்து விக்னேஷ் விபரீத முடிவு எடுத்ததாகவும் தெரியவந்திருக்கிறது.
















