செய்திகள் :

'சட்டமன்றத் தேர்தலை தள்ளிப்போடுங்கள்.!' - தேர்தல் ஆணையத்துக்கு சீமான் கோரிக்கை!

post image

தி.மு.க, அ.தி.மு.க-வுக்கு முன்பாக சட்டமன்றத் தேர்தலுக்காக வேட்பாளர்களை அறிவித்திருக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீ்மான் திடீரென தேர்தலை தள்ளிப்போடச் சொல்லியிருப்பது பரபரப்பை கிளப்பியிருக்கிறது. அதுகுறித்து விசாரித்தோம்.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

2026 சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாட்டு பணிகளுக்காக சென்னை வந்திருக்கிறார்கள் அகில இந்திய தேர்தல் ஆணையத்தின் முதன்மை அதிகாரிகள். கடந்த பிப்ரவரி 26-ம் தேதி தனியார் விடுதியில் தேர்தலை சிறப்பாக நடத்தி முடிப்பது குறித்து ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை அழைத்து கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தியது தேர்தல் ஆணையம். தி.மு.க தரப்பில் பங்கேற்ற ஆர்.எஸ் பாரதி, "தமிழ்நாட்டுக்கான சட்டமன்றத் தேர்தலை ஓரே கட்டமாக ஏப்ரல் மாதத்துக்குள் நடத்திமுடிக்க வேண்டும்" என கோரினார்.

வி.சி.க தரப்பில் பேசிய ரவிக்குமார், "பிரசாரத்துக்கு 15 நாட்கள் மட்டுமே அனுமதியளிக்க வேண்டும்" என கோரிக்கை வைத்தார். இறுதியாக பேசிய சீமான், "தேர்தல் நடைபெற்ற நாளிலிருந்து ஓரிரு மாதங்கள் வாக்குப் பெட்டியை பூட்டி பாதுகாக்கிறோம் என்கிறார்கள். அதில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. ஆகையால் தேர்தல் முடிந்தவுடன் ஓரிரு நாட்களில் வாக்கு எண்ணிக்கையை நடத்தும் வகையில் கடைசி கட்டமாக தமிழ்நாட்டுக்கு தேர்தல் நடத்துங்கள்" என வலியுறுத்தியுள்ளார்.

சீமான்
சீமான்

நா.த.க-வின் பிரசாரம் குறித்து அக்கட்சியினரிடம் பேசினோம், "ஒவ்வொரு முறையும் தேர்தல் முடிந்து, வாக்கு இயந்திரம் இருக்கும் அறையை பாதுகாப்பது பெரும் சவாலாக இருக்கிறது.

அது மட்டும் இன்றி, மாநாடுக்கு கூடிய கூட்டத்தை பார்த்த அண்ணன் சீமான், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாபெரும் பொதுக்கூட்டங்களை நடத்திவிட வேண்டும் என விரும்புகிறார். அதற்கு 40 நாட்கள் தேவைப்படுகிறது. அதையும் மனதில் வைத்தே கடைசி கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்கிறார்" என்றனர்.

`எஸ்.ஐ.ஆர் மூலம் குடியுரிமை பறிப்பு' - அகில இந்திய மக்கள் இயக்க மாநாட்டில் பரக்கல பிரபாகர் ஆவேசம்!

சென்னை தி.நகரிலுள்ள சர் பிடி தியாகராயர் அரங்கில் அகில இந்திய மக்கள் இயக்கம் சார்பில் 'வஞ்சிக்கப்படும் தென்னிந்தியா, பழிவாங்கப்படும் தமிழ்நாடு' என்ற தலைப்பில் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி கருத்தரங்கம் நடை... மேலும் பார்க்க

`இந்த வீட்டு வாசல்ல அம்மா கார் டயருக்கு வணக்கம் வச்சவங்கதானே; இங்க வர்றதுக்கு என்ன?' – ஜெ.தீபா

மறைந்த முன்னாள் முதல்வரும் அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளருமான ஜெ.ஜெயலலிதாவின் பிறந்தநாள் நேற்று அக்கட்சியின் தொண்டர்களால் கொண்டாடப்பட்டது.ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் கார்டன் வீட்டில் தற்போது வசித்து வ... மேலும் பார்க்க

ம.நடராஜனின் சகோதரர் மரணம் - கட்சியின் பெயரை வி.கே.சசிகலா அறிவிக்காததற்கு காரணம் இதுவா?

வி.கே. சசிகலாவின் கணவர் மறைந்த ம.நடராஜனின் மூத்த சகோதரர் ம. சாமிநாதன் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.ராமநாதரபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நேற்று புதிய கட்சி தொடங்கும் முடிவை அறிவித்தார் வி.கே சசிகல... மேலும் பார்க்க

PEN ரிபோர்ட்; உதயநிதியின் கிரீன் சிக்னல்; உற்சாகத்தில் உடுமலை இளைஞரணி - திடீர் விசிட் பின்னணி!

திருப்பூர் மாவட்டத்தில் விஐபி தொகுதியாக கருதப்படும் உடுமலைப்பேட்டைதான் இப்போது, மாவட்ட திமுக-வுக்குள் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.1996-க்குப் பிறகான 25 ஆண்டுகளில், இந்த தொகுதியில் நடைபெற்ற 5 ... மேலும் பார்க்க

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் குறைப்பு; ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு மற்றும் புனரமைப்புப் பணிகள் காரணமாக, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையிலான புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளன.... மேலும் பார்க்க

கோவை : அதிநவீன வசதிகளுடன் தயாராகும் தேர்தல் பிரசார வாகனங்கள் !

தேர்தல் பிரசார வாகனங்கள்தேர்தல் பிரசார வாகனங்கள்தேர்தல் பிரசார வாகனங்கள்தேர்தல் பிரசார வாகனங்கள்தேர்தல் பிரசார வாகனங்கள்தேர்தல் பிரசார வாகனங்கள்தேர்தல் பிரசார வாகனங்கள்தேர்தல் பிரசார வாகனங்கள்தேர்தல் ... மேலும் பார்க்க