செய்திகள் :

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் குறைப்பு; ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி

post image

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு மற்றும் புனரமைப்புப் பணிகள் காரணமாக, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையிலான புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் ரயில் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தொடக்கத்தில் இந்தத் தடத்தில் நாளொன்றுக்கு 204 ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வந்தன. எழும்பூர் பணிகளுக்காக இது முதற்கட்டமாக 164 ஆகக் குறைக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது பராமரிப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளதால், ரயில் சேவைகளின் எண்ணிக்கை மேலும் குறைக்கப்பட்டு, தற்போது வெறும் 115 ரயில்கள் மட்டுமே இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது, வழக்கமான சேவையில் பாதியளவு ரயில்கள் மட்டுமே தற்போது இயக்கப்படுகின்றன.

Chennai Rail
Chennai Rail

இந்த மாற்றங்கள் எழும்பூர் நிலைய மேம்பாட்டுப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக அறிவிக்கப்பட்டவை எனத் தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் மெட்ரோ ரயில், பேருந்து போன்ற மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடு ஏப்ரல் 5 வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பயணிகளின் வசதிக்காகச் சில முக்கிய நிலையங்களுக்கு இடையே 'கட் சர்வீஸ்' ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எழும்பூர் - பரங்கிமலை, எழும்பூர் - கூடுவாஞ்சேரி, எழும்பூர் - செங்கல்பட்டு ஆகிய இடங்களுக்கு இடையே மட்டும் ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே குறைவான ரயில்களால் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்து வரும் பயணிகளுக்கு, இந்தச் சேவைக் குறைப்பு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எழும்பூர் ரயில் நிலையப் பணிகள் முடியும் வரை இந்த மாற்றங்கள் நடைமுறையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை : அதிநவீன வசதிகளுடன் தயாராகும் தேர்தல் பிரசார வாகனங்கள் !

தேர்தல் பிரசார வாகனங்கள்தேர்தல் பிரசார வாகனங்கள்தேர்தல் பிரசார வாகனங்கள்தேர்தல் பிரசார வாகனங்கள்தேர்தல் பிரசார வாகனங்கள்தேர்தல் பிரசார வாகனங்கள்தேர்தல் பிரசார வாகனங்கள்தேர்தல் பிரசார வாகனங்கள்தேர்தல் ... மேலும் பார்க்க

20 ஆயிரம் டன் நிலக்கரி இறக்குமதி; உடன்குடி அனல்மின் நிலையத்தில் விரைவில் மின் உற்பத்தி தொடக்கம்!

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அனல்மின் நிலையத் திட்டத்திற்கு கடந்த 2008-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டது. முதற்கட்ட பணிகள் நடந்து வந்த நிலையில், ஆட்சி மாற்றத்தினால் அத்திட்ட... மேலும் பார்க்க

Brand Bengaluru: சர்வதேச SWAN அமைப்பில் இந்தியாவின் ஒரே பிரதிநிதி; வாழ்த்திய முதல்வர் சித்தராமையா!

SWAN (Smart Water Networks Forum) என்ற அமைப்பு உலகெங்கிலும் உள்ள குடிநீர், கழிவுநீர் மற்றும் மழைநீர் அமைப்புகளை "ஸ்மார்ட்" (Smart) ஆக மாற்றும் ஒரு சர்வதேச லாப நோக்கற்ற அமைப்பாகும். இதன் தலைமையகம் லண்ட... மேலும் பார்க்க

NLC: விதிமீறல்களின் 'சுரங்கம்' என்.எல்.சி? சிஏஜி அறிக்கையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்; ஓர் அலசல்

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனம் (NLC India Ltd), கடந்த சில ஆண்டுகளாகப் பல்வேறு சுற்றுச்சூழல் விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.இது தொடர்பாக 2017-18 ம... மேலும் பார்க்க

Chennai Rail: `வதந்திகளை நம்பாதீங்க... நாளைய சிறந்த எழும்பூருக்காக.!' - சென்னை ரயில்வே கோட்டம்

சென்னை மற்றும் சென்னை புறநகரை இணைக்கும் வகையில் மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதில் தினம்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக, அரசு மற்றும் தனியார் துறைகளில் வே... மேலும் பார்க்க

திருமணப் பதிவு: "பெற்றோருக்கு வாட்ஸ்அப்பில் தெரிவிக்கப்படும்" - விதிகளைக் கடுமையாக்கும் குஜராத்

குஜராத் மாநில அரசு, திருமணப் பதிவு முறைக்கெனப் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, திருமணத்தில் பெற்றோரின் பங்களிப்பை உறுதிப்படுத்துவதே இந்த மாற்றத்தின் முக்கிய நோக்கம் எனவும் தெர... மேலும் பார்க்க