Gold Rate: 'கொஞ்சூண்டு' உயர்ந்த தங்கம்; இன்றைய தங்க விலை நிலவரம் என்ன?
அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார்: Live Cooking இல் அசத்திய போட்டியாளர்கள்; இறுதிச்சுற்றில் மூவர்
சக்தி மசாலா, சத்யா ஏஜென்சீஸ், நாகா, கோல்டு வின்னர், எக்சோ, அஸ்வின் ஸ்வீட்ஸ், ஆர்.கே.ஜி நெய், லலிதா ஜுவல்லரி, சௌபாக்கியா, சுப்ரீம் பர்னிச்சர், மெரிபா பன்னீர், விகடன் ப்ளே, இண்டேன், கார்த்திபுரம், ஹலோ எஃப்.எம் ஆகியவை இணைந்து வழங்கும் "அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 3" கோயம்புத்தூரில் 22.02.2026 அன்று சிறப்பாக நடைபெற்றது.

அவள் விகடனின் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி இரண்டு சுற்றாக நடைபெற்றது. முதல் சுற்றின் விதிமுறைப்படி போட்டியாளர்கள் உணவுகளை வீட்டிலிருந்து சமைத்துக் கொண்டு வந்திருக்க வேண்டும்.
சமைத்துக் கொண்டு வந்த உணவை நடுவர் தீனாவுக்குக் காட்சிப்படுத்தி உணவின் செய்முறையை விளக்கினர். 90ஸ் கிட்ஸ்களுக்குப் பிடித்த ஜம்பார் மிட்டாய், 1234 பால் பர்ஃபி, ராகி நாட்டுக்கோழி பிரியாணி, ராகி மாப்பிள்ளை சம்பா அரிசி அல்வா எனப் பல வகையான புதுவிதமான உணவுகள் போட்டியாளர்களால் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
சுவை, ஆரோக்கியம், செய்முறை, காட்சிப்படுத்திய விதம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் 10 பேர் இரண்டாம் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
முதல் சுற்றில் சிறப்பாகச் செயல்பட்ட மேலும் 14 பேருக்குச் சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது. முதல் சுற்றை முடித்திருந்த போட்டியாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக சத்யா, சௌபாக்யா, நாகா, சுப்ரீம் உள்ளிட்ட ஸ்பான்ஸர்கள் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தி அவர்களின் சார்பில் பரிசுகளையும் வழங்கினர்.

இரண்டாவது சுற்றின் விதிமுறைப்படி முதல் சுற்றில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 10 நபர்கள் கொடுக்கப்பட்ட பொருட்களை வைத்து "லைவ் குக்கிங்" செய்ய வேண்டும். கொடுக்கப்பட்ட ஒரு மணிநேரத்திற்குள் நாகா பிராண்ட் ரவை, கோல்டு வின்னர் மற்றும் சக்தி மசாலா பயன்படுத்தி ஒரு மெயின் டிஷ், ஒரு சைட் டிஷ், ஒரு ஸ்வீட் செய்ய வேண்டும்.
அதன்படி, குதிரைவாலி சாப்பாடு, பேராக்காய் பள்ளி காரம், கோகனட் ஸ்டியூ சந்தகை, வாழைத்தண்டு கொழுக்கட்டை, உளுந்து சாதம், பெருங்காயம் சட்னி, மஞ்சள் அல்வா, பனங்கிழங்கு களி, அங்காய மருந்து சோறு எனப் பத்து போட்டியாளர்களும் வகை வகையாக ரெசிபிகளைச் செய்து அரங்கத்தை மணத்தால் கட்டியிழுத்தனர்.
பத்து போட்டியாளர்களின் உணவுகளையும் ருசி பார்த்த பின் அனைவரின் உணவும் அருமையாக இருந்தது சிறு வித்தியாசத்தில்தான் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்று செஃப் தீனா கூறினார்.

அதன்படி சென்னையில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு மஞ்சுளா குமார், சுகந்தி, சுமதி ஆகியோர் தேர்வாகினர். இதில் சிறப்பாகச் செயல்பட்ட மற்றொரு போட்டியாளர் வைல் கார்டு என்ட்ரியாக சென்னை வருவார் என்றும் சப்ரைஸ் வைக்கப்பட்டது.
முன்னதாக இரண்டாம் சுற்றில் கலந்து கொண்ட மற்ற ஏழு போட்டியாளர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.



















