செய்திகள் :

`தாய் தகப்பன் மாதிரி ஆறுதலா இருந்தான்; நொடிப் பொழுதுல பறி கொடுத்துட்டேன்' - கலங்கும் தேவி பிரியா

post image

சீரியல் நடிகை தேவி பிரியா பயணம் செய்த கார் திருச்சி அருகே விபத்தில் சிக்கியதில் அவரது உதவியாளரும் டிரைவருமான முத்து கணேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் பயணித்த இன்னொரு ஆக்டிங் டிரைவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மரணமடைந்த முத்து கணேஷின் சொந்த ஊர் ராஜபாளையம். அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

முத்து கணேஷ் உடலடக்கம் முடிந்ததும் திருச்சி மருத்துவமனையிலிருக்கும் திவாகர் என்ற அந்த ஆக்டிங் டிரவைரச் சந்திக்க கிளம்பிக் கொண்டிருந்த தேவி பிரியாவிடம் பேசினோம்.

தேவி பிரியா

''சினிமாக் கனவுகளூடன் சென்னைக்கு வந்தவந்தான். பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி எங்கிட்ட வந்தான். உதவியாளர், டிரைவர், மேக் அப் மேன் என எல்லா வேலைகளையும் செய்தாலும். நான் என் குடும்பத்துல ஒருத்தனாத்தான் அவன் கிட்டப் பழகினேன்.

அவனுமே சகோதரனா நண்பனா ஏன் கஷ்டமான சந்தர்ப்ப்பங்கள்ல தாய் தகப்பன் மாதிரி ஆறுதலாப் பேசறவனா இருந்தான். எனக்குத் தெரிஞ்ச இடங்களில் அவனுக்காக நான் பேசியிருக்கேன். சின்னச் சின்ன கேரக்டர்களில் நடிக்கவும் செய்திருக்கான். பெரிய கனவோட இருந்தான். சமீபத்துலதான் கல்யாணமும் நடந்திச்சு. ஆனா இப்படியொரு துயரம் நடக்கும்னு நாங்க நினைச்சுக்கூடப் பார்க்கலையே' எனக் கலங்கியபடி பேசினார்.

சீரியல், சினிமா ஏரியாவில் பலருடனும் நல்ல தொடர்பிலிருந்தாராம் முத்து கணேஷ்,

''நல்ல பையன். ஆன்மிகத்துல அதிக ஈடுபாடு இருந்தது. பொதுவா இந்த ஃபீல்டுல ஒரே ஆர்ட்டிஸ்ட்கிட்ட பல வருஷம் இருக்கறதுங்கிறதெல்லாம் நடக்காதது. ஆனா நம்பிக்கையானவனா தேவி ப்ரியாவிடம் பணி புரிந்து வந்தான். அதனாலேயே அவங்க வீட்டுலயே தங்க இடமும் கொடுத்திருந்தாங்க. கல்யாணம் முடிந்ததும், 'சீரியலோ சினிமாவோ கொஞ்ச நாளில் செட் ஆயிடும், அதன்பிறகு சென்னைக்குக் கூட்டிட்டுப் போறேன்' என மனைவி கிட்டச் சொல்லியிருக்கான். அதுக்குள்ள் இப்படி ஆகிடுச்சு.

muthu ganesh

நடந்த சம்பவமும் ரொம்ப கொடுமையானதா இருக்கு. ரோட்டை விட்டு தள்ளி நிப்பாட்டி ஸ்டெப்னி மாட்டிகிட்டிருந்தவங்க மேல வந்து மோதியிருக்காங்கன்னா அந்த வாகனத்தை ஓட்டியவங்க நிதானத்துல இல்லைனே தோணுது. என்ன சொல்றதுனே தெரியல. சிலர் பண்ணுகிற தவறுகளால் அவங்களூக்குச் சம்பந்தமில்லதாவங்க வாழ்க்கை முடிஞ்சு போகுது' என்கிறார் முத்து கணேஷுடன் பல வருடங்களாக நல்ல தொடர்பிலிருக்கும் திரைப்பட வசனகர்த்தா சுருளிப்பட்டி சிவாஜி.

Serial Update: நேரம் மாறிய சீரியல், அதிருப்தியில் ஆர்ட்டிஸ்டுகள்? டு `கூமாப்பட்டி' காட்டில் மழை!

அதகளமான `ஆடுகளம்'?பிரைம் டைடமில் ஒளிபரப்பாகி வந்த 'ஆடுகளம்' சீரியல், மாலை நேர ஸ்லாட்டுக்கு மாற்றப்பட்டதில் அதில் நடித்த ஆர்ட்டிஸ்டுகள் சிலர் அதிருப்தியடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.காயத்ரி ஜெயராமன், ... மேலும் பார்க்க

`கலைஞர் டிவி சீரியலில் வந்த 'Blast-u Blast-u' பஞ்ச்' - 'ருத்ரா' தொடரை முடிக்கும் முடிவில் சேனல்?

Blast-u Blast-u...ஜனநாயகன் படத்தில் வெளியான பாடலில் இடம் பிடித்திருந்த, Blast-u Blast-u... வரிகள் வைரல். தவெக கூட்டத்தில் கூட விஜய் இந்த வார்த்தைகளை பேசி இருப்பார். இப்போது, கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக... மேலும் பார்க்க