செய்திகள் :

போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? வழிகாட்டும் சைலேந்திர பாபு

post image

'UPSC/TNPSC குரூப் -1, 2 -தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து சென்னையில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது.

நீங்களும் ஆகலாம் IAS என்ற தலைப்பிலான இந்த இலவசப் பயிற்சி முகாம் வருகிற மார்ச் 8 ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடக்க இருக்கிறது. அதனுடன் ஒரு வருட இலவசப் பயிற்சிக்கான ஸ்காலர்ஷிப் தேர்வும் நடக்கிறது.

UPSC / TNPSC இலவசப் பயிற்சி முகாம்
UPSC / TNPSC இலவசப் பயிற்சி முகாம்

இந்த நிகழ்வில் டாக்டர். சி. சைலேந்திர பாபு, (ஐபிஎஸ் (ஓய்வு) தமிழ்நாடு முன்னாள் டிஜிபி/ காவல் துறை தலைவர்), டாக்டர். V. இராம் பிரசாத் மனோகர் (இ.ஆ.ப தலைவர், பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் நிர்வாக இயக்குநர், கர்நாடக மின்சார கழகம்) திரு. ஆதில் பெய்க் (சிவில் சர்வீஸஸ் தேர்வு பயிற்சியாளர் - King Makers IAS அகாடமி) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு போட்டித் தேர்வுகள் குறித்த ஆலோசனைகளை வழங்க உள்ளார்கள். இவர்களுடன் King Makers IAS அகாடமியின் இயக்குநர் சத்யஶ்ரீ பூமிநாதனும் ஊக்க உரை ஆற்றுகிறார்.

இந்த நிகழ்ச்சி குறித்து பேசிய டாக்டர். சி. சைலேந்திர பாபு, " "IAS,IPS,IFS இந்தப் பொறுப்புகள் நிறைய பேருக்கு கனவாக இருக்கிறது.

இந்த பதவிகளுக்கு வருவதற்கு நாம் என்ன படிக்கலாம்? எந்தக் கல்லூரியில் படிக்கலாம்? ஒரு பட்டப்படிப்பு முடிந்தப் பிறகு எந்த மாதிரி நம்மை தயார்படுத்திக் கொள்ளவது போன்ற எல்லா சந்தேகங்களுக்கும் தீர்வு காணக்கூடிய வகையில் ஆனந்த விகடனும், கிங்மேக்கர்ஸ் IAS அகாடமியும் இணைந்து நடத்தக்கூடிய நிகழ்ச்சிக்கு நீங்கள் வாருங்கள்.

உங்களுக்கு இருக்கக்கூடிய பல சந்தேகங்களை நான் தீர்த்து வைக்கிறேன். இன்றைக்கு இந்தியாவில் மாணவர்கள் பல்வேறு பதவிகளில் இருக்கிறார்கள். நிறைய பேர் வெளிநாடுகளில் தூதுவர்களாக இருக்கிறார்கள். அதேபோல IAS,IPS,IFS அதிகாரிகளாக நீங்களும் ஆக முடியும். வாருங்கள் விவாதிப்போம்" என்றார்.

UPSC / TNPSC
UPSC / TNPSC

ஆனந்த விகடன், King Makers IAS அகடாமி நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இதுபோன்ற இலவசப் பயிற்சி முகாமினைப் பல ஆண்டுகளாக நடத்தி வருவதன் மூலம் எண்ணற்ற போட்டித் தேர்வாளர்கள் பயனடைந்து வருகிறார்கள்.

இந்தப் பயிற்சி முகாமிற்கு முன்பதிவு செய்ய 044- 66802997 என்ற எண்ணிற்கு மிஸ்ட்கால் கொடுக்கவும். அப்படி இல்லையென்றால் இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்புகின்றவர்கள் கீழ்க்கண்ட விண்ணப்பத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.

+2 மாணவர்களே! - CUET தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் - முழு விவரம்!

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் உள்பட இந்தியாவில் உள்ள 56 மத்திய பல்கலைக்கழகங்கள், 40 மாநில பல்கலைக்கழகங்கள், இந்தியா முழுவதுமுள்ள பல தனியார், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்காக நடத்த... மேலும் பார்க்க

ISRO : 9ம் வகுப்பு மாணவர்களே... இஸ்ரோ உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது! - முழு விவரம்

உலகமே திரும்பிப் பார்த்து வியக்கும் அளவுக்கு ISRO (Indian Space Research Organisation) விண்ணில் பல சாதனைகளைப் புரிந்திருக்கிறது. பல நாடுகள் முயன்றும் இயலாமல் போன நிலவுப் பயணத்தையும் ISRO சாத்தியப்படுத... மேலும் பார்க்க

UPSC / TNPSC: 'மாணவர்கள் இந்த மூன்று விஷயங்களை முதலில் செய்ய வேண்டும்.!'- பயிற்சியாளர் ஆதில் பெய்க்

'UPSC/TNPSC குரூப் -1, 2 -தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து சென்னையில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது.'UP... மேலும் பார்க்க

CBSE: பிளஸ் டூ தேர்வில் திடீர் மாற்றங்கள்: கம்ப்யூட்டர் மூலம் `ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்' - இது சரியா?

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பிளஸ்டூ தேர்வுகள் தொடங்கி நடந்து வருகின்றன. இந்தியாவில் சுமார் 23,806 சிபிஎஸ்இ சீனியர் செகண்டரி பள்ளிகள் உள்ளன. 18 லட்சத்து 49,000 மாணவர்கள் பிளஸ்டூ தேர்வை எழுதிக்கொண்டிருக்க... மேலும் பார்க்க

UPSC / TNPSC: சென்னையில் இலவசப் பயிற்சி முகாம் - அனுமதி இலவசம்!

'UPSC/TNPSC குரூப் -1, 2 -தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து சென்னையில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது.'UP... மேலும் பார்க்க