செய்திகள் :

இளம் வேகப்பந்து வீச்சாளர்களை பட்டை தீட்டும் முயற்சி - ஜாகீர் கானை அழைக்கும் பிசிசிஐ?

post image

நாட்டின் அடுத்த தலைமுறை வேகப்பந்து வீச்சாளர்களைப் பட்டை தீட்ட ஜாகீர் கானை இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர் கான், மார்ச் முதல் வாரத்தில் பெங்களூருவில் உள்ள சிறப்புத் திறன் மேம்பாட்டு மையத்தில் (Centre of Excellence — CoE) சிறப்புப் பயிற்சி முகாம்களை நடத்துவார் என்று கூறப்படுகிறது.

சிறப்புத் திறன் மேம்பாட்டு மையத்தில் பந்துவீச்சு பயிற்சியாளராக பணியாற்றிய ட்ராய் கூலியின் (Troy Cooley) நான்கு ஆண்டு கால பணி டிசம்பரில் முடிவடைந்தது. அதையடுத்து CoE வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் இல்லாமல் இருந்தது. பிசிசிஐ பிப்ரவரி 9 அன்று இந்தப் பதவிக்கான விண்ணப்பங்களை வரவேற்றது. கூலிக்கு மாற்றாக யாரை நியமிப்பது என்பதை வாரியம் இன்னும் அறிவிக்கவில்லை.

Zaheer Khan

மாநில கிரிக்கெட் சங்கங்களிலிருந்து வேகப்பந்து வீச்சாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஜாகீரின் வழிகாட்டுதலின் கீழ் பெங்களூருவில் உள்ள CoE-இல் நடைபெறும் சிறப்பு வேகப்பந்து வீச்சு முகாமில் பங்கேற்பார்கள். CoE-இன் கிரிக்கெட் தலைவர் வி.வி.எஸ். லக்ஷ்மன் இந்த முயற்சியில் மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

"ஜாகீர் பயிற்சியாளர் பொறுப்புகளை ஏற்பதில் மிகுந்த ஆர்வமாக உள்ளார். அவர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். மேலும் அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்குத் தன்னால் உதவ முடியும் என்று நம்புகிறார். அவரது அந்தஸ்துள்ள ஒரு வேகப்பந்து வீச்சாளர் பிசிசிஐ திட்டங்களில் ஆர்வம் காட்டுவது நல்ல அறிகுறியே. இருப்பினும், குடும்பத்தை விட்டு அதிக நேரம் தங்கியிருக்க வேண்டியிருக்கும் என்பதால், CoE-இல் அவர் முழுநேரப் பணியை ஏற்க விரும்புகிறாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியாவின் வேகப்பந்து வீச்சில் கடந்த மூன்று ஆண்டுகளாக புதிய வீரர்களை கண்டெடுப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்ற கருத்து நிலவுகிறது. ஒவ்வொரு வடிவத்திலும் வேகப்பந்து வீச்சாளர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட் வடிவம், தேர்வுக் குழுவினருக்கும் இந்திய அணி நிர்வாகத்திற்கும் கவலை அளிக்கும் விஷயமாக மாறியுள்ளது. எனவே, BCCI அடுத்த தலைமுறை வேகப்பந்து வீச்சாளர்களை கண்டறிவதில் மும்முரம் காட்டி வருகிறது.

IND vs ZIM : “தென்னாப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ் மேட்ச்-ஐ பாத்தீங்களா?” – ஹர்திக் பாண்ட்யா பதில்

சென்னை M. A. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற T20 உலகக் கோப்பை, இந்தியா vs ஜிம்பாப்வே போட்டியில், 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.இதில் முக்கிய பங்களிப்பாக 50 (23) ரன்கள் எட... மேலும் பார்க்க

Rinku Singh: 'ஏழ்மையை வென்று மகனை கிரிக்கெட்டராக்கிய தந்தை' - ரிங்குவின் தந்தை புற்றுநோயால் மரணம்

இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் ஏழ்மையான குடும்பத்தில் வளர்ந்தவர். இவரின் தந்தை கான்சந்த் சிங் LPG சிலிண்டர் டெலிவரி செய்தவர். கடின உழைப்பால் உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து உயர்ந்த ரிங்கு சிங், 20... மேலும் பார்க்க

SL vs NZ: "எதிர்மறையான சூழலை இலங்கை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்"- கேப்டன் தசுன் ஷனகா வேண்டுகோள்

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்று ( பிப். 25) இலங்கை அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் இலங்கை அணி அரையிறு... மேலும் பார்க்க

WI vs ZIM : வெஸ்ட் இண்டீஸின் மெகா வெற்றி, ஜிம்பாப்வேக்கு மட்டும் அல்ல, இந்தியாவுக்கும் சிக்கல்தான்!

நேற்று நடைபெற்ற சூப்பர் 8 போட்டி, இது ஜிம்பாப்வே அணிக்கு மட்டுமல்ல, இந்திய அணிக்கும் தலைவலியை உருவாக்கிய ஒரு போட்டி எனலாம்.சூப்பர் 8 சுற்றில் நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டிஸ் – ஜிம்பாப்வே அணிகள் இடையிலா... மேலும் பார்க்க

IND vs SA : ``அவர் உண்மையான ‘டீம் மேன்’; எங்கள் வெற்றிக்கு இதுதான் காரணம்!" - கேப்டன் மார்க்ரம்

T20 தொடரில் அசைக்க முடியாத அணியாக இருந்த இந்தியாவை சூப்பர் 8 சுற்றில் 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, வலிமையான அணியாக திகழ்கிறது தென்னாப்பிரிக்கா.இந்த வெற்றி குறித்து தென்னாப்பிரிக்க அணியின் கேப்ட... மேலும் பார்க்க

முன்னாள் மனைவிக்கு 4 கோடி ரூபாய் காரை பரிசளித்த ஹர்திக்; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

கடந்த 2020-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும், நடாஷா ஸ்டான்கோவிக்கும் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ... மேலும் பார்க்க