செய்திகள் :

தொகுதிப் பங்கீடு: "எங்கள் வலிமைக்கு ஏற்ப அதிகாரப் பகிர்வு அமைய வேண்டும்" - திருமாவளவன் சொல்வது என்ன?

post image

அண்ணா அறிவாலயத்தில் இன்று (மார்ச் 2) திமுக தொகுதிப் பங்கீடு குழுவுடன் தொல். திருமாவளவன் தலைமையிலான வி.சி.க பேச்சுவார்த்தை நடத்தியது.

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திருமாவளவன், "திமுக குழுவினரோடு, விசிக சார்பில் நானும் கட்சியின் பொதுச்செயலாளர்களான சிந்தனைச் செல்வன், ரவிக்குமார் ஆகிய மூவரும் பேச்சுவார்த்தையில் பங்குபெற்றோம்.

2026 சட்டமன்றத் தேர்தல் வழக்கமான சராசரியான பொதுத்தேர்தல் அல்ல.

திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு
திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு

இந்தத் தேர்தலில் வலதுசாரி சக்திகளைக் காலுன்ற விடாமல் தடுக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வோடும் மதச்சார்பற்றக் கூட்டணியை நூறு விழுக்காடு உறுதிப்படுத்த வேண்டும் என்கிற அக்கறையோடும் இந்தக் கூட்டணியில் விசிக ஒரு அங்கமாக இருக்கிறது என்ற உரிமையோடும் எங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டோம். நாங்கள் திமுக-வோடு பேரம் பேசுகின்ற கட்சியாக இல்லை.

திமுக தலைமையிலான கூட்டணியை வெற்றிபெறச் செய்ய வேண்டும். அது தமிழ்நாட்டிற்கு வெற்றி.

தமிழக மக்களுக்கான வெற்றி. சமூக நீதிக்கான வெற்றி என்கிற புரிதலோடு எங்களுக்கான அதிகாரப் பகிர்வு குறித்து கருத்துகளை நாங்கள் மனம் திறந்து பகிர்ந்துகொண்டோம்.

எங்களுக்கான அதிகாரப் பகிர்வு என்பது எங்களுடைய பங்களிப்பிற்கு ஏற்ப அமைய வேண்டும் என்று தெரியப்படுத்தினோம்.

திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு
திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு

அதிகாரப் பகிர்வு என தொகுதிப் பகிர்வைத்தான் சொல்கிறோம். திமுக தரப்பில் எங்கள் கருத்துகளைக் கேட்டுக்கொண்டார்கள்.

தலைவரோடு நாங்கள் விவாதித்த பின்னர் மீண்டும் நாங்கள் அழைப்பு விடுப்போம் என்று கூறியிருக்கிறார்கள்.

இன்று நடந்த இந்தப் பேச்சுவார்த்தை சுமூகமான முறையில் நடந்திருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார்.

மதுரை தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநாடு: கைகோத்த கூட்டணிக் கட்சித் தலைவர்கள் | Photo Album

NDA கூட்டணி மாநாடுNDA கூட்டணி மாநாடுNDA கூட்டணி மாநாடுNDA கூட்டணி மாநாடுNDA கூட்டணி மாநாடுNDA கூட்டணி மாநாடுNDA கூட்டணி மாநாடுNDA கூட்டணி மாநாடுNDA கூட்டணி மாநாடுNDA கூட்டணி மாநாடுNDA கூட்டணி மாநாடுND... மேலும் பார்க்க

ஈரானுக்கும், அமெரிக்கா, இஸ்ரேலுக்கும் தானே போர்... பிறகு துபாய், கத்தார், குவைத் மீது தாக்குதல் ஏன்?

கடந்த சனிக்கிழமையில் (பிப்ரவரி 28) இருந்து ஈரானைத் தாக்கி வருகின்றன அமெரிக்காவும், இஸ்ரேலும். ஆனால், ஈரானைத் தாண்டி துபாய், கத்தார், குவைத், லெபனான் போன்ற நாடுகளிலும் தாக்குதல் நடந்து வருகின்றன. எந்தெ... மேலும் பார்க்க

ஸ்டாலின்: முதல் தேர்தலிலே தோல்வி... தோற்ற தொகுதியிலே வென்றது எப்படி? | முதல் களம் 08

(`முதல் களம்’ - தமிழக தேர்தல் வரலாற்றில் பல்வேறு தலைவர்கள், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அப்படியான தலைவர்களின் முதல் தேர்தலும் அதனை சுற்றி நடந்த முக்கிய சம்பவங்களும் சுவாரஸ்ய தகவல்களின்... மேலும் பார்க்க

``காங்கிரஸ், திமுகவை 'கோ-பேக்' சொல்லி திருப்பி அனுப்புங்கள்!" – புதுச்சேரியில் சீறிய பிரதமர் மோடி

புதுச்சேரிக்கு நேற்று வருகை தந்த பிரதமர் மோடி ரூ.2,714 கோடிக்கு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது, ``சகோதர சகோதரிகளே… புதுச்சேரியில் உங்கள் முன் நிற்பது பெருமையாக இருக்கின்றது. இது... மேலும் பார்க்க