செய்திகள் :

``சஞ்சு சாம்சனின் 97 ரன்களுக்கு இணையானது, துபே அடித்த அந்த இரண்டு பவுண்டரிகளும்!" - கோச் கம்பீர்

post image

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை 2026 சூப்பர் 8 போட்டியில் இந்தியா வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்ற பிறகு, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், ``சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்குக் காரணமாக இருந்தார். இருப்பினும், ஆட்டத்தின் 19-வது ஓவரில் சிவம் துபே அடித்த இரண்டு முக்கியமான பவுண்டரிகள் மிகவும் முக்கியமானவை. என்னைப் பொறுத்தவரை, சிவம் துபே அடித்த அந்த இரண்டு பவுண்டரிகளும் சஞ்சுவின் 97 ரன்களுக்கு இணையானவை. அவர் அந்த பவுண்டரிகளை அடிக்கவில்லை என்றால், சஞ்சுவின் 97 ரன்களைப் பற்றி யாரும் இப்போது பேசிக்கொண்டிருக்க மாட்டார்கள்

சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்

பல ஆண்டுகளாக நாம் குறிப்பிட்ட சில வீரர்களின் பங்களிப்பைப் பற்றி மட்டுமே பேசி வருகிறோம். ஆனால் இது ஒரு கூட்டு முயற்சி சார்ந்த விளையாட்டு. பெரிய ரன்கள் எடுப்பவர்கள் தலைப்புச் செய்திகளில் இடம்பெறுவார்கள். ஆனால் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் சிறிய பங்களிப்புகளே மிக முக்கியமானவை. எனது பயிற்சி காலம் முழுவதும் இதே அணுகுமுறை தொடரும்." என்றார்,

 சிவம் துபே
சிவம் துபே

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும் கம்பீரின் கருத்தையே வழிமொழிந்தார் :

``கடைசி ஓவர்களில் 8-9 ரன்கள் எடுப்பது சில நேரங்களில் கடினமாகிவிடும், அந்த அழுத்தத்தைக் குறைத்தது சிவம் துபே அடித்த அந்த இரண்டு பவுண்டரிகள்தான் இன்னும் இலக்கை சுலபமாக்கியது. " என்று அவர் பாராட்டினார்.

சஞ்சு சாம்சனின் சிறப்பான ஆட்டத்தை அங்கீகரித்த அதே வேளையில், கிரிக்கெட் என்பது தனிநபர் சாதனை அல்ல, அது ஒரு கூட்டு முயற்சி என்பதை கம்பீர் மற்றும் பும்ரா இந்த பேட்டியின் மூலம் வலியுறுத்தியுள்ளனர்.

மகத்தான சாதனைகள்; ஸ்டார்க் கண்ணீர் - கிரிக்கெட் என்றும் உங்களை நினைவில் வைத்திருக்கும் அலிஷா ஹீலி!

“இன்று நம்முடன் ஒரு அறிமுக வீராங்கனை உள்ளார். இன்றைய நாளை அவருக்கே உரியதாக்குவோம். அது நாளைய தலைமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும்” என்று இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் பேசியிருந்த... மேலும் பார்க்க

T20 WC: வீரர்களுக்கு ரூ.50 லட்சம் அபராதம்; பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி முடிவு?

டி20 உலகக்கோப்பைத் தொடரில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறத் தவறிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அபராதம் விதித்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. ஐசிசி டி20 உலகக்... மேலும் பார்க்க

இளம் வேகப்பந்து வீச்சாளர்களை பட்டை தீட்டும் முயற்சி - ஜாகீர் கானை அழைக்கும் பிசிசிஐ?

நாட்டின் அடுத்த தலைமுறை வேகப்பந்து வீச்சாளர்களைப் பட்டை தீட்ட ஜாகீர் கானை இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர் கான்,... மேலும் பார்க்க

IND vs ZIM : “தென்னாப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ் மேட்ச்-ஐ பாத்தீங்களா?” – ஹர்திக் பாண்ட்யா பதில்

சென்னை M. A. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற T20 உலகக் கோப்பை, இந்தியா vs ஜிம்பாப்வே போட்டியில், 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.இதில் முக்கிய பங்களிப்பாக 50 (23) ரன்கள் எட... மேலும் பார்க்க

Rinku Singh: 'ஏழ்மையை வென்று மகனை கிரிக்கெட்டராக்கிய தந்தை' - ரிங்குவின் தந்தை புற்றுநோயால் மரணம்

இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் ஏழ்மையான குடும்பத்தில் வளர்ந்தவர். இவரின் தந்தை கான்சந்த் சிங் LPG சிலிண்டர் டெலிவரி செய்தவர். கடின உழைப்பால் உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து உயர்ந்த ரிங்கு சிங், 20... மேலும் பார்க்க

SL vs NZ: "எதிர்மறையான சூழலை இலங்கை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்"- கேப்டன் தசுன் ஷனகா வேண்டுகோள்

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்று ( பிப். 25) இலங்கை அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் இலங்கை அணி அரையிறு... மேலும் பார்க்க