செய்திகள் :

Ajith Pawar: `அஜித் பவார் மரணம்; உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை வேண்டும்' - மம்தா பானர்ஜி

post image

மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) தலைவரும், மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜித் பவார் இன்று (புதன்கிழமை) காலை மும்பையிலிருந்து பாராமதிக்குச் சென்ற நிலையில், பாராமதி விமான நிலைய ஓடுதளம் அருகில் விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த அஜித் பவார் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர். அஜித் பவார் மரணத்துக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

இந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் விபத்தில் காலமான செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது.

அஜித் பவார்
அஜித் பவார்

இந்தத் துயரச் செய்தி ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களுக்கே பாதுகாப்பு ஏற்பாடுகள் கேள்விக்குறியாக இருப்பது கவலையளிக்கிறது.

குறிப்பாக, ஆளும் கட்சியில் இருந்த ஒருவருக்கே இந்த நிலை என்றால், மற்றவர்களின் நிலை என்ன என்ற அச்சம் எழுகிறது. அஜித் பவார் பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகி, மீண்டும் தனது தாய் கட்சிக்கே திரும்பப் போகிறார் என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது. இதனால், இந்தச் விபத்தில் ஐயம் எழுகிறது.

எனவே, இந்த விபத்து குறித்து மற்ற அரசு விசாரணை அமைப்புகளை விட, உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் முறையான மற்றும் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் உண்மை வெளிவரும். எங்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் மீது மட்டுமே நம்பிக்கை உள்ளது. மற்ற விசாரணை அமைப்புகள் தங்களின் சுதந்திரத்தை இழந்துவிட்டன. எனவே, வேறு எந்த அமைப்பின் மீதும் இல்லை." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மம்தா பானர்ஜி மட்டுமில்லாமல், காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய், ஆர்.ஜே.டி தலைவர் லாலு பிரசாத் யாதவ், வஞ்சித் பகுஜன் அகாடி தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் உள்ளிட்ட பலரும் முறையான மற்றும் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

`அஜித் அரசியலுக்கு வந்தாலும் கூட்டம் வரும்' - சரத்குமார்

தூத்துக்குடியில் நடிகரும், பா.ஜ.க நிர்வாகியமான சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”ஊழலுக்கு எதிராக விஜய் எந்த கட்சியை சேர்க்கப் போகிறார்? ஊழலுக்கு எதிராகத்தான் போட்டியிடுகிறோம்... மேலும் பார்க்க

சௌந்தர்யா முதல் அஜித் பவார் வரை - ஹெலிகாப்டர், விமான விபத்தில் உயிரிழந்த முக்கிய பிரபலங்கள்

மகாராஷ்டிரா துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் இன்று (ஜன..28) காலை நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார்.மகாராஷ்டிராவில் வரும் 5ம் தேதி நடக்க இருக்கும் ஜில்லா பரிஷத் தேர்தலுக்குப் ... மேலும் பார்க்க

திருவாரூர்: சிதிலமடைந்த குடிநீர் தொட்டி, அங்கன்வாடி கட்டடம்; அலட்சிய அதிகாரிகள்.. அச்சத்தில் மக்கள்!

திருவாரூர் மாவட்டம், கூடுர் ஊராட்சிக்கு உட்பட்ட முசக்குளம் கிராமத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக முறையான சாலை வசதி, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்... மேலும் பார்க்க

4000 திருக்கோயில் குடமுழுக்குகள்: `திராவிட மாடல் = எல்லாருக்கும் எல்லாம்' - ஸ்டாலின் நெகிழ்ச்சி!

ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடைபெறாத கோயில்களைக் கண்டறிந்து குடமுழுக்கு நடத்தும்பணியை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக 400 ஆண்டுகளுக்கு பிறகு கன்னியாகுமரி ம... மேலும் பார்க்க

``என்னுடைய ரத்தம் விஜய்க்கும் பயம் கிடையாது; தடைகளை எதிர்கொள்வார்!” - எஸ்.ஏ.சந்திரசேகரன்

திருவாரூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி பிரமுகர் செந்தில்பாண்டியன் இல்லத் திருமணத்தில் தவெக தலைவர் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ``60 ஆண்டுகள... மேலும் பார்க்க