மும்பை கட்டடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியது ஏன்? - பாலிவுட் நடிகர் கமால் கானிட...
காதலனை வரச் சொன்ன காதலி; சிக்கவைத்த உறவுக்கார பெண்; 40 நிமிடங்கள் டிரங்க் பெட்டியில்! நடந்தது என்ன?
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் வசிக்கும் இளம் பெண் ஒருவர் அதே ஊரைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். அந்த வாலிபர் வீடு அப்பெண்ணின் வீட்டில் இருந்து 7 வீடு தள்ளி இருக்கிறது. அப்பெண்ணின் பெற்றோர் காலையில் வேலைக்கு புறப்பட்டு சென்ற பிறகு வீட்டில் அப்பெண் மட்டும் தனியாக இருந்தார்.
உடனே தனது காதலனுக்கு போன்செய்து வீட்டில் யாரும் இல்லை என்று கூறி உடனே தனது வீட்டிற்கு வரும்படி கேட்டுக்கொண்டார். அந்த வாலிபரும் உடனே காதலி வீட்டிற்கு வந்தார். ஆனால் அந்த வாலிபர் காதலி வீட்டிற்குள் செல்வதை இளம்பெண்ணின் வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் உறவுக்கார பெண் ஒருவர் பார்த்துவிட்டார்.
இதனால் வீட்டிற்குள் யார் சென்றது என்பதை தெரிந்து கொள்வதற்காக அப்பெண், இளம்பெண் வீட்டிற்கு வந்தார்.வீட்டுக்கதவை அப்பெண் தட்டியபோது இளம்பெண் வந்து கதவை திறந்தார். உடனே வீட்டிற்குள் சென்று அப்பெண் சோதித்து பார்த்தார்.

ஆனால் வீட்டில் யாரும் இல்லை. ஆனால் வீட்டிற்குள் ஒரு ஆண் நுழைவதை நான் பார்த்தேன் என்று அப்பெண் தெரிவித்தார். வீட்டிற்குள் யாரும் இல்லை. உள்ளே நுழைந்தவர் கரைந்தா போய்விட்டார் என்று இளம் பெண் கூறியுள்ளர். அப்பெண்ணிற்கு தனது சந்தேகம் தீரவில்லை. வீட்டின் மெயின் கதவை பூட்டிவிட்டு இளம் பெண்ணின் தாயார் மற்றும் சகோதரனுக்கு தகவல் கொடுத்து வரவைத்தார். அவர்கள் வந்து பீரோ, படுக்கை, மாடி என அனைத்து இடங்களிலும் சோதித்து பார்த்தனர். ஆனால் எங்கேயும் வீட்டிற்குள் நுழைந்த நபரை காணவில்லை.
அப்போது வீட்டில் இருந்த இரும்பு டிரங்க் பெட்டியில் இருந்து சத்தம் வந்தது. உடனே அந்த பெட்டி சாவியை கொடுக்கும்படி அப்பெண்ணிடம் கேட்டனர். ஆனால் அந்த பெட்டியில் தனது உடைகள் மட்டும் இருப்பதாக கூறி சாவியை கொடுக்க மறுத்தார். இதையடுத்து இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்தனர். அவர்கள் வந்தவுடன் வேறு வழியின்றி இளம் பெண் டிரங்க் பெட்டியை திறந்தார். உள்ளே அவரது காதலன் மூச்சுத்திணறி படி உள்ளே இருந்து வெளியில் வந்தார்.
40 நிமிடத்திற்கும் மேல் அவர் உள்ளே இருந்தார். மேலும் சிறிது நேரம் இருந்திருந்தால் மூச்சுத் திணறி இறந்திருப்பார். அதிர்ஷ்டவசமாக அதற்குள் பெட்டியை திறந்துவிட்டனர். அவர் டிரங்க் பெட்டிக்குள் இருந்து வந்ததை பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். போலீஸார் இதனை கண்டு சிரித்தனர். உறவினர்கள் அந்த வாலிபரை பிடித்து அடித்து உதைக்க முயன்றனர். ஆனால் போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்திவிட்டனர். இரண்டு பேரையும் அழைத்து சென்று சிறையில் போடுங்கள் என்று அப்பெண்ணின் தாயார் போலீஸாரிடம் கேட்டுக்கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.




















