செய்திகள் :

தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனையில் கமலின் ம.நீ.ம! - நிர்வாகக்குழு, செயற்குழு கூட்டத்தில் முடிவு?

post image

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது.

அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

இன்னும் அங்கீகாரம் பெறாத சில கட்சிகள், மாநிலம் முழுவதும் பொதுச் சின்னம் கேட்டு தேர்தல் ஆணையதித்திடம் கோரிக்கை விடுத்த நிலையில் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டு வருகின்றன.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

அந்தவகையில் விஜய்யின் தவெகவிற்கு 'விசில்' சின்னம் ஒதுக்கப்பட்டது.

அதேபோல கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் 'டார்ச் லைட்' சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

கடந்த தேர்தல்களில் திமுக கூட்டணியில் இருந்த சில கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டன.

ம.நீ.ம.வுக்கும் திமுக சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால் 'டார்ச் லைட்' சின்னத்தில் போட்டியிட கமல்ஹாசன் உறுதியாக இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் அடுத்தகட்ட தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்க அக்கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம், ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று (ஜன.24) கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெறுகிறது.

ஸ்டாலின், கமல்ஹாசன்
ஸ்டாலின், கமல்ஹாசன்

தற்போது திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்யம், எதிர்வரும் தேர்தலில் எத்தனைத் தொகுதிகளில் போட்டியிடுவது, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை எப்போது தொடங்குவது மற்றும் களப்பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

குறிப்பாக, 'டார்ச் லைட்' சின்னத்திலேயே தங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து சில முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

நின்றுபோன திமுக - அதிமுக இணைப்பு; `நேரு மகளே!' - அழைத்த கருணாநிதி | அரசியல் ஆடுபுலி 02

1980 தேர்தல்அரசியல் ஆடுபுலி 02நண்பர்களாக இருந்த கலைஞர் கருணாநிதியும், எம்ஜிஆரும் அரசியலில் எதிரும் புதிருமாக மாறியதால், இன்று வரை அதிமுக – திமுக என்ற அரசியலே தமிழகத்தில் நிலைத்திருக்கிறது.திரைத்துறையி... மேலும் பார்க்க

"சபரிமலையில் தங்கம் கொள்ளையடித்தவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்" - பிரதமர் மோடி கேரண்டி

பிரதமர் நரேந்திர மோடி நேற்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அம்ருத் பாரத் ரயில் சேவையைத் தொடங்கிவைத்தார். பின்னர் திருவனந்தபுரம் புத்தரிகண்ட மைதானத்தில் நடைபெற்ற பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டா... மேலும் பார்க்க

"இது எங்கள் குடும்பப் பிரச்னை, ஒரு தாய் மக்களின் பிரச்னை" - இபிஎஸ் குறித்து டிடிவி தினகரன்

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம் நேற்று (ஜன.23) மதுராந்தகத்தில் நடைபெற்றது.அதிமுக, பாஜகவுடன் அமமுக, பாமக, தமாகா, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயகக் கட்சி, புரட்... மேலும் பார்க்க