புதிய உச்சம்! - ரூ.1.25 லட்சத்தின் அருகில் தங்கம் விலை - இப்போது தங்கம் விலை என்...
`ஆகாயத்தின் உயரத்துக்கு கனவு காண கற்பித்த மங்கை' - கேரளாவை சுற்றிவரும் சுனிதா வில்லியம்ஸ்!
விண்வெளி வரலாற்றில் முத்திரையைப் பதித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், இளம் தலைமுறையினருக்கு நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார். விண்வெளி மங்கை சுனிதா வில்லியம்ஸ் தனது உறவினர்களுடன் கேரள மாநிலம் கோழிக்கோட்டுக்கு கடந்த சனிக்கிழமை சென்றார்.
கோழிக்கோட்டின் முக்கிய இடங்களை சுற்றிப்பார்க்க ஆசைப்பட்ட அவர் சுதந்திரமாக சென்று வருவதற்காக போலீஸ் பாதுகாப்பு வேண்டாம் எனக்கூறி புறப்பட்டார். கடலூண்டி கம்யூனிட்டி ரிசர்வில் வள்ளத்தில் பயணம் மேற்கொண்டார்.
பெரோக் காமன்வெல்த் டைல் ஃபேக்டரியை பார்வையிட்ட அவர் பின்னர் கோழிக்கோட்டின் பழமையை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ள குற்றிச்சிற மிஸ்கால் பள்ளிவாசலுக்குச் சென்றார். பின்னர் குஜராத்தி தெருவில் உள்ள குதம் ஆர்ட் கஃபே மற்றும் பாரகன் உணவகத்தில் உள்ள உணவு வகைகளை ரசித்து சாப்பிட்டுவிட்டு, அங்கிருந்து புறப்பட்டார்.

இதற்கிடையே சுனிதா வில்லியம்ஸ் கோழிக்கோட்டில் சேமியா ஃபலூடா ரசித்து சாப்பிடும் வீடியோ ஒன்று இன்ஸ்டா கிராமில் வைரலானது. ஃபலூடா நேஷன் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோ நான்கு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. "நாங்கள் ஒருபோதும் மறக்க முடியாத தருணம்" என்ற தலைப்புடன் அந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.

அந்த வீடியோவுக்கு கீழே உணர்வுப்பூர்வமாக கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். அதில் பலரும் சுனிதா வில்லியம்ஸைப் பாராட்டி கருத்துக்களை தெரிவித்துள்ளனர். 'ஆகாயத்தின் உயரத்துக்கு கனவுகாண கற்பித்த மங்கை' எனவும். 'எவ்வளவு ஒரு எளிமையான, அடக்கமான, தன்னம்பிக்கை மிக்க பெண்மணி' எனவும். நாம் அவருக்கு மிகுந்த ஆதரவை வழங்க வேண்டும் எனவும் பல்வேறு கமெண்டுகள் வந்துள்ளன.














