செய்திகள் :

மைதானத்தில் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட ஜப்பானிய கைப்பந்து நட்சத்திரம்! - வைரல் வீடியோ பின்னணி

post image

விளையாட்டு உலகில் வெற்றிகளையும் பதக்கங்களையும் போல, ஒரு வீரரின் நற்பண்புகளும் அவரை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும். அந்த வகையில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நட்சத்திரப் கைபந்து விளையாட்டு வீரர் யூஜி நிஷிடா, விளையாட்டுக் களத்தில் ஒரு பெண்ணிடம் காட்டிய அதீத மரியாதையும், அவர் மன்னிப்பு கேட்ட விதமும் தற்போது உலக அளவில் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

ஜப்பான் நாட்டின் கோபே நகரில் நடைபெற்ற ஒரு சிறப்புக் கண்காட்சிப் போட்டியின் போது இந்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியது.

இந்தப் போட்டியின் ஒரு பகுதியாக சர்வீஸ் அடிக்கும் பயிற்சியில் வீரர்கள் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். இதில் பங்கேற்ற யூஜி நிஷிடா, தனது முழு வலிமையையும் திரட்டிப் பந்தை அடித்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக, மிக வேகமாகச் சென்ற அந்தப் பந்து திசைமாறி அங்கிருந்த ஒரு பெண் நடுவரின் முதுகில் பலமாகத் தாக்கியது.

பந்து தாக்கியதைக் கண்ட நிஷிடா ஒரு நொடி அதிர்ச்சியில் உறைந்தார். அடுத்த கணமே, எவ்விதத் தயக்கமுமின்றி களத்தின் தரைப்பகுதியில் சறுக்கிக் கொண்டே அந்தப் பெண்மணியை நோக்கி ஓடினார். அவர் அருகில் சென்றதும் மண்டியிட்டு, மீண்டும் மீண்டும் தலைவணங்கி மன்னிப்பைக் கோரினார். அந்தப் பெண்மணியும் அவரது பெருந்தன்மையைக் கண்டு புன்னகையுடன் மன்னிப்பை ஏற்றுக்கொண்டார்.

"தவறு செய்வது மனித இயல்பு, ஆனால் அதை உணர்ந்து மன்னிப்பு கோருவது மிக உயர்ந்த குணம்" என இணையவாசிகள் நிஷிடாவைக் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக ஜப்பானிய கலாச்சாரத்தின் அங்கமான பிறரை மதிக்கும் பண்பை இவர் மிகச் சரியாகப் பிரதிபலிப்பதாகப் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்த நெகிழ்ச்சியான தருணத்திக்குப் பிறகு தனது ஆட்டத்தைத் தொடர்ந்த நிஷிடா, தனது அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ஆட்டத்தின் இறுதியில் அவருக்குச் சிறந்த வீரருக்கான விருதும் வழங்கப்பட்டது. ஒரு சிறந்த விளையாட்டு வீரராகத் தனது திறமையை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், களத்தில் ஒரு சிறந்த மனிதராகவும் யூஜி நிஷிடா பலரது இதயங்களை வென்றுள்ளார்

`இந்திய சட்டத்தை பின்பற்றாவிடில் இங்கிருந்து வெளியேறுங்கள்' - வாட்ஸ்அப்புக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

அமெரிக்காவின் மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப் நிர்வாகம் தனக்கென தனியுரிமைக் கொள்கையை வகுத்துள்ளது. இக்கொள்கையின் அடிப்படையில் பயனாளிகளின் தகவல்களை விளம்பர நிறுவனங்களுக்கு வாட்ஸ்அப் நிர்வாகம... மேலும் பார்க்க

Rajinikanth : 'தூரமா நின்னு கைக்கொடுப்பாருன்னு நினைச்சேன், ஆனா...' - நெகிழும் பத்மா!

தூய்மைப் பணியின் போது கண்டெடுத்த நகைகளை காவல்துறையிடம் ஒப்படைத்து பாராட்டுகளைப் பெற்ற தூய்மைப் பணியாளரை பத்மா நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் அழைத்துப் பேசி பரிசு வழங்கி கௌரவித்திருக்கிறார்.குடும்பத்த... மேலும் பார்க்க

"அடுத்தவங்க சம்பாத்தியத்த வெச்சு நான் என்னப் பண்ணப்போறேன்" - `மிளிரும்' தூய்மைப் பணியாளர் பத்மா

சென்னையைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்பத்மா. ஜனவரி 11-ம் தேதி வண்டிக்காரன் சாலையில் குப்பை சேகரித்துக்கொண்டிருந்தபோது 45 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் அடங்கிய பை ஒன்றைக் கண்டெடுத்தார். அடுத்த ஒரு மணி நே... மேலும் பார்க்க

அக்ஷயம் 365 திட்டத்திற்காக ₹10 லட்சம் நிதி - வழங்கினார் ரமேஷ் ஸ்ரீநிவாசன், CEO, Agilysys Inc.,USA

'அக்ஷயம் 365' என்பது 'MUDRA OOH' நிறுவனமும், சென்னை டவர்ஸ் ரோட்டரி கிளப்பும் இணைந்து செய்யும் ஒரு சிறிய முயற்சி ஆகும். இதன் முக்கிய நோக்கம் ஓர் உணவு மையம் தொடங்கி அங்கு அடுத்த 365 நாட்களுக்கும் தேவை இ... மேலும் பார்க்க

மோமோ சாப்பிட ரூ.85 லட்சம் மதிப்பிலான நகைகள் கொடுத்த சிறுவன்; அதிர்ந்த பெற்றோர்... என்ன நடந்தது?

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள கோயிலில் பூசாரியாக இருப்பவர் விம்லேஷ் மிஸ்ரா. இவர் அங்குள்ள தியோரியா நகரில் வசித்து வந்தார். இவருக்கு ஏழாம் வகுப்பு படிக்கும் மகன் ஒருவன் இருக்கிறார். அவருக்கு ம... மேலும் பார்க்க