Tamilnadu State Awards: திருத்தப்பட்ட விருது பட்டியல் - 'சுந்தரி' சீரியலுக்கான அ...
இன்னும் ஒரே ஒரு மாதம் தான், 'வேற லெவல்' ஆகப்போகும் இந்திய ரூபாய் - அமெரிக்க வங்கி தகவல்!
சமீப காலங்களில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.92 வரை சென்றது.
இது முதலீட்டாளர்களுக்கும், இறக்குமதியாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சி.
காரணம்...
இந்திய ரூபாய் மதிப்பு பலவீனமாகும்போது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து வெளியேறுவார்கள். இது சந்தையை சற்று இறங்குமுகத்தில் தள்ளும்.
கடந்த சில மாதங்களாகவே, இதை நமது சந்தையில் கண்டு வந்தோம்.
அமெரிக்க டாலரில் தான் உலக அளவில் வர்த்தகம் நடக்கும் என்பது அனைவரும் அறிந்தது.
இறக்குமதியாளர்களை எடுத்துக்கொண்டால், அவர்கள் ஒவ்வொரு பொருளை இறக்குமதி செய்யும்போதும், அமெரிக்க டாலர் கொடுத்துத் தான் அவற்றை வாங்குவார்கள்.
அப்போது இந்திய ரூபாய் மதிப்பு பலவீனம் அடைந்திருந்தால், அவர்கள் அதிக ரூபாயைக் கொடுத்து அமெரிக்க டாலர்களை வாங்குவார்கள். அந்த டாலரை வைத்து வர்த்தகம் செய்வார்கள்.
இது அவர்களது வருமானத்தைக் குறைக்கும் தானே?
ஏற்றுமதியாளர்களுக்கு 'ப்ளஸ்'
ஆனால், இந்த ரூபாய் மதிப்பு பலவீனம் ஏற்றுமதியாளர்களுக்கு நல்ல ப்ளஸ். இவர்கள் ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு அமெரிக்க டாலரில் பேமென்டைப் பெறுவார்கள்.
அவர்கள் அமெரிக்க டாலரை இந்திய ரூபாயிற்கு மாற்றும்போது, அவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.
ஒரு தரப்பினருக்கு ப்ளஸ் என்றாலும், இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி பல தரப்பினருக்கும் நெகட்டிவ் தான்.
ஆனால், இந்த நிலைமையை நேற்று முன்தினம் வெளியான அறிவிப்பு மாற்றியது.

ஒரே ஓர் அறிவிப்பு... Total Change
கடந்த 2-ம் தேதி, இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் பேசினார்கள். அப்போது 25 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக இந்தியா மீதான வரியை அமெரிக்கா குறைத்த அறிவிப்பும்... இந்தியா - அமெரிக்கா இடையில் முடிவாகி உள்ள ஒப்பந்தம் குறித்த அறிவிப்பும் வெளியானது.
இது நமது சந்தைக்கு பெரும் பூஸ்டைத் தந்தது.
அதே போல, இந்த அறிவிப்பு இந்திய ரூபாயின் மதிப்பையும் வலுவாக்கியது.
பிப்ரவரி 2-ம் தேதி, இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.91.49 என சந்தை முடிவடைந்தது. நேற்று, பிப்ரவரி 3-ம் தேதி, இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.90.27 என முடிவடைந்திருந்தது.
இரண்டிற்கும் கிட்டத்தட்ட ரூ.1.22 வித்தியாசம். கடந்த ஏழு ஆண்டுகளில், நாணய சந்தை கண்டிராத ஆச்சரியம் இது.
இதையொட்டி, பேங்க் ஆஃப் அமெரிக்கா கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி, வரும் மார்ச் மாதத்தின் இறுதிக்குள், இந்திய ரூபாயின் மதிப்பு 88.60-89.00-க்குள் வரும்.
இதற்கு இந்தியா - அமெரிக்க ஒப்பந்தம் மிக முக்கியக் காரணமாக இருக்கும் என்று கூறியுள்ளது.
இந்தக் கணிப்பு மட்டும் உண்மையாகி விட்டால், இந்திய சந்தை, ஏற்றுமதி, இறக்குமதி, முதலீடுகள் என அனைத்தும் வலுவடையும். பொறுத்திருந்து பார்ப்போம்!


















