செய்திகள் :

Re Releases: 'இந்த மாதம் ரீ ரிலீஸ் மாதம்!'; வரிசைகட்டும் ரீ ரிலீஸ் படங்கள் - என்னென்ன தெரியுமா?

post image

கடந்த சில வருடங்களாக ரீ-ரிலீஸ் படங்களும் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதற்கு உதாரணமாக 'கில்லி', '3' போன்ற படங்களின் ரீ ரிலீஸை சொல்லலாம்.

இந்த ரீ-ரிலீஸ் டிரெண்டில் கடந்தாண்டு வெளியான சில ரீ-ரிலீஸ் படங்கள் திரையரங்குகளுக்கு கைகொடுத்திருந்தன.

அதைத் தொடர்ந்து இந்தாண்டின் ரீ-ரிலீஸ் வெளியீடுகள் அஜித்தின் ‘மங்காத்தா’ படத்துடன் தொடங்கியது.

மங்காத்தா ரீ ரிலீஸ்
மங்காத்தா ரீ ரிலீஸ்

கடந்த ஜனவரி மாதம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட இத்திரைப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடியிருந்தனர்.

அதைத் தொடர்ந்து இந்த பிப்ரவரி மாதத்திலும் சில படங்கள் ரீ-ரிலீஸுக்கு சுடச்சுட ரெடியாகி வருகின்றன. அவை என்னென்ன என்பதைப் பார்ப்போமா...

‘பூவே உனக்காக’ ஒளிப்பதிவாளர் சரவணன் இயக்கத்தில், சிம்பு நடிப்பில் கடந்த 2008-ஆம் ஆண்டு திரைக்கு வந்த திரைப்படம் ‘சிலம்பாட்டம்’.

கடந்தாண்டே இத்திரைப்படம் மீண்டும் சிம்பு ரசிகர்களுக்காக ரீ-ரிலீஸ் செய்யப்படும் என அறிவிப்பு வந்திருந்தது.

இப்போது இத்திரைப்படம் ரீ-ரிலீஸுக்கு தயாராகி இருக்கிறது. சிம்புவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக இப்படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது.

Minnale Re Release
Minnale Re Release

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு இது சினிமாவில் 25வது ஆண்டு. அவருடைய முதல் திரைப்படமான ‘மின்னலே’ கடந்த 2001-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி திரைக்கு வந்திருந்தது.

கௌதம் மேனனின் 25 ஆண்டுகால சினிமா பயணத்தைக் கொண்டாடும் வகையில் இப்படம் வருகிற 13-ஆம் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது. மாதவன், ரீமா சென் ஆகியோர் நடித்திருக்கும் இப்படம்தான் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக அறிமுகமான திரைப்படம்.

இதைத் தொடர்ந்து மணிவண்ணன் - சத்யராஜ் கூட்டணியில் உருவாகி கடந்த 1994-ஆம் ஆண்டு வெளியான ‘அமைதிப்படை’ திரைப்படம் இன்று வரை கல்ட் கிளாசிக்காகக் கொண்டாடப்படுகிறது.

இத்திரைப்படமும் கூடிய விரைவில் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவித்திருக்கிறார்கள்.

Amaithipadai Re Release
Amaithipadai Re Release

கடந்தாண்டு டி. ராஜேந்தர் அவருடைய பல படைப்புகளையும் ரீ-ரிலீஸ் செய்வதற்கு டி.ஆர் டாக்கீஸ் எனும் புதிய நிறுவனத்தைத் தொடங்கியிருந்தார்.

சமகால தொழில்நுட்பத்திற்கேற்ப மெருகேற்றப்பட்டு ஒவ்வொன்றாக ரீ-ரிலீஸ் ஆகும் எனவும் சொல்லியிருந்தார்.

அதன்படி முதலாவதாக, 1983-ஆம் ஆண்டு வெளியான ‘உயிருள்ளவரை உஷா’ திரைப்படமும் கூடிய விரைவில் ரீ-ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

"இசுலாமியச் சொந்தங்கள் அனுபவிக்கும் துயரங்களின் ஒரு துளிதான் இந்த ‘சிறை’!"- படத்தை பாராட்டிய சீமான்

விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி வெளியான திரைப்படம் 'சிறை'.'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருந்தார்.'7 Screen Studio' லலித் குமார் தயாரித்... மேலும் பார்க்க

With Love: 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் சின்ன டச்..!" - சிம்ரன் டு எஸ்.ஜே.சூர்யா பாராட்டு!

‘லவ்வர்’ மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வித் லவ்’ (With Love). ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இயக்குநரும் நடிகருமான அபிஷன் ஜீவி... மேலும் பார்க்க

With Love: ``96, ஆட்டோகிராப், ராஜா ராணி மாதிரியான படம்.!" - இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார்

‘லவ்வர்’ மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வித் லவ்’ (With Love). ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இயக்குநரும் நடிகருமான அபிஷன் ஜீவி... மேலும் பார்க்க

With Love: மகள் தயாரித்த படம் குறித்து நடிகர் ரஜினிகாந்தின் 'ஒன் லைன்' விமர்சனம்!

இன்றைய இளைஞர்களின் காதல், கனவுகள் மற்றும் வாழ்வியலை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘வித் லவ்’ (With Love) திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. வெளியீட்டிற்கு முன்பே... மேலும் பார்க்க

Madhavan: "நான் செய்துவந்த வேலைகளால் மிகவும் விரக்தியடைந்து போயிருந்தேன்!" - நடிகர் மாதவன்

நடிகர் மாதவன் சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான ‘துரந்தர்’ படத்தில் நடித்திருந்தார். அது மட்டுமல்ல, கடந்த 2025-ம் ஆண்டு மிகவும் பிஸியாகவே அவர் வலம் வந்தார். 2012-ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ் சினிமாவிலிரு... மேலும் பார்க்க