செய்திகள் :

`சிடி-யை எழுத்து வடிவமாக்க வேண்டும்; ரூ.10 லட்சம் செலுத்துக!' - தோனிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

post image

கடந்த 2013-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில், சென்னை அணி வீரர் மகேந்திர சிங் தோனிக்கும் தொடர்பு இருப்பதாக, ஓய்வுப் பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத் குமார், தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.

இது தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி, நூறு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி சம்பத்குமாருக்கு எதிராக தோனி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

கடந்த 2014-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் தொடர்புடைய சிடி-யை எழுத்து வடிவமாக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

சென்னை உயர் நீதிமன்றம்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, வழக்கு தொடர்பான சிடி-யை எழுத்துவடிவமாக்க மொழி பெயர்ப்பாளரும், தட்டச்சரும் முழு நேரத்தை ஒதுக்க வேண்டியுள்ளது. இதற்கு மூன்று முதல் நான்கு மாதங்களாகும். மொழியாக்கம் செய்யப்படும் ஆவணங்களை நகல் எடுக்க கூடுதல் செலவினம் ஏற்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், மொழியாக்கத்துக்கான கட்டணமாக 10 லட்சம் ரூபாயை தலைமை நீதிபதி நிவாரண நிதிக்கு மார்ச் 12 ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என மனுதாரரான தோனிக்கு உத்தரவிட்ட நீதிபதி, மொழியாக்க பணிகளை மார்ச் 3 வது வாரத்துக்குள் முடிக்க வேண்டும் என மொழிபெயர்ப்பாளர், தட்டச்சருக்கு உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 12 ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

`ஆசிரியையின் ரூ.74 லட்ச சம்பளம்; திரும்ப செலுத்த சொன்ன கல்வித்துறை' - ரத்து செய்த உயர் நீதிமன்றம்

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மார்கரெட் விமலி என்பவர் கடந்த 1999-ஆம் ஆண்டு அரூரிலுள்ள அரசு உதவிபெறும் புனித அன்னாள் தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் கழித்து கிருஷ்ணகிரி... மேலும் பார்க்க

SIR : ``விதிமுறைகளுக்கு உட்பட்டு..!" - உச்ச நீதிமன்றத்தில் `வழக்கறிஞராக' மம்தா பானர்ஜி | Live Updates

உச்ச நீதிமன்றத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு..! மம்தா பானர்ஜிமேற்கு வங்க மாநிலத்தில் எஸ்ஐஆர் நடைமுறைகளுக்கு எதிரான விவகாரத்தில் மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் அரசியல் சாசன சட்டப்பிரிவு 32 கீழ் பொது... மேலும் பார்க்க

தென்பெண்ணையாறு நீர்ப்பங்கீடு; 'ஒரு மாதத்தில் தீர்ப்பாயம்' - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

தமிழகம்-கர்நாடக மாநிலங்களுக்கு இடையே தென்பெண்ணையாறு நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் ஏற்படும் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படுத்துவதற்கான தீர்ப்பாயத்தை ஒரு மாதத்தில் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச ... மேலும் பார்க்க

UGC : `இதில் நீதிமன்றம் தலையிடாவிட்டால்.. புதிய UGC சட்டத்துக்கு இடைக்காலத் தடை!' - உச்ச நீதிமன்றம்

கல்வி நிலையங்களில், குறிப்பாக கல்லூரிகளில் மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் அல்லது மாற்றுத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நிலவும் பாகுபாடுகள் அதிகரித்திருக்கின்றன. இதைக் கட்டுப்படுத்தும் விதமாக,... மேலும் பார்க்க

`ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விடுதலை' - மதுரை மாவட்ட நீதிமன்றம்

ஜல்லிக்கட்டு விளையாட்டில் மாடுகள் துன்புறுத்தபடுவதாக பீட்டா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கினால், 2014-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு தடை செய்யபட்டது.இந்த தீர்ப்பை எதிர்த்து மதுரையில் உள்ள அலங்காநல்... மேலும் பார்க்க

`நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனுக்கு எதிராக அவதூறு; தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன?' - உச்ச நீதிமன்றம்

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க கோரி, ராம ரவிக்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் குறிப்பி... மேலும் பார்க்க