செய்திகள் :

பகலில் சலூன் கடை ஓனர்; இரவில் போதைப்பொருள் கேங்க் லீடர்! - பிஷ்னோய் கேங்கின் லேடி டான் நேகா

post image

குஜராத் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய், சிறையில் இருந்து கொண்டே டெல்லியில் இருக்கும் தனது கூட்டத்தை இயக்கி வருகிறான். பஞ்சாப், டெல்லி, ஹரியானாவில் அவனது கூட்டத்தினர் ஏராளமானோர் இருக்கின்றனர். அவர்கள் மிரட்டி பணம் பறித்தல், போதைப்பொருள், ஆயுதம் கடத்தல் போன்ற வேலையில் ஈடுபடுகின்றனர்.

இக்கும்பல்தான் பஞ்சாப்பில் பாடகர் சிது மூஸ்வாலா, மகாராஷ்டிராவில் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் ஆகியோரை சுட்டுக்கொலை செய்தது. லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தில் சில பெண்களும் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதுவும் நேகா (எ) குஷ்னுமா அன்சாரி என்ற பெண் பிஷ்னோய் கூட்டத்தில் போதைப்பொருள் விற்பனையை நிர்வகிப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேகா குறித்த தகவல்களை போலீஸார் சேகரித்தனர்.

நேகா, லாரன்ஸ்

அப்பெண் டெல்லியின் வடகிழக்கு பகுதியில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருவதும் விசாரணையில் தெரிய வந்தது. அழகு நிலையத்தை பெயருக்கு நடத்திக்கொண்டு முழுக்க போதைப்பொருள் விற்பனை மற்றும் விநியோகத்தில் பிரதானமாக ஈடுபட்டு வருவதாக போலீஸாருக்கு தெரிய வந்தது.

இதையடுத்து நேகாவின் நடவடிக்கையை போலீஸார் கண்காணித்து வந்தனர். நேகா டெல்லியின் மஹிபல்பூர் என்ற இடத்தில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிரடி ரெய்டு நடத்தி நேகாவை கைது செய்தனர். அவர் கைது செய்யப்படும்போது அவரிடம் கணிசமான அளவு போதைப்பொருள் இருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

நேகாவுடன் அவரது பார்ட்னர் பாபி கபூதர் உட்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். நேகாவும், பாபியும் கடந்த 7 ஆண்டுகளாக சேர்ந்து செயல்பட்டு வந்துள்ளனர். இதில் பாபி, லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்திற்கு தேவையான ஆயுதங்களை வாங்கும் வேலையில் ஈடுபட்டு வந்தான். லாரன்ஸ் கூட்டத்தில் போதைப்பொருள் பிரிவை நேகா கவனித்து வந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

லாரன்ஸ் பிஷ்னோய்

பாபிக்கும் பிரபல ஆயுத சப்ளை வியாபாரி சலீம் பிஷ்டோல் என்பவனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சலீமிடம் வாங்கிய ஆயுதங்கள் சித்து மூஸ்வாலா துப்பாக்கிச் சூடு, நடிகை திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு, டெல்லியில் நாதிர் ஷா கொலை மற்றும் சீலாம்பூர் இரட்டைக் கொலைகள் உள்ளிட்ட பல உயர்மட்ட குற்றங்களில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அதோடு தற்போது கைது செய்யப்பட்டுள்ள பாபி தான் பஞ்சாப் பாடகரின் நடமாட்டம் குறித்து கண்காணித்து கொலையாளிகளுக்கு முக்கிய தகவல்களை பகிர்ந்தார் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். பாபி பல மாதங்களாக தனது அடையாளம் மற்றும் இருப்பிடத்தை மாற்றிக்கொண்டு போலீஸார் கண்ணில் படாமல் இருந்து வந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Kerala: குறைந்த விலையில் லேப்டாப் வழங்குவதாக மோசடி? நடிகர் ஜெயசூர்யா சொத்து முடக்கம்; நடந்தது என்ன?

கேரள மாநிலம் திருச்சூரில் 2019-ம் ஆண்டு சேவ் பாக்ஸ் கான்ஸ்செப்ட் லிமிடெட் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. ஸ்வாதிக் ரஹீம் என்பவர் அந்த நிறுவனத்தை நடத்திவந்தார்.சேவ் பாக்ஸ் நிறுவனத்துக்கு பணம் செலுத்தினால... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: மாமியாரை எரித்துக் கொன்ற மருமகள்; ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்; என்ன நடந்தது?

புதுக்கோட்டை, மணியம்பளம் மேல செந்திரையைச் சேர்ந்தவர் ராஜம்மாள் (வயது: 58). இவரும், இவரது மகன் ரமேஷ் மற்றும் மருமகள் பிரதீபா (வயது: 27) ஆகியோரும் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர்.இந்நிலையில், பிரதீப... மேலும் பார்க்க

சென்னை: வீட்டு ஓனரின் மகளை நம்பவைத்து நூதனமுறையில் ஏமாற்றிய அப்பா, மகள் - தங்க நகைகளுடன் கைது!

திருவண்ணாமலை மாவட்டம், கருடாழ்வார் நகரைச் சேர்ந்தவர், புனிதாஸ்ரீ (22). இவரின் வீட்டின் கீழ் தளத்தில் கோவையைச் சேர்ந்த ஜெகதீஸ் என்பவர், மனைவி மற்றும் மகளுடன் வாடகைக்கு வசித்து வந்தார். அப்போது புனிதாஸ்... மேலும் பார்க்க

"பெண்ணுறுப்பிற்குள் ஊடுருவாமல் விந்தினை வெளியேற்றுவது பாலியல் வன்கொடுமையல்ல" - சத்தீஸ்கர் நீதிமன்றம்

சத்தீஷ்கர் உயர் நீதிமன்றத்தில் பெண் ஒருவர் கொடுத்திருந்த பாலியல் வன்கொடுமை வழக்கில், 20 ஆண்டுகளுக்கு முன்பு குற்றவாளிக்கு விசாரணை நீதிமன்றம் 7 ஆண்டு சிறை தண்டனை கொடுத்திருந்தது. இத்தண்டனையை எதிர்த்து ... மேலும் பார்க்க

கட்டாய கடன் வசூலுக்கு தடை! - புதிய சட்டத்தின் 'முதல்' கைது... அத்துமீறும் நிதி நிறுவனங்களுக்கு செக்!

தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெறும் ஏழை மக்கள், விவசாயிகள் மற்றும் சுய உதவிக்குழுக்கள், குடும்ப சூழல் காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் தவணையை செலுத்த முடியாத நிலைக்குச் செல்கின்றனர். அதனால் அந்தக் கடன... மேலும் பார்க்க

விருதுநகர்: உரிமைத்தொகையை செலவு செய்ததால் கோபித்த மனைவி; விபரீத முடிவெடுத்த கணவரால் சோகம்!

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள நெடுங்குளத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரின் மனைவி ராமு. இவரது வங்கிக் கணக்கில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை ரூ.3 ஆயிரம் ... மேலும் பார்க்க