செய்திகள் :

"பெண்ணுறுப்பிற்குள் ஊடுருவாமல் விந்தினை வெளியேற்றுவது பாலியல் வன்கொடுமையல்ல" - சத்தீஸ்கர் நீதிமன்றம்

post image

சத்தீஷ்கர் உயர் நீதிமன்றத்தில் பெண் ஒருவர் கொடுத்திருந்த பாலியல் வன்கொடுமை வழக்கில், 20 ஆண்டுகளுக்கு முன்பு குற்றவாளிக்கு விசாரணை நீதிமன்றம் 7 ஆண்டு சிறை தண்டனை கொடுத்திருந்தது.

இத்தண்டனையை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்ட நபர் சத்தீஷ்கர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். 2005ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இம்மனு மீதான விசாரணையில் தற்போதுதான் கோர்ட் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

பாதிக்கப்பட்ட பெண் 2004ம் ஆண்டு மே 21ம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது உள்ளே அத்துமீறி நுழைந்த நபர் அப்பெண்ணின் உடைகளைக் கழற்றிவிட்டு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது அப்பெண் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து அப்பெண்ணின் கை, கால்களைக் கட்டிவிட்டு வாயில் துணியை வைத்து அடைத்து தனி அறையில் அடைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக அப்பெண் விசாரணையில் குறிப்பிட்டு இருந்தார்.

சத்தீஷ்கர் உயர் நீதிமன்றம்
சத்தீஷ்கர் உயர் நீதிமன்றம்

இவ்வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது அப்பெண்ணிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டதில், குற்றம் சாட்டப்பட்ட நபர் தனது அந்தரங்க உறுப்பை தன் பெண்ணுறுப்பிற்கு மேல் வைத்திருந்ததாகவும், ஊடுருவவில்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

மற்றொரு சந்தர்ப்பத்தில் அப்பெண் கொடுத்திருந்த வாக்குமூலத்தில், குற்றவாளி தனது அந்தரங்க உறுப்பை எனது அந்தரங்க உறுப்பில் நுழைத்தார் என்று குறிப்பிட்டு இருந்தார். பெண்ணின் இந்த முரண்பட்ட வாக்குமூலத்தை நீதிபதி தனது கவனத்தில் எடுத்துக்கொண்டார்.

இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், ''375வது சட்டப்பிரிவின் படி, ஊடுருவல் இல்லாமல் பாதிக்கப்பட்ட பெண்ணின் அந்தரங்க உறுப்பிற்கு மேல் குற்றவாளி தனது அந்தரங்க உறுப்பை வைத்திருந்தது மற்றும் ஊடுருவல் இல்லாமல் விந்தை வெளியேற்றியது பாலியல் வன்கொடுமையாகாது.

அதனை பாலியல் வன்கொடுமை முயற்சி என்று சொல்லலாம். பாலியல் குற்றத்திற்கு ஊடுருவல்தான் முக்கியம். விந்து வெளியேற்றுவது முக்கியமில்லை. வழக்கறிஞரின் சாட்சியங்களைச் சரியான கண்ணோட்டத்தில் பரிசீலிக்கும்போது, உண்மையான கற்பழிப்பு நடக்கவில்லை என்பது தெளிவாகிறது.

ஏனெனில் பாதிக்கப்பட்டவரின் சொந்த வாக்குமூலம் சந்தேகத்தை உருவாக்குகிறது. பாதிக்கப்பட்டவர் தனது வாக்குமூலத்தில் ஒரு முறை தனது அந்தரங்க உறுப்பிற்குள் குற்றவாளி தனது உறுப்பை நுழைத்தார் என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு வாக்குமூலத்தில் தனது அந்தரங்க உறுப்பிற்குள் குற்றவாளி நுழைக்கவில்லை என்றும், வெறுமனே 10 நிமிடம் தனது அந்தரங்க உறுப்பிற்கு மேலே வைத்திருந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.

பெண்ணிற்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையும், ஊடுருவல் நடக்கவில்லை என்று கூறுகிறது. டாக்டர் ஆஜராகி அளித்த வாக்குமூலத்தில் லேசான ஊடுருவல் இருந்திருக்கலாம் என்று மட்டும் குறிப்பிட்டார். ஒரு பெண்ணின் பிறப்புறுப்பின் இதழ் பகுதிக்குள் ஆண் உறுப்பின் ஒரு சிறு பகுதி நுழைந்திருந்தாலே அது பாலியல் வன்கொடுமையாகக் கருதப்படும்.

இதற்கு முழுமையான ஊடுருவல் தேவையில்லை. ஆனால், அவ்வாறு ஊடுருவல் நடந்தது என்பதை உறுதிப்படுத்த தெளிவான மற்றும் வலுவான சாட்சியங்கள் இருக்க வேண்டும்.

rape case
rape case

இந்தக் குறிப்பிட்ட வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியத்தில் ஊடுருவல் குறித்து முரண்பட்ட தகவல்கள் இருந்ததாலும், மருத்துவ ரீதியாக ஊடுருவல் நடந்ததற்கான காயங்கள் அல்லது ஆதாரங்கள் இல்லாததாலும், நீதிமன்றம் இதனை பாலியல் வன்கொடுமை முயற்சி என்றே கருதமுடியும்.

மேல்முறையீட்டாளரின் (குற்றம் சாட்டப்பட்டவர்) செயல்கள், பாலியல் வன்கொடுமைக்கான தயார் நிலையைத் தாண்டிவிட்டன. மேலும், விந்து வெளியேற்றம் இன்றி, ஊடுருவலுக்கு முந்தைய செயலாக இது அமைந்துள்ளது. எனவே 511-வது சட்டப்பிரிவின் கீழ் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டவர் கருதப்படுவார்'' என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கட்டாய கடன் வசூலுக்கு தடை! - புதிய சட்டத்தின் 'முதல்' கைது... அத்துமீறும் நிதி நிறுவனங்களுக்கு செக்!

தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெறும் ஏழை மக்கள், விவசாயிகள் மற்றும் சுய உதவிக்குழுக்கள், குடும்ப சூழல் காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் தவணையை செலுத்த முடியாத நிலைக்குச் செல்கின்றனர். அதனால் அந்தக் கடன... மேலும் பார்க்க

விருதுநகர்: உரிமைத்தொகையை செலவு செய்ததால் கோபித்த மனைவி; விபரீத முடிவெடுத்த கணவரால் சோகம்!

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள நெடுங்குளத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரின் மனைவி ராமு. இவரது வங்கிக் கணக்கில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை ரூ.3 ஆயிரம் ... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: ஒரு தலை காதல் தொல்லை; உயிரை மாய்த்த மாணவி; மாணவரை கைதுசெய்ய குடும்பத்தினர் கோரிக்கை!

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் கோகுல் நகரைச் சேர்ந்த தம்பதியின் மகள், அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அதே பள்ளியில் அதே வகுப்பில் படித்த மாணவர் ஒருவ... மேலும் பார்க்க

`மகனிடம் சேரப் போகிறோம்' - பெற்றோரின் உருக்கமான கடிதம் - சோகத்தில் ஆழ்ந்த கிராமம்!

சத்தீஸ்கர் மாநிலம், ஜான்ஜ்கிர்-சம்பா மாவட்டத்தில் உள்ளது தார்தேய் (Dhardei) கிராமம். இங்கு கிருஷ்ணா படேல் (48), அவர் மனைவி ரமா பாய் (47) ஆகியோர் வசித்து வந்தனர். இந்த நிலையில், இன்று காலை வீட்டு முற்ற... மேலும் பார்க்க

Taapsee Pannu: ``தினமும் 80 பாலியல் குற்றங்கள்... நாம் பழகிவிட்டோம்" - நடிகை டாப்ஸி பண்ணு ஆவேசம்!

பீகார் மாநிலம், பாட்னாவில் நீட் தேர்வுக்காகத் தயாராகி வந்த 17 வயது மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜஹானாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த ம... மேலும் பார்க்க

நடத்தையில் சந்தேகம்: காதலர் தின விருந்தில் மனைவியைக் கொன்றுவிட்டு நாடகம் - கணவன் சிக்கியது எப்படி?

ஹரியானா மாநிலம், குருகிராம் பஹதுர்கர் பகுதியைச் சேர்ந்த மஹக் என்ற பெண் இரண்டு நாள்களுக்கு முன்பு காதலர் தின இரவில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். மஹக் பிரபல தனியார் வங்கியில் பணியாற்றி வந்தா... மேலும் பார்க்க