செய்திகள் :

Taapsee Pannu: ``தினமும் 80 பாலியல் குற்றங்கள்... நாம் பழகிவிட்டோம்" - நடிகை டாப்ஸி பண்ணு ஆவேசம்!

post image

பீகார் மாநிலம், பாட்னாவில் நீட் தேர்வுக்காகத் தயாராகி வந்த 17 வயது மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜஹானாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த மாணவி, நீட் தேர்வுக்காக பாட்னாவில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார்.

கடந்த ஜனவரி 6-ம் தேதி அவர் தனது அறையில் மயங்கிக் கிடந்த நிலையில் மீட்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி 5 நாள்களுக்குப் பிறகு பரிதாபமாக உயிரிழந்தார்.

நிதிஷ் குமார்
நிதிஷ் குமார்

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை,``மாணவி அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டதால் உயிரிழந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது." எனக் கூறியது. ஆனால், குடும்பத்தினர் இதனை மறுத்தனர். மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை மறைக்க முயற்சி நடப்பதாகவும் குற்றம்சாட்டினர்.

இந்த சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாணவியின் உடைகளில் மனித விந்தணு இருப்பது தடயவியல் அறிக்கையில் கண்டறியப்பட்டது. மேலும், உடற்கூறாய்வு அறிக்கையிலும் பாலியல் வன்கொடுமைக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மாணவி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோதுகூட பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவரம் மருத்துவர்களுக்கு எப்படி தெரியாமல் போனது போன்ற சந்தேகங்கள், காவல்துறை யாரையோ காப்பாற்ற முயற்சிப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.

Taapsee Pannu
டாப்ஸி பண்ணு

எனவே, மாணவியின் பெற்றோரின் அதிருப்தியாலும், மக்களின் போராட்டத்தாலும் பீகார் மாநிலத்தின் நிதிஷ் குமார் அரசு இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியிருக்கிறது.

இந்த நிலையில், 'அஸி' (Assi) திரைப்பட விளம்பரப் பணிகளில் ஈடுபட்டுள்ள நடிகை டாப்ஸி பண்ணு, இந்தச் சம்பவம் குறித்து ஊடகங்களிடம் ஆவேசமாகப் பேசியுள்ளார். ``இங்கு மட்டுமல்ல, நாடு முழுவதும் அன்றைய தினமே இது போன்ற 79 சம்பவங்கள் நடந்திருக்கலாம். சராசரியாக 80 சம்பவங்கள் நாட்டில் நடக்கின்றன.

இதைவிட அதிகமாகவும் இருக்கலாம். இது போன்ற வழக்குகளை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டோம். இது மிகவும் வருத்தமளிக்கிறது. இது போன்ற சம்பவங்கள் சாதாரணமாக நடப்பவை என்று கருதும் அளவுக்கு நாம் பழகிவிட்டோம் என்பதுதான் எனக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்துகிறது" எனத் தெரிவித்தார்.

நடத்தையில் சந்தேகம்: காதலர் தின விருந்தில் மனைவியைக் கொன்றுவிட்டு நாடகம் - கணவன் சிக்கியது எப்படி?

ஹரியானா மாநிலம், குருகிராம் பஹதுர்கர் பகுதியைச் சேர்ந்த மஹக் என்ற பெண் இரண்டு நாள்களுக்கு முன்பு காதலர் தின இரவில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். மஹக் பிரபல தனியார் வங்கியில் பணியாற்றி வந்தா... மேலும் பார்க்க

சென்னை: கணவன், மனைவியைக் கொலை செய்த பக்கத்து வீட்டுக்காரர் - திருமணம் மீறிய உறவால் விபரீதம்

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் என்கிற பார்த்தசாரதி(42). இவரின் மனைவி ஜமுனா(35). இவர்களது எதிர் வீட்டில் சுசில் (32), அவரின் மனைவி கிரிஜா(29) ஆகி... மேலும் பார்க்க

ஆவியிடம் மன்னிப்பு; காதலியை கொலை செய்து பிணத்துடன் உறவு - மும்பையில் பதுங்கி இருந்த காதலன்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் எம்.பி.ஏ. படித்து வந்த 24 வயது பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது காதலன் பியூஷ் வீட்டில் கொலை செய்யப்பட்டு நிர்வாணமாக கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் கண்டுபி... மேலும் பார்க்க

கமுதி: கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சோகம்

ராமநாதபுரத்தை சேர்ந்தவர் சோலையப்பன் (67). ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி(60) இவர்களது மகன் சோலைசெல்வம்(30), இவரது மனைவி கோகிலா(32) மற்றும் இவர்களது இரு குழந்தைகள் உள்ளிட்ட ஆ... மேலும் பார்க்க

கேரளா: பாங்கோடு ராணுவ முகாமில் டிஜே பார்ட்டி; 2 யானை தந்தங்கள் கொள்ளை... விசாரணை நடத்தும் போலீஸ்!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் பாங்கோட்டில் மெட்ராஸ் ரெஜிமென்ட் மிலிட்டரி கேம்ப் உள்ளது. 24 மணிநேரமும் பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் இந்த முகாமுக்குள், அனுமதி இல்லாமல் யாரும் நுழையமுடியாது. இங்கு ... மேலும் பார்க்க

ஒரே வீட்டில் மனைவி, காதலி: பணம் கேட்ட இன்ஸ்டா காதலியை கொன்று செப்டிங் டேங்கில் போட்ட காதலன்!

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள நிஷத்புரா என்ற இடத்தை சேர்ந்தவர் சமீர். இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா என்ற இடத்தை சேர்ந்த ஷியா என்ற பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூ... மேலும் பார்க்க