செய்திகள் :

ஆவியிடம் மன்னிப்பு; காதலியை கொலை செய்து பிணத்துடன் உறவு - மும்பையில் பதுங்கி இருந்த காதலன்

post image

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் எம்.பி.ஏ. படித்து வந்த 24 வயது பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது காதலன் பியூஷ் வீட்டில் கொலை செய்யப்பட்டு நிர்வாணமாக கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்பெண்ணுடன் உறவு வைத்துக்கொண்ட வீடியோவை அப்பெண் படிக்கும் கல்லூரி வாட்ஸ்ஆப் குரூப் மற்றும் அப்பெண்ணின் மொபைல் போனில் இருந்த அனைவருக்கும் கொலை நடந்த அன்று அனுப்பப்பட்டு இருந்தது.

இக்கொலை தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். பியூஷ் வீட்டிற்கு வெளியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது பியூஷ் உள்ளே செல்லும்போது தனது காதலியுடன் சென்றார். ஆனால் வெளியில் வரும்போது ஒரு பேக்கை எடுத்துக்கொண்டு தனியாக வரும் காட்சி பதிவாகி இருந்தது.

ஆவியிடம் மன்னிப்பு கேட்க முயற்சி

பியூஷ் தலைமறைவாகி இருந்தான். அவனும் எம்.பி.ஏ.படித்து வந்தான். போலீஸாரின் தீவிர விசாரணையில் பியூஷ் மும்பையில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீஸார் இந்தூரில் இருந்து மும்பைக்கு வந்தனர். அவர்கள் மும்பை போலீஸாரின் துணையோடு பன்வெல் பகுதியில் பியூஷை கைது செய்தனர்.

பியூஷ் கைது செய்யப்பட்ட இடம் பில்லி சூனியம் வைக்கும் இடம் ஆகும். அவன் பில்லி சூனியம் வைப்பவர்கள் துணையோடு தனது காதலியின் ஆவியிடம் பேச முயற்சி செய்ததாக இந்தூர் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தனது காதலியின் ஆவியோடு பேசி செய்த செயலுக்காக மன்னிப்பு கேட்க முயற்சி செய்ததாக அவன் போலீஸாரிடம் தெரிவித்துள்ளான்.

இது குறித்து இவ்வழக்கை விசாரித்து வரும் போலீஸ் அதிகாரி கூறுகையில், ''கொலை செய்த பிறகு பியூஷ் மிகுந்த மன அழுத்ததிற்கு சென்றுள்ளான். சம்பந்தப்பட்ட பெண் மொபைல் செயலி மூலம் வேறு ஒருவருடன் போனில் பேசுவதாக பியூஷ் சந்தேகப்பட்டுள்ளான். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பியூஷ் கேட்டுக்கொண்டான். ஆனால் அப்பெண் திருமணம் செய்ய முடியாது என்று மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தன்று இருவரும் பியூஷ் வீட்டிற்கு சென்ற போது அங்கு வைத்து அப்பெண்ணுடன் உறவு கொள்ள பியூஷ் விரும்பி இருக்கிறார். ஆனால் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி அதற்கு அப்பெண் மறுத்துள்ளார். அப்படி இருந்தும் கட்டாயப்படுத்தி உறவு வைத்துக்கொண்டுள்ளார். பின்னர் ஒரு பரிசு கொடுக்கப் போகிறேன் என்று சொல்லி அப்பெண்ணின் கை, கால்களை கட்டினார். அதற்கு அப்பெண் எதிர்ப்பு தெரிவித்து சத்தம்போட்டபோது அப்பெண்ணின் வாயில் துணியை வைத்துள்ளார்.

போதையில் பிணத்துடன் உறவு

அதோடு அப்பெண்ணின் நெஞ்சில் ஏறி அமர்ந்து கொண்டு மூச்சுவிட முடியாமல் பிடித்துக்கொண்டுள்ளார். இதில் அப்பெண் இறுதிமூச்சை விட்டபிறகும் கோபம் தனியால் வீட்டில் கிடந்த கத்தியை எடுத்து அப்பெண்ணின் நெஞ்சில் குத்தி இருக்கிறார். இதில் கத்தியே உடைந்திருக்கிறது. கொலை செய்த பிறகு வெளியில் சென்று பீர் வாங்கி வந்து அப்பெண்ணின் உடல் அருகில் அமர்ந்து பீர் குடித்துள்ளார். குடிபோதையில் அப்பெண்ணின் பிணத்தோடு உறவுவைத்துக்கொண்டுள்ளார். அதன் பிறகு உடைகளை மாற்றிக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.

இரவு 11 மணிக்கு அப்பெண்ணின் மொபைல் போனில் இருந்து அவரது இளைய சகோதரிக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் `இனி வரமாட்டேன்' என்று அப்பாவிடம் சொல்லிவிடு என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன் பிறகு போன் ஆப் ஆகிவிட்டது. அந்த போனை பியூஷ் மும்பைக்கு கொண்டு வந்து உடைத்துள்ளான்''என்றார்.

முன்னதாக அப்பெண் தனது ஆதார் கார்டில் திருத்தம் செய்யவேண்டியிருக்கிறது என்று தெரிவித்தார். உடனே அவரை அவரது தந்தை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் கொண்டு போய்விட்டுள்ளார். மாலையில அப்பெண் தனது சகோதரிக்கு போன் செய்து தனது நண்பர் பியூஷ் பிறந்தநாள் பார்ட்டிக்கு செல்வதாக குறிப்பிட்டு இரவு 11 மணிக்கு வருவேன் என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை: கணவன், மனைவியைக் கொலை செய்த பக்கத்து வீட்டுக்காரர் - திருமணம் மீறிய உறவால் விபரீதம்

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் என்கிற பார்த்தசாரதி(42). இவரின் மனைவி ஜமுனா(35). இவர்களது எதிர் வீட்டில் சுசில் (32), அவரின் மனைவி கிரிஜா(29) ஆகி... மேலும் பார்க்க

கமுதி: கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சோகம்

ராமநாதபுரத்தை சேர்ந்தவர் சோலையப்பன் (67). ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி(60) இவர்களது மகன் சோலைசெல்வம்(30), இவரது மனைவி கோகிலா(32) மற்றும் இவர்களது இரு குழந்தைகள் உள்ளிட்ட ஆ... மேலும் பார்க்க

கேரளா: பாங்கோடு ராணுவ முகாமில் டிஜே பார்ட்டி; 2 யானை தந்தங்கள் கொள்ளை... விசாரணை நடத்தும் போலீஸ்!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் பாங்கோட்டில் மெட்ராஸ் ரெஜிமென்ட் மிலிட்டரி கேம்ப் உள்ளது. 24 மணிநேரமும் பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் இந்த முகாமுக்குள், அனுமதி இல்லாமல் யாரும் நுழையமுடியாது. இங்கு ... மேலும் பார்க்க

ஒரே வீட்டில் மனைவி, காதலி: பணம் கேட்ட இன்ஸ்டா காதலியை கொன்று செப்டிங் டேங்கில் போட்ட காதலன்!

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள நிஷத்புரா என்ற இடத்தை சேர்ந்தவர் சமீர். இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா என்ற இடத்தை சேர்ந்த ஷியா என்ற பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூ... மேலும் பார்க்க

சிகரெட் வியாபாரியை தாக்கி செல்போன் பறித்த இளைஞர்கள் - 7 கி.மீ விரட்டிப் பிடித்த போலீஸார்!

தூத்துக்குடியில் எஸ்.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தினகரன். சிகரெட் மொத்த வியாபாரியான இவர், மடத்தூர் பகுதியில் உள்ள ஒரு கடையில் சிகரெட் பாக்கெட்டுகளை விற்பனை செய்துவிட்டு, அருகில் உள்ள மற்றொரு கடையில்... மேலும் பார்க்க

துருக்கி: நகைக்கடையில் திருடி விட்டு கழுதையில் ஏறி தப்பிய நபர்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

துருக்கியில் நகைக்கடை ஒன்றில் திருடிவிட்டு ஒருவர் சர்வ சாதாரணமாகத் தனது கழுதையில் ஏறிச்சென்ற சம்பவம் வைரலாகி இருக்கிறது. அங்குள்ள காய்சரி என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.அங்குள்ள நகைக்கடை ஒன்... மேலும் பார்க்க