செய்திகள் :

பிரான்ஸ் அதிபர் மெக்ரான் இந்தியா வருகை; இன்று மோடியுடன் சந்திப்பு! - முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து?

post image

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் 3 நாள் பயணமாக இன்று அதிகாலை மும்பை வந்து சேர்ந்தார். அவரை விமான நிலையத்தில் மாநில ஆளுநர் ஆச்சாரியா, முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே, சுனேத்ரா பவார் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். மெக்ரானுடன் அவரது மனைவியும் வந்துள்ளார். பிரான்ஸ் அதிபர் மெக்ரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடியும் இன்று மும்பை வருகிறார். அவர்கள் தென்மும்பையில் உள்ள லோக்பவனில் இன்று மாலை முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

மோடி
மோடி

இப்பேச்சுவார்த்தையில் ரபேல் விமானம் உட்பட பாதுகாப்பு ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதில் 10க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து கேட்வே ஆப் இந்தியாவில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியும், மேக்ரானும் இணைந்து இந்தியா-பிரான்ஸ் புதுமை ஆண்டு 2026-ஐ தொடங்கி வைப்பார்கள்.

அதனை தொடர்ந்து இரு நாடுகளின் தொழிலதிபர்கள், ஸ்டார்ட் ஆப் நிறுவன நிறுவனர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் கலந்து கொள்ளும் கூட்டத்திலும் இரு தலைவர்களும் உரையாற்றுகின்றனர். இதை தொடர்ந்து டெல்லியில் நாளை நடக்கும் சர்வதேச செயற்கை நுண்னறிவு இம்பேக்ட் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இருவரும் புதுடெல்லி புறப்பட்டு செல்கின்றனர். பிரான்ஸ் அதிபர் வருகையையொட்டி அவரை வரவேற்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ``இந்தியாவிற்கு வருக. உங்களது பயணம் இரு தரப்பு உறவுகளை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்று நம்புவதாக" குறிப்பிட்டுள்ளார்.

ரூ.60 கோடி சொத்து; வாரிசு இல்லாமல் விட்டுச்சென்ற பெண் டாக்டர் - உரிமை கோரி முட்டி மோதும் உறவுகள்

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரை சேர்ந்தவர் டாக்டர் ஹேமலதா(81). கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த டாக்டர் ஹேமலதா இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். ஆனால் அவர் இறந்த பிறகு அவர் வி... மேலும் பார்க்க

மும்பை ரயில் தண்டவாளத்தில் பட்டப்பகலில் போர்வை மூடி உறங்கிய போதை ஆசாமி! - ரயில் சேவை பாதிப்பு

மும்பை புறநகர் ரயிலில் எப்போதும் கூட்டம் அதிகமாகவே இருக்கும். ரயில் மட்டுமல்லாது மும்பை ரயில் நிலையங்களிலும் காலை, மாலை நேரத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தி... மேலும் பார்க்க

வாழ்நாள் துயரத்தில் முடிந்த Maternity Photoshoot; கவனச்சிதறலால் பறிபோன 3 வயது மகனின் உயிர்

பெங்களூருவின் ஜே.பி நகரைச் சேர்ந்தவர்கள், சுவாதி-சரண் ராஜ் தம்பதியினர். இவர்களுக்கு மூன்று வயதில் லக்ஷ்மீர் என்ற மகன் இருந்தார். சுவாதி தனது இரண்டாவது பிரசவத்திற்காகக் காத்திருந்த நிலையில், கடந்த சனிக... மேலும் பார்க்க

AC: வீட்டுக்குப் பொருத்தமான ஏ.சி-யைத் தேர்வு செய்வது எப்படி?

சொட்டச்சொட்ட வியர்க்கும் அளவுக்கு அனலாகக் கொளுத்தப் போகிறது கோடை வெயில். மின்விசிறிகளே சுழன்று சுழன்று களைத்திருக்கும் இந்த வேளையில், பலரும் எதிர்பார்ப்பது ஒரு ஜில்-ஜில் ஏ.சி-யைத்தான். ஆனால், ஒரு மின்... மேலும் பார்க்க

விழாக்கோலம் பூண்ட ரயில்: மும்பை ரயிலில் கர்ப்பிணி பயணிக்கு வளைகாப்பு நடத்திய சக பெண் பயணிகள்!

மும்பையில் புறநகர் ரயில் மக்களின் உயிர் நாடியாக இருக்கிறது. அந்த ரயிலில் ஆண்களுக்கு நிகராக தினமும் ஆயிரக்கணக்கான பெண்களும் பயணம் செய்கின்றனர். அவர்கள் மும்பை புறநகர் பகுதியில் இருந்து தினமும் மும்பைக்... மேலும் பார்க்க

ஊழியர்களுக்கு கார், வீடு கொடுத்து மகிழும் சூரத் வைர வியாபாரி - ரூ.12ஐ 15,000 கோடியாக்கியது எப்படி?

குஜராத் மாநிலத்தில் வைரம்தான் பிரதான தொழில். பெரும்பாலான தொழிலதிபர்கள் சூரத்தில் வைரத்தை பட்டை தீட்டி அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். சூரத் இந்தியாவின் `வைர நகரம்' என்று அழைக்கப்படுகிறது. ... மேலும் பார்க்க