செய்திகள் :

ஊழியர்களுக்கு கார், வீடு கொடுத்து மகிழும் சூரத் வைர வியாபாரி - ரூ.12ஐ 15,000 கோடியாக்கியது எப்படி?

post image

குஜராத் மாநிலத்தில் வைரம்தான் பிரதான தொழில். பெரும்பாலான தொழிலதிபர்கள் சூரத்தில் வைரத்தை பட்டை தீட்டி அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். சூரத் இந்தியாவின் `வைர நகரம்' என்று அழைக்கப்படுகிறது.

சூரத்தில் சாவ்ஜி தோலாகியா எனும் பெயரை கேட்டாலே பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும். இந்தியாவின் வைர மன்னனாக கருதப்படும் சாவ்ஜி, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியையொட்டி தனது கம்பெனியில் அதிக நாட்கள் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு விதவிதமாக பரிசுகளை கொடுத்து அழகுபார்த்து வருகிறார்.

தொழிலாளர்களுக்கு கார், சொந்த வீடு, தங்க ஆபரணங்கள் என கொடுக்கும் சாவ்ஜி ஒரு காலத்தில் சொந்த ஊரான செளராஷ்டிராவில் இருந்து பிழைப்புக்காக சூரத் வந்துள்ளார். சூரத்தில் ஹரி கிருஷ்ணா எக்ஸ்போர்ட் என்ற பெயரில் வைர கம்பெனி நடத்தும் சாவ்ஜி தனக்கென தனிப்பெயர் எடுத்து வைத்திருக்கிறார்.

தொழிலாளர்களுக்காக வாங்கிய கார்

அவர் தான் சம்பாதிக்கும் பணத்தில் லாபத்தில் பெரும்பகுதியை தொழிலாளர்களுக்காகவே செலவு செய்துவிடுகிறார்.

சாவ்ஜி தனது 12வது வயதில் தனது சொந்த ஊரான சுதாலா என்ற கிராமத்தில் இருந்து சூரத்திற்கு வந்தார். அவர் அப்படி வரும் போது அவரது சட்டை பாக்கெட்டில் வெறும் 12 ரூபாய் மட்டுமே இருந்தது. சூரத் வந்து அந்த சிறிய வயதிலேயே வைர கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். அந்த வேலையை நன்றாக கற்றுக்கொண்ட பிறகு தானே சொந்தமாக தொழிலை தொடங்க வேண்டும் என்று நினைத்தார்.

ஆனால் அந்நேரம் அத்தொழிலை தொடங்க தேவையான பணம் அவரிடம் இல்லை. இதனால் அவர் தொழில் தொடங்க அவரது மாமா சிறிது பணம் கொடுத்து உதவினார்.

அந்த பணத்தில் தொழில் தொடங்கிய சாவ்ஜி கம்பெனியில் முழு கவனத்தையும் செலுத்தி வேலை செய்தார். இதனால் அவரது கம்பெனி மளமளவென வளர்ச்சி அடைந்தது. இன்றைக்கு அவரது கம்பெனி வருடத்திற்கு 15 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் செய்து கொண்டிருக்கிறது. அவரிடம் வேலை செய்யும் தொழிலாளர்கள் மிகவும் மகிழ்ச்சியோடு வேலை செய்கிறார்கள். தொழிலாளர்களுக்கு என்ன வேண்டுமானாலும் உடனே அவர்களுக்கு செய்து கொடுக்கிறார். அதோடு வறட்சி பாதித்த கிராமங்களில் குடிநீர் வசதியை ஏற்படுத்தி கொடுப்பது போன்ற சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார்.

தொழிலாளர்களுக்கு இந்த அளவுக்கு அடிக்கடி பரிசுப்பொருட்கள் கொடுப்பது குறித்து ஒரு முறை அவரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, ''ஊழியர்கள் பாதுகாப்பாக உணரும்போது, ​​அவர்கள் வேலையிலும் வாழ்க்கையிலும் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். நிறுவனத்தை உருவாக்க உதவிய தொழிலாளர்களுடன் கம்பெனியின் வெற்றியைப் பகிர்ந்து கொள்ள எனது சொந்த லாபத்தை குறைத்துக்கொள்கிறேன்''என்று குறிப்பிட்டு இருந்தார்.

கடந்த ஆண்டு தீபாவளியையொட்டி தனது தொழிலாளர்கள் 1260 பேருக்கு கார் கொடுத்துள்ளார். இது தவிர 400 பேருக்கு சொந்த வீடு வாங்கிக்கொடுத்து இருக்கிறார். கடந்த 30 ஆண்டில் தனது கம்பெனி தொழிலாளர்கள் அனைவருக்கும் கார், வீடு கொடுத்து அவர்களையும் பொருளாதார ரீதியாக முன்னேற்றி வருகிறார். அவர் கடந்த புத்தாண்டையொட்டி வெளியிட்டு இருந்த இன்ஸ்டாகிராம் பதில்,''வெற்றி என்பது சத்தத்தால் மதிப்பிடப்படுவதில்லை. மாறாக நிலைத்தன்மை, நோக்கம் மற்றும் மதிப்புகளால் அளவிடப்படுகிறது'' என்று குறிப்பிட்டு இருந்தார்.

அவர் தொழிலாளர்களை தொடர்ந்து மகிழ்ச்சியுடன் வைத்திருப்பதால் தொழிலாளர்களும் மிகவும் உற்சாகமாகவும், விசுவாசமாகவும் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். தொழிலாளர்களுக்கு கட்டடங்களில் வீடு வாங்கிக்கொடுத்துவிட்டு அதற்காக மாதாந்திர கடன் தவணை தொகையை தனது கம்பெனி பணத்தில் இருந்து கட்டிக்கொண்டிருக்கிறார்.

விழாக்கோலம் பூண்ட ரயில்: மும்பை ரயிலில் கர்ப்பிணி பயணிக்கு வளைகாப்பு நடத்திய சக பெண் பயணிகள்!

மும்பையில் புறநகர் ரயில் மக்களின் உயிர் நாடியாக இருக்கிறது. அந்த ரயிலில் ஆண்களுக்கு நிகராக தினமும் ஆயிரக்கணக்கான பெண்களும் பயணம் செய்கின்றனர். அவர்கள் மும்பை புறநகர் பகுதியில் இருந்து தினமும் மும்பைக்... மேலும் பார்க்க

Nigeria Argungu Fishing: ஆயிரக்கணக்கானோர் மீன்பிடித்த அபூர்வ நிகழ்வு - நைஜீரியாவின் பாரம்பரிய விழா!

Nigeria Argungu FishingNigeria Argungu FishingNigeria Argungu FishingNigeria Argungu FishingNigeria Argungu FishingNigeria Argungu FishingNigeria Argungu FishingNigeria Argungu FishingNigeria Argungu ... மேலும் பார்க்க

மும்பை: "இரவில் கடை அடைத்த பிறகு கஷ்டப்படுகிறார்கள்" - வைரலாகும் தானியங்கி சிகரெட் வழங்கும் மெஷின்

மும்பையைச் சேர்ந்த ஒருவர் தானியங்கி சிகரெட் வழங்கும் இயந்திரத்தைத் தனது கடைக்கு வெளியில் நிறுவி இருக்கிறார்.மும்பை அருகில் உள்ள ஷாப்பூர் என்ற இடத்தில் இந்த மெஷின் அமைக்கப்பட்டுள்ளது. அதனைப் பார்த்து ஆ... மேலும் பார்க்க

2026 ASCRS Foundation: டாக்டர் அரவிந்த் ஹரிப்ரியா, R.வெங்கடேஷ்க்கு Chang-Crandall மனிதாபிமான விருது!

டாக்டர் அரவிந்த் ஹரிப்ரியா மற்றும் டாக்டர் R. வெங்கடேஷ் அவர்கள் 2026 ஆம் ஆண்டிற்கான Chang-Crandall மனிதாபிமான விருது பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ASCRS Foundation வாரியம் பெருமையுடன் அறிவிப்பது என்... மேலும் பார்க்க

`சொன்ன சொல்லை மீறிவிட்டீர்கள்'- ரன்வீர்சிங், ரோஹித் ஷெட்டிக்கு மீண்டும் பிஷ்னோய் கேங்க் மிரட்டல்!

மும்பையில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு குஜராத் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தைச் சேர்ந்த நபர் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தி இருந்தார். ரன்வீர்... மேலும் பார்க்க