செய்திகள் :

மும்பை: "இரவில் கடை அடைத்த பிறகு கஷ்டப்படுகிறார்கள்" - வைரலாகும் தானியங்கி சிகரெட் வழங்கும் மெஷின்

post image

மும்பையைச் சேர்ந்த ஒருவர் தானியங்கி சிகரெட் வழங்கும் இயந்திரத்தைத் தனது கடைக்கு வெளியில் நிறுவி இருக்கிறார்.

மும்பை அருகில் உள்ள ஷாப்பூர் என்ற இடத்தில் இந்த மெஷின் அமைக்கப்பட்டுள்ளது. அதனைப் பார்த்து ஆச்சரியப்பட்ட ஆதித்யா என்பவரும் அவரது நண்பர்களும் அதனைச் சோதித்துப் பார்க்க விரும்பினர்.

தானியங்கி மெஷினில் எந்தச் சிகரெட் என்ன விலை என்று தெளிவாக எழுதப்பட்டு இருந்தன. உடனே அதனைச் சோதித்துப் பார்க்க விரும்பிய ஆதித்யா, அதில் தான் விரும்பும் ஒரு சிகரெட் பட்டனை அழுத்தினார்.

உடனே யு.பி.ஐ. மூலம் பணம் கேட்கிறது. அதில் பணத்தைச் செலுத்தியவுடன் உள்ளே இருந்து மிகவும் அழகாக ஒரு சிகரெட் வெளியில் வருகிறது. அதனை ஆதித்யா ஒரு வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு அந்த மெஷினில் ஹெல்ப்லைன் நம்பர் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அந்த நம்பருக்கு போன் செய்தபோது அந்த மெஷின் கணேஷ் ஜாதவ் மற்றும் சூரஜ் ஆகியோருக்குச் சொந்தமானது என்று தெரிய வந்தது. அவர்கள் இரண்டு பேரும் உள்ளூர் பொறியாளர்கள் சிலரின் துணையோடு இந்த மெஷினை வடிவமைத்ததாகத் தெரிவித்தனர்.

இது போன்ற வேறு சில பொருள்களையும் தானியங்கி முறையில் வழங்கக்கூடிய மெஷின்களைத் தயாரிக்க திட்டமிட்டு இருப்பதாக அவர்கள் இரண்டு பேரும் தெரிவித்தனர்.

சிகரெட்
சிகரெட்

சிகரெட் தானியங்கி மெஷின் தயாரிக்க காரணம் என்ன என்று கேட்டதற்கு, ''இந்தப் பகுதியில் புகைப்பிடிப்பவர்கள் அதிகம். இரவு 10 மணிக்கு மேல் எங்கள் கிராமத்தில் கடைகளை அடைத்துவிடுகின்றனர். இதனால் 4 முதல் 5 கிலோமீட்டருக்கு சிகரெட் தேடி அலைகின்றனர்.

ஒருமுறை, கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பேர், சிகரெட் வாங்கச் சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு எளிதாகவும் பாதுகாப்பாகவும் இருக்க, நான் முடிவு செய்தேன். ஒரு சில பொறியாளர்களின் உதவியுடன் இந்த இயந்திரத்தை உருவாக்குகினோம்'' என்று தெரிவித்தார்.

2026 ASCRS Foundation: டாக்டர் அரவிந்த் ஹரிப்ரியா, R.வெங்கடேஷ்க்கு Chang-Crandall மனிதாபிமான விருது!

டாக்டர் அரவிந்த் ஹரிப்ரியா மற்றும் டாக்டர் R. வெங்கடேஷ் அவர்கள் 2026 ஆம் ஆண்டிற்கான Chang-Crandall மனிதாபிமான விருது பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ASCRS Foundation வாரியம் பெருமையுடன் அறிவிப்பது என்... மேலும் பார்க்க

`சொன்ன சொல்லை மீறிவிட்டீர்கள்'- ரன்வீர்சிங், ரோஹித் ஷெட்டிக்கு மீண்டும் பிஷ்னோய் கேங்க் மிரட்டல்!

மும்பையில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு குஜராத் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தைச் சேர்ந்த நபர் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தி இருந்தார். ரன்வீர்... மேலும் பார்க்க

love chocolate: ஊட்டியில் காதல் மழை - இதய வடிவ சாக்லேட்டுகள் வைரல்!

இதய வடிவ சாக்லேட்டுகள் வைரல்இதய வடிவ சாக்லேட்டுகள் வைரல்இதய வடிவ சாக்லேட்டுகள் வைரல்இதய வடிவ சாக்லேட்டுகள் வைரல்இதய வடிவ சாக்லேட்டுகள் வைரல்இதய வடிவ சாக்லேட்டுகள் வைரல்இதய வடிவ சாக்லேட்டுகள் வைரல்இதய ... மேலும் பார்க்க

`நடைபாதையில் சென்ற பைக்; காலால் தடுத்து நிறுத்திய மூதாட்டி' - அவ்வை சண்முகி என புகழும் நெட்டிசன்கள்!

கேரளாவில் சாலை ஒன்றில் கார் உள்ளிட்ட வாகனங்கள் நெரிசலாக நின்றுகொண்டிருந்த நிலையில், நடைபாதையில் சில பைக்குகள் வேகமாக சென்றுகொண்டிருந்தன. அப்போது நடைபாதையில் மூதாட்டி ஒருவர் நடந்து வந்துகொண்டிருந்தார்.... மேலும் பார்க்க

அளவுக்கு அதிகமான மருந்து கொடுத்த டாக்டர்கள்? எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்தபோது உயிரிழந்த 6 வயது சிறுவன்

உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள கே.பி.ஹெல்த்கேர் சென்டருக்கு 6 வயது சிறுவனை அவனது தந்தை பிரசாந்த் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க அழைத்து வந்தார். டாக்டர்கள் அச்சிறுவனுக்கு ஊசி போட்டு ஸ்கேன் ... மேலும் பார்க்க