செய்திகள் :

அளவுக்கு அதிகமான மருந்து கொடுத்த டாக்டர்கள்? எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்தபோது உயிரிழந்த 6 வயது சிறுவன்

post image

உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள கே.பி.ஹெல்த்கேர் சென்டருக்கு 6 வயது சிறுவனை அவனது தந்தை பிரசாந்த் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க அழைத்து வந்தார். டாக்டர்கள் அச்சிறுவனுக்கு ஊசி போட்டு ஸ்கேன் எடுத்தனர். வழக்கமாக எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எடுத்த சிறிது நேரத்தில் மயக்க நிலையில் இருந்த சிறுவன் சுயநினைவுக்கு வரவேண்டும். ஆனால் ஸ்கேன் எடுத்து அதிக நேரமான பிறகும் சிறுவன் சுய நினைவுக்கு வரவில்லை. அவனை டாக்டர்கள் சோதித்து பார்த்தனர். ஆனால் எந்த வித முன்னேற்றமும் இல்லை. இதனையடுத்து டாக்டர்கள் வேறு ஒரு ஊசி போட்டனர்.

அப்படி இருந்தும் சிறுவன் மயக்க நிலையில் இருந்தான். இதையடுத்து அவனை அவனது பெற்றோர் அருகில் உள்ள வேறு ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவனை சோதித்த போது சிறுவன் இறந்திருந்தான். சிறுவனின் மரணம் அவனது பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

தங்களது மகனின் மரணத்திற்கு டாக்டர்கள் தான் காரணம் என்று பிரசாந்த் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ''எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எடுக்கப்படும் முன்பு சிறுவனை அழைத்து சென்று சோதனை செய்து ஊசி போட்டனர்.

இச்சோதனையின் போது டாக்டர்கள் அளவுக்கு அதிகமான மருந்தை செலுத்தியுள்ளனர். அல்லது தவறான மருந்தை செலுத்தி இருக்கவேண்டும். இதனால்தான் எங்களது மகனின் உடல்நிலை மோசமடைந்து மயக்க நிலைக்கு சென்றான். எங்களது மகனின் மருத்துவ அறிக்கை குறித்து கேட்டதற்கு அவர்கள் திருப்திகரமாக பதிலளிக்கவில்லை. எங்களது மகனின் மரணத்திற்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் சென்டரின் கவனக்குறைவுதான் காரணமாகும். எனவே அதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்''என்றார்.

சிறுவனின் உறவினர்கள் சம்பந்தப்பட்ட ஹெல்த்கேர் சென்டருக்கு வெளியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஹெல்த்கேர் சென்டரை பூட்டி நியாயமான விசாரணை நடைபெறவேண்டும் என்று கோரி போராடினர். சிறுவனின் உறவினர் ஒருவர் இது குறித்து கூறுகையில், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க வந்தபோது சிறுவன் நன்றாகத்தான் இருந்தான். ஸ்கேன் எடுத்து அரை மணி நேரத்திற்கும் மேலாக சிறுவன் சுயநினைவு திரும்பவில்லை. டாக்டர்கள் அவனது சோதித்து பார்த்தபோது அவனது உடல் குளிர்ந்திருந்தது''என்றார்.

இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீஸார் சிறுவன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி இருக்கின்றனர். அறிக்கை வந்தவுடன் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

எங்கள் சாதி `மனிதநேயம்' - சாதியில் இருந்து ஒட்டுமொத்தமாக விடுதலை பெற்ற மகாராஷ்டிரா கிராமம்!

சாதிப்பிரச்னை நாடு முழுவதும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. எதாவது ஒரு வகையில் மக்கள் சாதிப்பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். காதல் திருமணங்கள்தான் இதில் அதிக அளவில் சாதிப்பிரச்னையை சந்திக்கின்றன. மகா... மேலும் பார்க்க

'யூடியூப்பில் ஃபாலோவர்ஸ் இல்லை' - கோபத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள ஸ்டூடியோவிற்கு தீ வைத்த வாலிபர்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள கார்வா என்ற இடத்தைச் சேர்ந்த விதயக் பிரஜாபதி (27) என்பவர் பெரிய அளவில் பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்தார். அதில் வீடியோக்களைப் போட தனது வீட... மேலும் பார்க்க

ஒரே நதி... ஐந்து நிறங்கள்; நகரும் ஓவியம்; - கொலம்பியாவின் இந்த மாயாஜாலத்தை நம்புவீர்களா?

நகரும் ஓவியம்கொலம்பியாவின் அடர்ந்த காடுகளுக்குள் ஒளிந்திருக்கும் கானோ கிரிஸ்டலேஸ் (Caño Cristales), சாதாரண கண்களுக்கு ஒரு நதியாகத் தெரியாது; அது ஒரு நகரும் ஓவியம்.இந்த நதி ஆண்டு முழுவதும் வண்ணமயமாக இர... மேலும் பார்க்க

Retardmaxxing: புத்திசாலிகள் தோற்கும் இடத்தில், `மக்கு' வேஷம் போட்டு ஜெயிப்பது எப்படி? - Gen Z Term

இணையவாசிகளின் (குறிப்பாக Gen Z) அகராதியில் தினமும் புதுப்புது வார்த்தைகள் முளைக்கின்றன. Looksmaxxing (அழகை மெருகேற்றுவது), Mewing (தாடையை சீர் செய்வது) வரிசையில் இப்போது லேட்டஸ்ட் வரவுதான் இந்த Retard... மேலும் பார்க்க

`இரவில் படுக்கச்சென்ற இளம்பெண் இச்சாதாரி பாம்பாக மாறினாரா?' - பாம்பு தோல், வளையலை விட்டுவிட்டு மாயம்

உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் உள்ள சிகன்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரீனா(20). இப்பெண் இரவில் தனது படுக்கைக்கு படுக்க சென்றார். ஆனால் காலையில் அவரது படுக்கைக்கு சென்றபோது அவரை காணவில்லை... மேலும் பார்க்க

பழைய சிம் கார்டுகளில் இருந்து 191 கிராம் தங்கம் எடுத்த சீனர்! - இது நமக்கு சாத்தியமா?

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் ஹுயிஜோ நகரை சேர்ந்தவர் கியாவோ (Qiao). இவர் பயன்படுத்தாத சிம் கார்டுகளில் இருந்து சுமார் 191 கிராம் தங்கத்தை பிரித்து எடுத்துள்ளதாக கூறி வெளியிட்ட வீடியோ சமீபத்தில் சமூக... மேலும் பார்க்க