செய்திகள் :

Pookie: "ஒவ்வொரு முறை இந்தப் படத்தை நான் பார்த்தபோதும் அழுதேன்"- 'பூக்கி' படம் குறித்து விஜய் ஆண்டனி

post image

விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் 'மார்கன்'. இப்படத்தில் விஜய் ஆண்டனியின் அக்கா மகன் அஜய் தீஷன் நடித்திருந்தார்.

தற்போது விஜய் ஆண்டனி தயாரித்து, இசையமைத்திருக்கும் படத்தில் 'பூக்கி' (Pookie) படத்தில் அஜய் தீஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தை சலீம் பட ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா இயக்கியிருக்கிறார். 'பூக்கி' (Pookie) படம் இன்று ( பிப்.13) வெளியாகியிருக்கிறது.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய விஜய் ஆண்டனி, "படத்தின் பெயர் 'பூக்கி' என்று இருப்பதைத் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

'பூக்கி'
'பூக்கி'

அந்தக் காலத்தில் சாமி, நாதா, அத்தான் என்று கூப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். இன்று அது 'பூக்கி'-யாக மாறியிருக்கிறது.

பெரியவர்களும் இந்தப் படத்தை தாராளமாகப் பார்க்கலாம். ஜென்சி மாதிரியான படமாக இருந்தாலும் கலகலப்பாகவும், எமோஷனலாகவும் எல்லோருக்கும் புரிகின்ற, பிடிக்கின்ற மாதிரியான படமாக இருக்கும்.

எடிட் செய்த பிறகு இந்தப் படத்தை நிறைய முறை பார்த்தேன். ஒவ்வொரு முறை இந்தப் படத்தை நான் பார்த்தபோதும் அழுதிருக்கிறேன். எல்லோருக்கும் பிடித்த நல்ல படமாக நிச்சயம் இந்தப் படம் இருக்கும்" என்று பேசியிருக்கிறார்.

மைலாஞ்சி விமர்சனம்: வழக்கமான முக்கோண காதல் கதைதான்; `மிஸ்டர் நேர்மை' நாயகன் ஜெயித்தாரா?

ஊட்டியில் வசித்து வரும் சாரு (கிருஷா குரூப்) பெற்றோர் அரவணைப்பின்றி சித்தியால் வளர்க்கப்படுகிறார். சித்தி ஏற்பாடு செய்யும் திருமணத்தில் துளியும் விருப்பமில்லாத சாரு, அங்கிருந்து எவரையாவது காதலித்து வெ... மேலும் பார்க்க

Mrunal Thakur: `பிப்.14 ஆம் தேதி எனக்கு திருமணமா?' - மிருணாள் தாகூர் விளக்கம்

நடிகர் தனுஷ், நடிகை மிருணாள் தாகூர் இருவரும் காதலித்து வருவதாகவும், வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் 'India Today' ஊ... மேலும் பார்க்க

With Love: "`இதுதான் சக்ஸஸா'ன்னு கேட்டேன், அதுக்கு அப்பா என்ன பார்த்து..!"- சௌந்தர்யா ரஜினிகாந்த்

'டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'வித் லவ்'. இயக்குநர் மதன் இயக்கியிருக்கும் 'வித் லவ்' படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் 'டூரிஸ்ட் ஃ... மேலும் பார்க்க

"இந்தப் படத்தில் இருந்துதான் எனக்கு எல்லாமே தொடங்கியது" - 'மௌனம் பேசியதே' குறித்து நெகிழும் த்ரிஷா

இயக்குநர் அமீர் இயக்கத்தில் நடிகர் சூர்யா, த்ரிஷா, லைலா நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் 'மௌனம் பேசியதே'. காதலர் தினத்தை முன்னிட்டு இப்படம் வரும் பிப். 13 ஆம் தேதி ரீ... மேலும் பார்க்க

காதலர் தினம்: புதுப்படங்களுடன் போனஸ் பூங்கொத்துக்களாக வரும் ரீரிலீஸ் படங்கள்! - ஷார்ட் & ஸ்வீட் லுக்

காதலர் தினமான பிப்ரவரி 14, சினிமா ரசிகர்களுக்கு ரொம்பவே கொண்டாட்டமான நாளாக மலர்கிறது. ஒரு நாள் முன்னதாக, பிப்ரவரி 13ல் அரை டஜன் நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகிறது. அதற்கு சவால் விடும் வகையில் ரீ ரிலீஸ்... மேலும் பார்க்க