செய்திகள் :

விஜய் : 'இந்த ஆண்டு மட்டும்தான் கோடைக் காலம் வருகிறதா என்ன?' | மகளிருக்கு ரூ.5000

post image

முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைத் தொடங்கிவைத்து, அதன் மூலம் தகுதியுள்ளப் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 'தேர்தல் நெருங்குவதால் இந்த திட்டத்தை மத்திய அரசு முடக்க முயற்சி செய்கிறது' எனக் குறிப்பிட்டு, அடுத்த மூன்று மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகையும், கோடைக்கால சிறப்புத் தொகையாக ரூ.2000 சேர்த்து ரூ.5000 மகளிர் உரிமைத் தொகை பெறும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்திருக்கிறார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

மக்களிடையே இந்த அறிவிப்பு வரவேற்பைப் பெற்றிருந்திருந்தாலும் எதிர்கட்சிகள் இதனை விமர்சனம் செய்துவருகின்றனர். அந்தவகையில் தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த அறிவிப்பை விமர்சித்து பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " புதிதாகக் கோடைக் காலச் சிறப்புத் தொகை ரூ.2000 எனத் திடீரென அறிவித்தது எப்படி? இந்த ஆண்டு மட்டும்தான் கோடைக் காலம் வருகிறதா என்ன? வழக்கமாக மாதந்தோறும் 15ஆம் தேதி வரவு வைக்கப்படும் மகளிர் உரிமைத் தொகை, குறிப்பாக இன்று 13ஆம் தேதி வரவு வைக்கப்பட்டு அறிவிக்கப்படுவது ஏன்?

இத்தனைக்கும் காரணம் வீதிக்கு வீதி மட்டுமில்லாமல், வீட்டுக்கு வீடு ஒலிக்கும் விசில் சத்தம்தான். குறிப்பாக, ஒட்டுமொத்த மகளிரின் விசில் சின்னத்திற்கான பேராதரவு அலையைக் கண்டு உண்டான அச்சம் மட்டுமே இதற்குக் காரணம். இப்போதுகூடப் பாருங்கள். ஒன்று மட்டும் உறுதியாகத் தெளிவாகிறது. நாம் மட்டுமே இவர்களுக்கு அச்சமூட்டச் செய்யும் ஆகப்பெரும் வெற்றிக்கான மக்கள் சக்தி.

அது மட்டுமா? இவர்களை வலிய நல்லது செய்ய வைக்கும் வலிமையான அரசியல் பெருவிசையும் நாம்தான். அதுமட்டுமா? தி.மு.க. தனக்குப் போட்டியாகக் கருதுவதும் தன்னை வெல்லப் போகும் ஒரே மக்கள் சக்தி எனக் கருதுவதும் த.வெ.க.வைத் தான் என்பதை இந்த அறிவிப்பின் மூலம் தமிழகத்தின் தற்போதைய முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதி செய்துள்ளார்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

எனவே, என்னருமைத் தாய்மார்களே, அக்கா, தங்கைகளே, உங்கள் மகன், உங்கள் அண்ணன், உங்கள் தம்பி விஜயின் அரசியல் வருகையின் தாக்கத்தால் கிடைத்த இந்தத் உரிமைத் தொகையைச் சந்தோசமாக வாங்கிக்கொள்ளுங்கள். நம் ஆட்சி மலர்ந்ததும், அரசியல் ஆதாயத்திற்காகச் சுயநலமாகச் செயல்படும் இவர்களைப் போலன்றி, உண்மையான அக்கறையுடன் நம் மக்களுக்கு அனைத்து வகைகளிலும் அனைத்து வழிகளிலும் நல்லது மட்டுமே செய்வோம். அது உறுதி. தி.மு.க. அரசுக்குத் தேர்தல் தோல்விக்கான திகில் ஊட்டும் அளவிற்கு விசில் ஊதும் தமிழ்நாட்டு மகளிருக்கு என் மனமார்ந்த நன்றி" என்று பதிவிட்டிருக்கிறார்.

'வரி வேண்டாம்' சொந்தக் கட்சியினரே எதிராக வாக்கு; 'பார்த்துக்கொள்கிறேன்' மிரட்டும் ட்ரம்ப் |Explained

'தன் கையே கண்ணைக் குத்திய கதை போலத் தான் தற்போது அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. உலக நாடுகளைத் தனக்குப் பணிய வைக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையிலெடுத்த அஸ்திரம் 'வரி'. இதற்கு ட்ரம்... மேலும் பார்க்க

TVK: சேலம் மேடைக்கு வந்த விஜய்; தொடங்கியது தவெக நிர்வாகிகள் கூட்டம்!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் மும்முரமாக தயாராகி வருகின்றன. அந்தவகையில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை தவெக விஜய் நடத்தி வருகிறார். கடந்த 2ஆம் தேதி பனையூரில் ந... மேலும் பார்க்க

மகளிருக்கு ரூ.5000: "பயத்தில் வந்த அறிவிப்பு; பெண்கள் நம்பி விடுவார்களா என்ன?" - எடப்பாடி பழனிசாமி

முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைத் தொடங்கிவைத்து, அதன் மூலம் தகுதியுள்ளப் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், 'தேர்தல் நெருங்குவதால் இந்த... மேலும் பார்க்க

`சுவர் அரசியல் ஏன் தவிர்க்க முடியாதது?' - தேர்தல் கால சுவர்களும் போஸ்டர்களும் | நினைவுச் சுவடுகள் 5

இன்று தொடுதிரையில் கணநேரத்தில் நாட்டு நடப்புகளை அறிகிறோம். தலைவர்கள் சமுக வலைதளம் மூலம் உடனுக்குடன் மக்களிடம் பேசுகிறார்கள். அனால் நாம் கடந்து வந்த தேர்தல் பாதை இத்தனை எளிதானதன்று! திண்ணை பிரசாரம், தெ... மேலும் பார்க்க

சேலத்தில் இன்று பேசுகிறார் விஜய் - சீலநாயக்கன்பட்டியில் ஏற்பாடுகள் தீவிரம்

தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அனைவராலும் உற்று நோக்கப்பட்டு வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்த நிகழ்ச்சி இன்று சேலத்தில் நடைபெறுவது அரசியல் தளத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.சேலம் ... மேலும் பார்க்க

மகளிருக்கு ரூ.5,000: "தோல்வி உறுதி என்று தெரிந்ததால், ஆட்சியைத் தக்கவைக்க..!" - ஜெயக்குமார் காட்டம்

முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைத் தொடங்கிவைத்து, அதன் மூலம் தகுதியுள்ளப் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், 'தேர்தல் நெருங்குவதால் இந்த தி... மேலும் பார்க்க