செய்திகள் :

காதலர் தினம்: புதுப்படங்களுடன் போனஸ் பூங்கொத்துக்களாக வரும் ரீரிலீஸ் படங்கள்! - ஷார்ட் & ஸ்வீட் லுக்

post image

காதலர் தினமான பிப்ரவரி 14, சினிமா ரசிகர்களுக்கு ரொம்பவே கொண்டாட்டமான நாளாக மலர்கிறது. ஒரு நாள் முன்னதாக, பிப்ரவரி 13ல் அரை டஜன் நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகிறது. அதற்கு சவால் விடும் வகையில் ரீ ரிலீஸ் படங்கள் நான்கு களத்தில் குதிக்கிறது. வரும் வெள்ளியன்று காதலை மையப்படுத்தி திரைக்கு வரும் படங்களின் ஷார்ட் அண்ட் ஸ்வீட் பார்வை இது.

மைலாஞ்சியில்

தமிழ் சினிமாவின் என்பது, தொண்ணூறு காலகட்டங்கள் காதலுக்கு வசந்தகாலம் எனலாம். '16 வயதினிலேயே', 'மூன்றாம் பிறை', 'மௌனராகம்', 'இதயம்', 'காதலன்', 'வண்ண வண்ண பூக்கள்', 'குணா', 'அலைபாயுதே', 'ஆட்டோகிராஃப்', 'அழகி', 'காதல் கோட்டை', 'கோகுலத்தில் சீதை', 'இதயம்', 'காதலர் தினம்' என காதல் படங்கள் வரிசை கட்டி வெளியாகி வரவேற்பை அள்ளியது.

ஆனால், கொரோனாவிற்கு பிறகு ஆக்ஷன், த்ரில்லர், ஹாரர் ஜானர்களுக்கு மக்கள் தாவியதில், காதல் படங்களின் வரத்து குறைந்தன. இந்தாண்டு காதல் சீஸன் மீண்டும் துளிர்ந்திருக்கிறது போல.

'மை லார்டு', 'மைலாஞ்சி', 'பூக்கி', 'கா', ஸ்வீட்டி நாட்டி கிரேஸி', 'ட்ரீம் கேர்ள்' தவிர, 'மௌனம் பேசியதே', 'மின்னலே', 'காதலர் தினம்', 'உயிருள்ளவரை உஷா' ஆகிய ரீ ரிலீஸ் படங்களும் திரைக்கு வருகின்றன.

'மை லார்டு'

ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா, குரு சோமசுந்தரம் ஆகியோர் நடித்திருக்கும் 'மை லார்ட்'. சமீபத்தில் சசிகுமார் இப்படம் குறித்து பேசுகையில், ''இந்த படம் கோர்ட்டை மைய​மாக கொண்ட படம் இல்​லை. படத்​தில் நீதிமன்ற காட்​சிகள் பத்து நிமிடம்​தான் வரும். ஆனால் இந்​தக் கதை அதி​காரத்​தைப் பற்றியது. அதி​காரம் ஒரு எளிய, கடைக்​கோடி மனிதனின் கையில் கிடைத்​தால் அவன் அதை எப்​படிப் பயன்​படுத்​து​வான்? அவன் அந்த அதி​காரத்​துடன் என்ன செய்ய முடி​யும்? என்​ப​தையே இந்த படம் கேள்​வி​யாக முன்​வைக்​கிறது. ‘மை லார்ட்’ என்ற வார்த்தை அந்த மனிதனின் மனநிலை​யை​யும் முத்​துச்​சிற்பி என்ற நபரை​யும் குறிக்​கிறது.''என்கிறார் சசிகுமார்.

ட் ரீம் கேர்ள்

'மைலாஞ்சி'

வெற்றிமாறன் வெளியீட்டில் அஜயன்பாலா இயக்கத்தில் இளையராஜா இசையில் வெளியாகும் படம் 'மைலாஞ்சி'. ''ஊட்டியை மையமாகக் கொண்ட காதல் கதை 'மைலாஞ்சி'. இதில் ஸ்ரீராம் கார்த்திக் கதை நாயகனாக வருகிறார். இதயத்தை திருடாதே நாகார்ஜுனா நினைவு வருவதை உங்களால் தடுக்க முடியாது. ஸ்ரீ ராம் பறவைகளை படம் பிடிக்கும் புகைப்படக்காரராக வருகிறார். கதை நாயகி கிரிஷா குருப். தவிர முனீஸ்காந்த், சிங்கம் புலி என பலர் நடித்துள்ளனர்'' என்கிறார் இயக்குநர் அஜயன் பாலா.

ஸ்வீட்டி நாட்டி கிரேஸியில்

ட் ரீம் கேர்ள்

'அழியாத கோலங்கள்' படத்தை இயக்கிய எம்.ஆர்.பாரதி இயக்கத்தில் புதுமுகங்கள் ஹர்ஷிதா, ஜீவா நடித்திருக்கும் படம் 'ட் ரீம் கேர்ள்'. ''இந்தப் படம் அழகான ஃபில் குட் காதல் கதை. ஹீரோவுக்கு சினிமாவில் இயக்குநர் ஆக வேண்டும் என கனவு. ஹீரோயினுக்கு ஒரு பாடகி ஆகி விட வேண்டும் என கனவு. இவர்களுக்குள் காதல் வருகிறது. அதன் பிறகு என்னவாகிறார்கள் என்பதே படத்தின் கதை லைன்'' என்கிறார் இயக்குநர் எம்.ஆர்.பாரதி.

'பூக்கி'

விஜய் ஆண்டனியின் உறவினரான அஜய் திஷன் கதை நாயகனாகவும், புதுமுகம் தனுஷா கதை நாயகியாகவும் நடித்திருக்கும் படம் 'பூக்கி'. இவர்கள் தவிர பாண்டிய​ராஜன், சுனில், இந்​து​மதி மணி​கண்​டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்​டி, ஆதித்யா கதிர் என பர் நடித்திருக்கும் இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளரான கணேஷ் சந்திரா, இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

கா படத்தில்

'கா - தி ஃபாரஸ்ட்'.

ஆண்ட் ரியாவின் ஹீரோயின் சென்ட் ரிக் படம் 'கா'. ஆக்ஷன் த்ரில்லர். சில வருடங்களாக ரிலீஸுக்கு காத்திருந்த 'கா' இப்போது களத்தில் குதித்திருக்கிறாது. நாஞ்சில் இயக்கியிருக்கும் இப்படத்தில் ஆண்ட்ரியாவுடன் , சலீம் கௌஸ், மாரிமுத்து, கமலேஷ், அக்ஷிதா, நவீன், அர்ஜுன் சிங் என பலரும் நடித்துள்ளனர். சுந்தர் சி. பாபு இசையமைத்திருக்கிறார்.

ஸ்வீட்டி நாட்டி கிரேஸி

தெலுங்கில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நாயகனாக நடித்தவர் த்ரிகுண். தமிழில் அவர் 'தங்கமகன்', 'டெவில்', 'கடாவர்' என சில படங்களில் நடித்திருக்கிறார். அவர் தமிழில் ஹீரோவாக அறிமுகமாகும் படம் 'ஸ்வீட்டி நாட்டி கிரேஸி'. நாயகிகளாக ஸ்ரீ ஜீத்தா கோஷ், இனியா, ராதா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் ரவி மரியா, தம்பி ராமைய்யா, சத்யன், சாம்ஸ்,மதன்பாபு, விஜய் டிவி தனசேகர், வினோத் நடித்திருக்கும் இப்படம் அடல்ட் காமெடி ஜானர் ஆகும்.

இவை தவிர புதுமுகங்கள் டீமுடன் 'தெரிஞ்சா காதலிங்க' என்ற படமும் வெளியாகிறது. 14ம் தேதி அன்று கதிரின் இயக்கத்தில் 'காதலர் தினம்', அர்ஜூன் இயக்கிய 'சீதா பயணம்' ஆகிய படங்களும் திரைக்கு வருகின்றன.

உயிருள்ளவரை உஷா.

நேரடி தமிழ்ப் படங்கள் தவிர தெலுங்கு, கன்னட படங்களும் அன்று ரிலீஸ் ஆகிறது. இதனுடன் (பிப்ரவரி 13ல்) டி.ராஜேந்தரின் 'உயிருள்ளவரை உஷா', சூர்யாவின் 'மௌனம் பேசியதே', மாதவனின் 'மின்னலே' ஆகிய படங்கள் வெளியாகிறது.

ஏற்கனவே அரை டஜனுக்கும் அதிகமான நேரடி படங்கள் வரிசை கட்டும் போது, ரீ ரிலீஸ் படங்களின் எண்ணிக்கையும் நான்கு ஆனதில், சின்ன பட்ஜெட் படங்கள் கொஞ்சம் திணறத்தான் செய்கின்றன. ரி ரிலீஸ் ஆகும் படங்களில் எல்லாம் பாடல்கள் ஹிட். பெரிய நட்சத்திர பட்டாளம் என எல்லாமே இருப்பதால் ஜென் சி இளைஞர்கள் ரீ ரிலீஸ் படங்களை கவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதுப்படங்களோடு கிளாசிக் கலெக்ஷன்களும் வெளியாவதால் ரீ ரிலீஸ் படங்கள் காதலர் தினத்தில் ஒரு போனஸாகவும் கருதப்படுகிறது.

மௌனம் பேசியதே: "என்னோட ஹீரோ சூர்யா சார் கூட நடிச்சது சந்தோஷமா இருந்துச்சு" - நடிகை லைலா

இயக்குநர் அமீர் இயக்கத்தில் நடிகர் சூர்யா, த்ரிஷா, லைலா நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் 'மௌனம் பேசியதே'. காதலர் தினத்தை முன்னிட்டு இப்படம் வரும் பிப். 13 ஆம் தேதி ரீ... மேலும் பார்க்க

Kadhalar Dhinam: பரபரப்பான மும்பை ஸ்டேஷனில் ஷூட்; 1 கோடிக்கு செட் - 'காதலர் தினம்' பட சுவாரஸ்யங்கள்!

காதலர் தினத்தை முன்னிட்டு 'உயிருள்ளவரை உஷா', 'மௌனம் பேசியதே', 'மின்னலே', 'காதலர் தினம்' ஆகிய திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் ஆகின்றன. இதில் இயக்குநர் கதிர் இயக்கத்தில் 1999-ம் ஆண்டு வெளிவந்த 'காதலர் தினம்' 90... மேலும் பார்க்க

Ponnambalam: "ஷூட்டிங் ஸ்பாட்ல குடிப்பேன்னு கதை சொல்லிட்டு இருக்காங்க!" - பொன்னம்பலம் பேட்டி

‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’ போன்ற படங்களின் மூலம் ஸ்டண்ட்மேனாக சினிமாவுக்குள் வந்த நடிகர் பொன்னம்பலம், பல்வேறு வில்லன் கேரக்டர்களில் நடித்து மக்களுக்கு பரிச்சயமானார்.கடந்த சில வருடங்க... மேலும் பார்க்க

"இன்றையக் காலக்கட்டத்தில தியேட்டருக்கு நடிப்பதா, ரீல்ஸுக்கு நடிப்பதா எனத் தெரியல.!"- சரத்குமார்

'கொம்பு சீவி' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாதவ் தாசன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'ஆழி' படத்தில் நடித்திருக்கிறார் சரத்குமார்.கடலை மையமாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில... மேலும் பார்க்க