செய்திகள் :

"இன்றையக் காலக்கட்டத்தில தியேட்டருக்கு நடிப்பதா, ரீல்ஸுக்கு நடிப்பதா எனத் தெரியல.!"- சரத்குமார்

post image

'கொம்பு சீவி' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாதவ் தாசன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'ஆழி' படத்தில் நடித்திருக்கிறார் சரத்குமார்.

கடலை மையமாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் தேவிகா சதீஷ், இந்திரஜித் ஜெகன், தாமரை செல்வி, வையாபுரி ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

 'ஆழி'
'ஆழி'

வரும் 27 ஆம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் 'ஆழி' படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா சில தினங்ளுக்கு முன் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய சரத்குமார், " 'ஆழி' ஒரு வித்தியாசமானத் திரைப்படம்.

இப்போது வரும் பெரும்பாலானப் படங்களில் ஆடல், பாடல், பிரமாண்டங்கள் இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் அந்த மாதிரியான பிரமாண்டங்கள் இருக்காது.

கதை தான் இந்தப் படத்தின் பிரமாண்டமே. இன்றைய பார்வையாளர்கள் பலவிதமான படங்களைப் பார்க்கிறார்கள், அவர்களுக்கு பார்ப்பதற்கு நிறைய இருக்கிறது.

சரத்குமார்
சரத்குமார்

ஷார்ட்ஸ் பார்க்கும் கலாசாரம் வந்துவிட்டது. இப்போது எதற்கு நடிப்பது என தெரியவில்லை. ஷார்ட்ஸுக்கு நடிப்பதா, ரீல்ஸுக்கு நடிப்பதா, டிவிக்கு நடிப்பதா, ஓடிடிக்கு நடிப்பதா, தியேட்டருக்கு நடிப்பதா என்ற குழப்பம் இருக்கிறது.

இந்த குழப்பம் எந்த நடிகருக்கும் தேவை இல்லை. எதில் நடித்தாலும் நடிப்பு நடிப்புதான். காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப நாம் மாற்றிக்கொள்ள வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.

Ponnambalam: "ஷூட்டிங் ஸ்பாட்ல குடிப்பேன்னு கதை சொல்லிட்டு இருக்காங்க!" - பொன்னம்பலம் பேட்டி

‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’ போன்ற படங்களின் மூலம் ஸ்டண்ட்மேனாக சினிமாவுக்குள் வந்த நடிகர் பொன்னம்பலம், பல்வேறு வில்லன் கேரக்டர்களில் நடித்து மக்களுக்கு பரிச்சயமானார்.கடந்த சில வருடங்க... மேலும் பார்க்க

"அந்த சமயத்துல நான் அழுதிட்டேன்"- ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடல் உருவான விதம் குறித்து ஏ.ஆர் ரஹ்மான்

‘மின்சார கனவு’ படத்தில் இடம்பெற்ற ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடல் உருவான விதம் குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார். ராஜிவ் மேனன் இயக்கத்தில் 1997ஆம் ஆண்டு வெள... மேலும் பார்க்க

மெளனம் பேசியதே: 'ஒரு தலைமுறையே இந்தப் படத்தை பார்த்திருக்க வாய்ப்பில்ல' - ரீ-ரிலீஸ் குறித்து சூர்யா

இயக்குநர் அமீர் இயக்கத்தில் நடிகர் சூர்யா, த்ரிஷா நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் 'மௌனம் பேசியதே'. காதலர் தினத்தை முன்னிட்டு இப்படம் வரும் பிப். 13 ஆம் தேதி ரீ- ரிலீ... மேலும் பார்க்க

Jana Nayagan: மறு ஆய்வுக்கு அனுப்ப திட்டம்; வழக்கை வாபஸ் பெற 'ஜனநாயகன்' படக்குழு கடிதம்!

வழக்கைத் திரும்பப் பெறுவதாகக் கூறி, படத் தயாரிப்பு நிறுவனம் பதிவுத்துறைக்கு கடிதம் அளித்துள்ளது. நடிகர் விஜயின் 'ஜனநாயகன்' படத்தில் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகத் த... மேலும் பார்க்க

`'அது உண்மையல்ல' - லோகேஷ் கனகராஜ் படத்திற்குப் பிறகு வேலைகள் தொடங்கும்' - இளையராஜா பயோபிக் அப்டேட்!

தனுஷ் தற்போது பல படங்களை தனது லைன்-அப்பில் கமிட் செய்து வைத்திருக்கிறார். 'போர்த் தொழில்' விக்னேஷ் ராஜா இயக்கும் 'கர' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இதைத் தொடர்ந்து 'அமரன்' ராஜ்குமார் பெரியசாம... மேலும் பார்க்க

Mamitha Baiju: "நானும் அதை அப்படித்தான் பார்க்கிறேன்!" - 'நாளை நாளை' ட்ரோல் குறித்து மமிதா பைஜூ

மமிதா பைஜூ தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியாக இருக்கிறார். கடந்தாண்டு அவரது நடிப்பில் வெளியான 'டியூட்' திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட்டடித்தது.'ப்ரேமலு' படத்தின் வெற்றிக்குப் பிறகே தமிழில் வரிசையாக... மேலும் பார்க்க