'துண்டுச் சீட்டை பார்த்து வாசிக்கும் ரோபோ!' - முதல்வர் ஸ்டாலினை கடுமையாக சாடும் ...
`'அது உண்மையல்ல' - லோகேஷ் கனகராஜ் படத்திற்குப் பிறகு வேலைகள் தொடங்கும்' - இளையராஜா பயோபிக் அப்டேட்!
தனுஷ் தற்போது பல படங்களை தனது லைன்-அப்பில் கமிட் செய்து வைத்திருக்கிறார். 'போர்த் தொழில்' விக்னேஷ் ராஜா இயக்கும் 'கர' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.
இதைத் தொடர்ந்து 'அமரன்' ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம், தமிழரசன் பச்சமுத்துவுடன் ஒரு படம் என அடுத்தடுத்து படங்களை கைவசம் வைத்திருக்கிறார் தனுஷ்.

இதுபோல, அப்துல் கலாம் மற்றும் இளையராஜாவின் பயோபிக் படங்களில் அவர் நடிக்கவிருக்கிறார் என்ற அறிவிப்பு முன்பே வந்திருந்தது. இதில் அப்துல் கலாம் பயோபிக் படத்தை 'ஆதிபுருஷ்' பட இயக்குநர் ஓம் ராவுத் இயக்கவிருக்கிறார்.
இளையராஜா பயோபிக் படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கவிருக்கிறார். 'கேப்டன் மில்லர்' படத்தைத் தொடர்ந்து தனுஷ் இரண்டாவது முறையாக அருண் மாதேஸ்வரனுடன் இணையவிருக்கிறார் என அப்படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.
ஆனால், அதன் பிறகு அப்படத்தைப் பற்றிய எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை.
கடந்த சில நாட்களாக இத்திரைப்படம் நிறுத்தி வைக்கப்பட்டது, இப்படத்தின் இயக்குநரை மாற்றவிருக்கிறார்கள் என்ற தகவல்கள் இணையத்தில் பரவி வந்தன.

ஆனால், அந்தத் தகவல்கள் உண்மையல்ல என்பதை தனுஷின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அகமது தெரிவித்திருக்கிறார்.
தனுஷ் நடிக்கும் இளையராஜா பயோபிக் திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கப்போவதில்லை எனப் பரவும் தகவல் உண்மையற்றது எனவும், லோகேஷ் கனகராஜின் 'டிசி' படத்தை முடித்த பிறகு திட்டமிட்டபடி இப்படத்திற்கான வேலைகளை அவர் தொடங்குவார் எனவும் அறிவித்திருக்கிறார்.
படத்தின் அடுத்தக் கட்ட அப்டேட்கள் கூடிய விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்திருக்கிறார்.



















