செய்திகள் :

நெல்லை: மருத்துவ அறிவுரையை மீறி வீட்டில் மனைவிக்கு பிரசவம் பார்த்த நபர்; வயிற்றிலேயே இறந்த குழந்தை!

post image

நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் தைக்கா தெருவைச் சேர்ந்தவர் நசீம் உசேன். இவர், கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி, முகம்மது அஸ்மா. கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அஸ்மாவுக்கு, அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், உசேன் இயற்கை மருத்துவத்தில் அதிக நம்பிக்கை கொண்டிருந்ததாகவும், அதனால், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அறிவுரைகளை ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட நசீம் உசேன்

இந்த நிலையில், உசேனின் மனைவி அஸ்மாவிற்கு கடந்த 6-ம் தேதி பிரசவவலி ஏற்பட்டுள்ளதாம். மருத்துவமனைக்கு தன் மனைவியை அழைத்துச் செல்லாமல்,  உசேன் வீட்டில் வைத்து பிரசவம் பார்த்துள்ளாராம். ஆனால், அவர் பார்த்த பிரசவத்தில் பிறந்த ஆண் குழந்தை, இறந்து வெளியே வந்திருக்கிறது. இந்தச் சம்பவம் வெளியில் தெரியாமல் இருக்க, இரவோடு இரவாக குழந்தையின் சடலத்தை புதைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த தகவல் பரவ மேலப்பாளையம் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கணவன் –மனைவி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீஸாரிடம் விசாரித்தோம், “நசீம் உசேன் – அஸ்மா தம்பதிக்கு ஏற்கெனவே இரண்டு முறை கருக்கலைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 19-ம் தேதி, `எங்களுக்கு ஆங்கில மருத்துவம் மற்றும் பரிசோதனையில் உடன்பாடு இல்லை' என நெல்லை மாநகராட்சி சுகாதாரத்துறைக்கு கடிதமாக கொடுத்துள்ளனர்.

மேலப்பாளையம் காவல் நிலையம்

இருவருக்கும் மாநகர நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் அனைத்து அறிவுரைகளும் வழங்கப்பட்டது. குறிப்பாக, பிரசவத்திற்கு 3 நாட்கள் முன்புகூட அவரிடம் அனைத்து துறை அதிகாரிகள் பேசியுள்ளார்கள். ஆனால், இயற்கை மருத்துவம் மீது தனக்கு அதீத நம்பிக்கை இருப்பதாக கூறியுள்ளார். வீட்டில் இருந்தே பிரசவம் பார்த்ததுடன் அப்பாவி சிசுவைக் கொன்ற கணவன், மனைவி ஆகிய இருவர் மீதும் பி.என்.எஸ் 91,94 ஆகிய பிரிவுகளின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரிவு 91-ன் படி 10 ஆண்டுகள் சிறை தண்டணையும், சிசுவின் சடலத்தை புதைத்த குற்றத்திற்காக பிரிவு 94-ன் படி கூடுதலாக 2 ஆண்டுகள் சிறை தண்டணையும் கிடைக்கக்கூடும்” என்றனர்.     

திருவள்ளூர்: மனைவியைக் கொன்றுவிட்டு நாடகம்... இளம்பெண்ணுடன் கணவன் சிக்கியது எப்படி?

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மதுராகண்டிகை பகுதியை சேர்ந்தவர் கொத்தனார் முருகன். இவரின் மனைவி ரேவதி. இவர்களின் மகள் கௌசல்யா (20). இவர் பி.எட்., இரண்டாமாண்டு பயின்று வந்தார். இவருக்கு கடந்த... மேலும் பார்க்க

நிழல் உலக மிரட்டல்: `190 இணையவழி மோசடி; ரூ.100 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள்' - இருவர் கைது!

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் 'டிஜிட்டல் கைது' மோசடியில் ஈடுபட்ட இரண்டு நபர்களை டெல்லி சைபர் பிரிவு காவல்துறை கைது செய்திருக்கிறது. டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்தப் புகாரில... மேலும் பார்க்க

கடனாளியாக்கிய சூதாட்டம்: ஒவ்வொரு முறையும் உடையை மாற்றி தப்பிய திருடன்; காட்டிக்கொடுத்த ஷூ!

மும்பையில் தினமும் ஏராளமான திருட்டு, செயின் பறிப்பு என பலதரப்பட்ட குற்றங்கள் நடக்கிறது. இதில் அதிகமான குற்றங்களில் துப்புத்துலங்காமலே போய்விடுகிறது. மும்பை சயான் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் பைக்கில்... மேலும் பார்க்க

மேம்பாலத்தின் அருகே நின்ற காரில் 3 பேரின் சடலம்; கொலையா? தற்கொலையா?

மேற்கு டெல்லியின் பீராகர்கி மேம்பாலம் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில், முதியவர் மற்றும் பெண் உட்பட மூன்று பேர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நேற்... மேலும் பார்க்க

Cyber: ரூ.1700 மதிப்புள்ள ஆடையை ஆர்டர் செய்து ரூ.6.82 லட்சத்தை இழந்த பெண்; என்ன நடந்தது?

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் வசிக்கும் பெண் ஒருவர் “Biba.in” என்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் ரூ.1700 மதிப்புள்ள ஆடை ஒன்றை ஆர்டர் செய்தார். அவர் பணத்தை ஆன்லைனில் செலுத்தாமல் ஆடையை வாங்கிய பிறகு பணம் ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: சக மாணவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட மாணவி; தாய் கண்டித்ததால் தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுச் சிறுமி அப்பகுதியிலுள்ள அரசுப்பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வந்தார்.அதே பள்ளியில் படித்து வந்த உறவினரான மாணவர் ஒருவர், அந்த மாணவியுடன் பழகி வ... மேலும் பார்க்க