செய்திகள் :

கிருஷ்ணகிரி: சக மாணவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட மாணவி; தாய் கண்டித்ததால் தற்கொலை

post image

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுச் சிறுமி அப்பகுதியிலுள்ள அரசுப்பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வந்தார்.

அதே பள்ளியில் படித்து வந்த உறவினரான மாணவர் ஒருவர், அந்த மாணவியுடன் பழகி வந்த நிலையில், மாணவியுடன் சேர்ந்திருப்பதுபோல் மொபைல் போனில் படம் எடுத்துள்ளார்.

தற்கொலை
தற்கொலை (சித்தரிக்கப்பட்ட படம்)

பின்பு, அந்தப் படத்தை மாணவியின் தாயாரின் மொபைல் போனுக்கு அனுப்பியிருக்கிறார்.

இதைப் பார்த்து கோபமடைந்த மாணவியின் தாயார், இதுகுறித்து விசாரித்து மகளைக் கண்டித்துள்ளார். இதனால் கவலை அடைந்த மாணவி, கடந்த 1 ஆம் தேதி வீட்டில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.

மயங்கி விழுந்த மாணவியை குடும்பத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குக் கடந்த சில நாள்களாகத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 7 ஆம் தேதி உயிரிழந்தார்.

மாணவியின் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Cyber: ரூ.1700 மதிப்புள்ள ஆடையை ஆர்டர் செய்து ரூ.6.82 லட்சத்தை இழந்த பெண்; என்ன நடந்தது?

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் வசிக்கும் பெண் ஒருவர் “Biba.in” என்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் ரூ.1700 மதிப்புள்ள ஆடை ஒன்றை ஆர்டர் செய்தார். அவர் பணத்தை ஆன்லைனில் செலுத்தாமல் ஆடையை வாங்கிய பிறகு பணம் ... மேலும் பார்க்க

தென்காசி: நகை, பணம் கொள்ளை; மீண்டும் அதே வீட்டின் முன்பு வீசிச் சென்ற ’பர்தா கொள்ளையன்!’

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகேயுள்ள பாம்புக்கோயில் சந்தையைச் சேர்ந்தவர் மாரியப்பன். அப்பகுதியில் பலசரக்கு கடை வைத்துள்ளார். கடந்த 6-ம் தேதி காலை சுமார் 10 மணியளவில் தன் மனைவி பார்வதியுடன் தன் உற... மேலும் பார்க்க

கோவை: 24 மாணவிகளின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரித்து மிரட்டல்; கல்லூரி மாணவர் கைதான பின்னணி என்ன?

கோவை மாவட்டம், பொள்ளாச்சி சாலையில் தனியார் கல்லூரி உள்ளது. அங்கு அண்மைக்காலமாக மாணவிகளின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து இன்ஸ்டராகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டதாக க... மேலும் பார்க்க

சென்னை: போதைப் பொருள் வழக்கில் சிக்கிய உதவி இயக்குநர், நடிகை - அதிர்ச்சி தரும் பின்னணி தகவல்கள்!

தலைநகரில் போதைப் பொருள் விற்பனை, கடத்தல் சம்பவங்களை தடுக்க போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு, சென்னை போலீஸ் கமிஷனர் அருண் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்த டீம், சென்னை முழுவதும் போதைப் பொருள் ... மேலும் பார்க்க

"வருந்துகிறேன்; அதற்காக நான் மன்னிப்பும் கேட்கிறேன்" - எப்ஸ்டீன் ஃபைல்ஸ் குறித்து பில் கேட்ஸ்

அமெரிக்காவில் சிறுமிகளைக் கடத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் கைதான ஜெஃப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019 ஆம் ஆண்டு சிறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார்.எப்ஸ்டீன் பல்வேறு தரப்பினருடன் உர... மேலும் பார்க்க

டெல்லி: இந்தாண்டின் முதல் 15 நாள்களில் 800 பேர் மாயம்; 'இது சராசரிதான்' - போலீஸ் `அதிர்ச்சி' பதில்!

டெல்லியில் 'நபர்கள் காணாமல் போகும் வழக்குகள்' தொடர்ந்து அதிகம் பதிவாகி வருகின்றன. PTI வெளியிட்டுள்ள தரவுகளின் படி, 2026-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை, 807 பேர் டெல்லியில் காணாமல் போயிர... மேலும் பார்க்க