செய்திகள் :

Cyber: ரூ.1700 மதிப்புள்ள ஆடையை ஆர்டர் செய்து ரூ.6.82 லட்சத்தை இழந்த பெண்; என்ன நடந்தது?

post image

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் வசிக்கும் பெண் ஒருவர் “Biba.in” என்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் ரூ.1700 மதிப்புள்ள ஆடை ஒன்றை ஆர்டர் செய்தார். அவர் பணத்தை ஆன்லைனில் செலுத்தாமல் ஆடையை வாங்கிய பிறகு பணம் கொடுப்பதாகத் தெரிவித்திருந்தார். ஆனால் ஆர்டர் செய்த அடுத்த நாள் சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு Biba.in நிறுவனத்திலிருந்து பேசுவதாகக் கூறி ஒருவர் போன் செய்தார்.

அந்த நபர் நீங்கள் ஆர்டர் செய்த பொருளுக்கான டெலிவரி முகவரி நாசிக்கில் இருப்பதாகக் கூறி டெலிவரி செய்ய முடியாது என்று தெரிவித்தார்.

அதேசமயம் ஆடைக்கான பணத்தை முன்கூட்டியே செலுத்தினால் வேறு ஒரு ஏஜென்சி மூலம் ஆடையை உங்களது முகவரிக்கே அனுப்பி வைப்பதாக அந்த நபர் தெரிவித்தார். உடனே அப்பெண் அந்த நபர் அனுப்பிய கியூஆர் கோடு மூலம் ரூ.1700.05 அனுப்பி வைத்தார்.

ஆன்லைன் மோசடி
ஆன்லைன் மோசடி

பணம் அனுப்பியவுடன் ஆன்லைன் வெப்சைட்டைச் சேர்ந்த நபர் அப்பெண்ணிற்கு போன் செய்து, நீங்கள் ரூ.1700.50 அனுப்புவதற்குப் பதில் ரூ.1700.05 அனுப்பி இருக்கிறீர்கள் எனவே மீண்டும் ரூ.1700.50 அனுப்புங்கள் என்றும், நீங்கள் ஏற்கனவே அனுப்பிய பணத்தை உங்களுக்குத் திரும்ப அனுப்பி விடுவோம் என்று தெரிவித்தார்.

அப்பெண்ணும் மீண்டும் ரூ.1700.50 அனுப்பி வைத்தார். ஆனால் அதேநபர் மீண்டும் போன் செய்து, நீங்கள் அனுப்பிய பணம் கிடைக்கவில்லை என்றும், மீண்டும் அனுப்பும்படியும், ஏற்கனவே அனுப்பிய பணத்தைத் திரும்ப கொடுத்துவிடுவதாக உறுதியளித்தார்.

அப்பெண்ணும் அனுப்பி வைத்தார். இரண்டு நாளில் அப்பெண் 10 ஆன்லைன் டிரான்ஸ்பர் மூலம் ரூ.6.82 லட்சத்தை அனுப்பி வைத்தார். இதில் 5 முறை ரூ.90 ஆயிரத்திற்கும் அதிகமான தொகையை அனுப்பினார். ஆனாலும் அவர் ஆர்டர் செய்த ஆடை டெலிவரி செய்யப்படவில்லை.

ஆனால் அக்கம்பெனியைச் சேர்ந்த மேலும் ஒருவர் போன் செய்து, மேலும் ரூ.2 லட்சம் டிரான்ஸ்பர் செய்யும்படியும், ஏற்கனவே அனுப்பிய பணத்தை உங்களுக்குத் திரும்ப அனுப்பிவிடுவோம் என்றும் தெரிவித்தார். ஆனால் இம்முறை அப்பெண் சந்தேகம் அடைந்து இது குறித்து தனது கணவரிடம் கலந்து ஆலோசித்தார். அவரது கணவர் இது மோசடி என்று தெரிவித்தார்.

அதன் பிறகுதான் இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் புனே சைபர் பிரிவு போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேம்பாலத்தின் அருகே நின்ற காரில் 3 பேரின் சடலம்; கொலையா? தற்கொலையா?

மேற்கு டெல்லியின் பீராகர்கி மேம்பாலம் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில், முதியவர் மற்றும் பெண் உட்பட மூன்று பேர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நேற்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: சக மாணவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட மாணவி; தாய் கண்டித்ததால் தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுச் சிறுமி அப்பகுதியிலுள்ள அரசுப்பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வந்தார்.அதே பள்ளியில் படித்து வந்த உறவினரான மாணவர் ஒருவர், அந்த மாணவியுடன் பழகி வ... மேலும் பார்க்க

தென்காசி: நகை, பணம் கொள்ளை; மீண்டும் அதே வீட்டின் முன்பு வீசிச் சென்ற ’பர்தா கொள்ளையன்!’

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகேயுள்ள பாம்புக்கோயில் சந்தையைச் சேர்ந்தவர் மாரியப்பன். அப்பகுதியில் பலசரக்கு கடை வைத்துள்ளார். கடந்த 6-ம் தேதி காலை சுமார் 10 மணியளவில் தன் மனைவி பார்வதியுடன் தன் உற... மேலும் பார்க்க

கோவை: 24 மாணவிகளின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரித்து மிரட்டல்; கல்லூரி மாணவர் கைதான பின்னணி என்ன?

கோவை மாவட்டம், பொள்ளாச்சி சாலையில் தனியார் கல்லூரி உள்ளது. அங்கு அண்மைக்காலமாக மாணவிகளின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து இன்ஸ்டராகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டதாக க... மேலும் பார்க்க

சென்னை: போதைப் பொருள் வழக்கில் சிக்கிய உதவி இயக்குநர், நடிகை - அதிர்ச்சி தரும் பின்னணி தகவல்கள்!

தலைநகரில் போதைப் பொருள் விற்பனை, கடத்தல் சம்பவங்களை தடுக்க போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு, சென்னை போலீஸ் கமிஷனர் அருண் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்த டீம், சென்னை முழுவதும் போதைப் பொருள் ... மேலும் பார்க்க

"வருந்துகிறேன்; அதற்காக நான் மன்னிப்பும் கேட்கிறேன்" - எப்ஸ்டீன் ஃபைல்ஸ் குறித்து பில் கேட்ஸ்

அமெரிக்காவில் சிறுமிகளைக் கடத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் கைதான ஜெஃப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019 ஆம் ஆண்டு சிறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார்.எப்ஸ்டீன் பல்வேறு தரப்பினருடன் உர... மேலும் பார்க்க