செய்திகள் :

தென்காசி: நகை, பணம் கொள்ளை; மீண்டும் அதே வீட்டின் முன்பு வீசிச் சென்ற ’பர்தா கொள்ளையன்!’

post image

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகேயுள்ள பாம்புக்கோயில் சந்தையைச் சேர்ந்தவர் மாரியப்பன். அப்பகுதியில் பலசரக்கு கடை வைத்துள்ளார். கடந்த 6-ம் தேதி காலை சுமார் 10 மணியளவில் தன் மனைவி பார்வதியுடன் தன் உறவினர் வீட்டு திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நெல்லை மாவட்டம், வீரவநல்லூருக்குச் சென்றுள்ளார். வீட்டில் மாரியப்பனின் தாயார் 80 வயதான மாரியம்மாள் மட்டும் தனியாக இருந்துள்ளார். இதனை நோட்டமிட்டு சுமார் 11 மணியளவில் பர்தா உடை அணிந்த மர்மநபர் ஒருவர், மாரியம்மாளை தாக்கிவிட்டு பீரோவின் மேலே வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து திறந்து பீரோவில் உள்ள 26 சவரன் தங்கநகை மற்றும் ரூ.7 லட்சம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

கடையநல்லூர்

கொள்ளையன் தாக்கியதில் மயக்கமடைந்த மாரியம்மாள் சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து வெளியே வந்து கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர், மாரியப்பனுக்கு தகவல் கூறினர். மாரியப்பன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து சொக்கம்பட்டி காவல் நிலையத்தில் மாரியப்பன் புகார் அளித்தார்.

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், பீரோ இருக்கும் இடம், பீரோவின் சாவி வைக்கும் இடம் தெரிந்த நபரே பீரோவை திறந்து நகை, பணத்தை எடுத்துச் சென்றிருக்க வேண்டும். நகை, பணத்தை தவிர வேறெந்த பொருளும் திருடுபோகவில்லை எனவே, மாரியப்பனுக்கு ஏற்கெனவே நன்கு அறிமுகமான நபர் யாரோ ஒருவர்தான் இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்க முடியும் என போலீஸார் சந்தேகித்தனர். அவரது பக்கத்து வீடுகளைச் சேர்ந்த நபர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், மாரிப்பனின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த டீக்கடைக்காரர், மாரியப்பனின் வீட்டின் முன்பு ஒரு சாக்குமூட்டை கிடப்பதைப் பார்த்து அவருக்கு தகவல் கூறினார்.

கடையநல்லூர்

அந்த சாக்குமூட்டையை மாரியப்பன் பிரித்துப் பார்த்தபோது அதில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள், பணம் அப்படியே இருந்துள்ளது. இருப்பினும், சி.சி.டி.வி காட்சிப்பதிவுகள் மூலம் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற அந்த பர்தா கொள்ளையன் யார்? நகைகள், பணத்தை மீண்டும் மாரியப்பனின் வீட்டின் முன்பு சாக்கு மூட்டையில் போட்டுச் சென்றது யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

கோவை: 24 மாணவிகளின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரித்து மிரட்டல்; கல்லூரி மாணவர் கைதான பின்னணி என்ன?

கோவை மாவட்டம், பொள்ளாச்சி சாலையில் தனியார் கல்லூரி உள்ளது. அங்கு அண்மைக்காலமாக மாணவிகளின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து இன்ஸ்டராகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டதாக க... மேலும் பார்க்க

சென்னை: போதைப் பொருள் வழக்கில் சிக்கிய உதவி இயக்குநர், நடிகை - அதிர்ச்சி தரும் பின்னணி தகவல்கள்!

தலைநகரில் போதைப் பொருள் விற்பனை, கடத்தல் சம்பவங்களை தடுக்க போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு, சென்னை போலீஸ் கமிஷனர் அருண் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்த டீம், சென்னை முழுவதும் போதைப் பொருள் ... மேலும் பார்க்க

"வருந்துகிறேன்; அதற்காக நான் மன்னிப்பும் கேட்கிறேன்" - எப்ஸ்டீன் ஃபைல்ஸ் குறித்து பில் கேட்ஸ்

அமெரிக்காவில் சிறுமிகளைக் கடத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் கைதான ஜெஃப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019 ஆம் ஆண்டு சிறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார்.எப்ஸ்டீன் பல்வேறு தரப்பினருடன் உர... மேலும் பார்க்க

டெல்லி: இந்தாண்டின் முதல் 15 நாள்களில் 800 பேர் மாயம்; 'இது சராசரிதான்' - போலீஸ் `அதிர்ச்சி' பதில்!

டெல்லியில் 'நபர்கள் காணாமல் போகும் வழக்குகள்' தொடர்ந்து அதிகம் பதிவாகி வருகின்றன. PTI வெளியிட்டுள்ள தரவுகளின் படி, 2026-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை, 807 பேர் டெல்லியில் காணாமல் போயிர... மேலும் பார்க்க

பஞ்சாப்: குருத்வாரா அருகில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் லக்கி ஒபேராய் சுட்டுக்கொலை; பின்னணி என்ன?

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள மாடல் டவுனில் இருக்கும் குருத்வாராவிற்கு வெளியில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் லக்கி ஒபேரா இன்று காலை தனது காரை நிறுத்திக்கொண்டிருந்தார்.அந்நேரம் இருசக்கர வாகனத்தில் வந்த மர... மேலும் பார்க்க

மேகாலயா: சட்டவிரோத நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்து; 18 உடல்கள் மீட்பு; பிரதமர் இரங்கல்; என்ன நடந்தது?

மேகாலயாவின் கிழக்கு ஜெயின்டியா மலைப்பகுதியில் அமைந்துள்ள சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் சிக்கி 18 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத... மேலும் பார்க்க