செய்திகள் :

”வரும் தேர்தலில் அதிமுக-வும், பாஜக-வும் மிகப்பெரிய தோல்வியை பெறப்போகிறது” - முதல்வர் ஸ்டாலின்

post image

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள கல்குறிச்சியில், தி.மு.க இளைஞர் அணியின் தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். எம்.பிக்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், இளைஞரணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இம்மாநாட்டிற்கு தேனி, திண்டுக்கல, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் இருந்து சுமார் 80 ஆயிரம் இளைஞர்கள் வெள்ளை நிற சீருடையில் அணிவகுத்து வந்தனர்.

கனிமொழி

டீ-சர்ட்டின் முன்புறம் முதல்வர் ஸ்டாலினின் படமும், ’தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற வாசகமும், பின்புறத்தில் உதயநிதி ஸ்டாலினின் படத்துடன் ‘தி.மு.க இளைஞரணி வெற்றி மாநாடு’ என்ற வாசகமும் இடம் பெற்றிருந்தது. 5.10 மணிக்கு மாநாட்டு பந்தலுக்கு வந்தார் முதல்வர். முதல்வர் வருகைக்காக நுழைவு வாயில் முதல் விழா மேடை வரை 500 மீட்டர் தூரத்திற்கு ‘ரேம்ப் வாக்’ மேடை அமைக்கப்பட்டிருந்தது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு வெள்ளிவாள் பரிசாக வழங்கப்பட்டது.

அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் முதல்வர் ஸ்டாலினுக்கு சட்டமன்ற கட்டிடத்தின் மாதிரி சிலையை பரிசாக வழங்கினர்.  முதலில் பேசிய தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி, “தென் தமிழ்நாட்டின்  இஃகு மனிதர் என்று எல்லோரும் பாராட்ட கூடிய ,புகழக்கூடிய, நமக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் பெருமை சேர்த்துக் கொண்டிருக்க கூடிய தலைவர்தான்  நம்முடைய முதல்வர் ஸ்டாலின். இது இளைஞரணியின் இரண்டாவது மாநாடு.

ரேம்ப் வாக் மேடையில் ஸ்டாலின்

இதற்கு முன்னால், கோவையிலும், தஞ்சையில் நடைபெற்ற “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாநாட்டையும் நாம் மிகச் சிறப்பாக நடத்திக் காட்டியிருக்கிறோம். இந்த இரண்டு மாநாடுகள் முடிந்த பிறகு, பலருக்கு இருந்த சந்தேகங்கள் அனைத்தும் தெளிவாகப் போக்கப்பட்டிருக்கும். நமக்கு எதிராக ஒரு கூட்டணி உருவாக இருக்கிறது. எல்லோரும் கையை கோர்த்துக்கொண்டு மேடையில்  ஏறுகிறார்கள். அது, அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி இல்லை.  

பா.ஜ.க தலைமையிலான கூட்டணிதான். அந்த கூட்டணியில் இருப்பவர்கள் அனைவரும் பிரதமருடன் கைகோர்த்து நிற்கிறார்கள். சில நாட்களுக்கு முன்னால் டெல்லியில் ஒரு பட்ஜெட் படிக்கப்பட்டது. அந்த பட்ஜெட் படிப்பதற்கு முன், முதல்வர், காலை நேரத்தில் தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். “தேர்தல் வருகிறது, அதனால் இந்த பட்ஜெட்டில் ஏதாவது தருவார்கள் என்று நினைக்கிறேன்” என்று. ஆனால், அப்போதும் தமிழ்நாட்டுக்கு அள்ளி இல்லை, கிள்ளிக்கூட கொடுக்க மாட்டோம் என்று சொல்லக்கூடிய அரசுதான் பா.ஜ.க துரோக அரசு.

உதயநிதி ஸ்டாலின்

கிராமப்புற மக்கள் 100 நாள் வேலைத் திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகிறார்கள். ஆனால், பா.ஜ.க பெயரை மட்டும் மாற்றவில்லை. அந்தத் திட்டத்தையே  ஒழிக்க முயல்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் வர்த்தக ஒப்பந்தம் செய்தோம் என்று பிரதமர் பெருமையாகச் சொல்கிறார். அந்த ஒப்பந்தம் எப்படி இருக்கிறது என்றால், “நீ உமி கொண்டு வா, நான் அவல் கொண்டு வருகிறேன்; இருவரும் ஊதி ஊதி திங்கலாம்” என்ற நிலைதான்.” என்றார்.

அடுத்துப் பேசிய தி.மு.க இளைஞரணியின் செயலாளரும் துணைமுதல்வருமான உதயநிதி ஸ்டாலின்,”தமிழ்நாட்டு மக்களுக்கு பாதுகாப்பாக இருப்பது இளைஞரணிதான். ஆனால், எந்தவித பலமும் இல்லாமல் கொள்கை இல்லாமல் வெற்றுக்கூச்சல் போடும் ஒரு கூட்டம் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. அவர்களால் தமிழ்நாட்டிற்கு எந்த பலனும் இல்லை. ஏன், அவர்களுக்கே எந்த பலனும் இல்லை. தேர்தல் வந்தாலே பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு நினைவுக்கு வந்துவிடும். இனிமேல் மோடி அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருவார், திருக்குறள் கூறுவார்.

நினைவுப்பரிசு வழங்கிய அமைச்சர்கள்

திருவிழாவிற்காக போடப்பட்ட கடைகள் எப்படி திருவிழா முடிந்தவுடன் காணாமல் போகுமோ அதேபோல் தேர்தல் முடிந்தவுடன் பலரும் காணாமல் போவார்கள். தி.மு.க மட்டுமே மக்களுடன் நிற்கும்.” என்றார்.  இறுதியாகப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “விருதுநகர் என்று சொன்னாலே கல்விக்கண் திறந்த காமராஜரின் பெயர்தான் நினைவுக்கு வரும். அனைவருக்கும் மதிய உணவு திட்டத்தை தந்தவர் அவர். ஆனால், காலை உணவுத் திட்டம் என்றாலே நமது அரசுதான் நினைவுக்கு வரும். விருதுநகரில் மாநாடு நடத்தினாலே தேர்தலில் நமக்கு வெற்றிதான்.

தமிழ்நாட்டிற்கு ஜீரோ என்று சொன்ன பிரதமர் மோடி அரசை எதிர்த்து குரல் கொடுக்காமல், பா.ஜ.கவின் கிளைச்செயலாளராகவே மாறியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவர் தற்போது என்.டி.ஏ பழனிசாமியாகவே மாறியிருக்கிறார். நானும் ரெளடிதான் எனச் சொல்வதுபோல “என்.டி.ஏ கூட்டணிக்கு நான்தான் தலைவர் எனச் சொல்லிக் கொண்டிருக்கிறார். மொழியை அழித்தால் நம்முடைய அடையாளத்தை அழிக்கலாம் என்று நினைக்கிறார்கள். அதை முறியடிக்க வேண்டும்.

மாநாட்டில் கலந்து கொண்ட இளைஞரணியினர்

மாநிலக்கட்சிகளால் இந்தியாவில் ஆட்சி அமைக்க முடியும் என்று ஆட்சி அமைத்துக் காட்டியதே தி.மு.கதான். தமிழ்நாட்டில் தோல்வி என்பது பா.ஜ.கவிற்கு புதிதல்ல. இதுவரை அடைந்த தோல்வியைவிட மிகப்பெரிய தோல்வியை பா.ஜ.கவும், சுயநலத்திற்காக சுயமரியாதையை விட்டுச் சென்று டெல்லிக்கு சேவகம் செய்யும் அடிமை அ.தி.மு.கவும் அடையப்போகிறது. மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஜீரோவை தந்த பா.ஜ.கவிற்கு தேர்தலில் நாமும் அதையே திருப்பித் தருவோம்.” என்றார்.

இளைஞரணியினருக்கு சீட் கேட்டு கோரிக்கை வைத்த உதயநிதி; முதலமைச்சர் கொடுத்த பதில் என்ன?

விருதுநகரில் திமுக-வின் இளைஞரணி தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர்உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, திருச்சி ச... மேலும் பார்க்க

’முரட்டு பக்தர்கள், முரட்டு தொண்டர்கள்போல முரட்டு அடிமை பழனிசாமி’ - உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு

விருதுநகரில் திமுகவின் இளைஞரணி தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நேற்று நடைப்பெற்றது. இதில் முதலமைச்சர் மு,க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, திருச்சி... மேலும் பார்க்க

தேனி: TVK – NTK கட்சியினர் மோதல்; கொலை மிரட்டல் விடுத்த தவெக மாவட்ட செயலாளர் மீது வழக்கு பதிவு!

தேனி பங்களாமேடு பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார்.சாட்டை துரைம... மேலும் பார்க்க

இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம்: 'அமெரிக்காவிடம் இந்தியா சரண்டரா?' - எதிர்ப்புகளின் தொகுப்பு

இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்திற்கு வரவேற்பு இருந்தாலும், சில எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.இந்த எதிர்ப்புகளை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி‌ உள்ளிட்ட பலர் பதிவு செய்துள்ளனர்.அந்த எதிர்ப்புக... மேலும் பார்க்க

2022-ல் இந்தியா‌ உடனான தாக்குதலுக்கு பின், அணு ஆயுத சோதனையை நடத்தியதா சீனா?

ஜெனிவாவில் தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுதக் குறைப்பு மாநாடு நடந்து வருகிறது.அதில் நேற்று அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் தாமஸ் ஜி. டினானோ பேசியது உலகம் முழுக்க அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.அப்... மேலும் பார்க்க