செய்திகள் :

IND vs USA: "எங்கள் தோல்விக்கு இதுதான் முக்கியக் காரணம்"- அமெரிக்க கேப்டன் மோனாங்க் படேல்

post image

ஐசிசி டி20 கிரிக்கெட் தொடர் நேற்று (பிப்.7) கோலாகலமாகத் தொடங்கியது.

நேற்றைய போட்டியில் இந்தியா - அமெரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது.

அடுத்து களமிறங்கிய அமெரிக்க அணி 20 ஓவரில் 132 ரன்கள் மட்டுமே எடுத்து 29 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியைச் சந்தித்திருக்கிறது.

இந்திய அணி
இந்திய அணி

இந்நிலையில் போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமெரிக்க கேப்டன் மோனாங்க் படேல் அணியின் தோல்வி குறித்து பேசியிருக்கிறார்.

"இந்த ஆடுகளத்தை கணிக்கவே முடியவில்லை. முக்கியமான சில வாய்ப்புகளை நாங்கள் தவற விட்டோம்.

அதுதான் தோல்விக்கு ஒரு காரணமாக இருந்தது.

ஒரு கட்டத்தில் நாங்கள் இந்திய அணியை 13 ரன்களுக்குள் சுருட்டி விடலாம் என்று நினைத்தோம்.

ஆனால் அவர்கள் 160 என ஒரு நல்ல இலக்கை தொட்டுவிட்டார்கள்.

ரசிகர்கள் இந்தியாவுக்கு ஆதரவாகவே செயல்பட்டார்கள். அதையும் நாங்கள் சிறப்பாக கையாண்டோம் என்று நினைக்கிறேன்.

அமெரிக்க அணி
அமெரிக்க அணி

இந்தப் போட்டியில் சில, சில தவறுகளை நாங்கள் செய்தோம்.

அதனை எல்லாம் சரி செய்து கொண்டு அடுத்த போட்டியில் பலமான அணியாக திரும்பி வருவோம்" என்று தெரிவித்திருக்கிறார்.

U19 World Cup : தீபேஷ், அம்ப்ரிஷ்!உலகக்கோப்பை அணியில் ஜொலித்த தமிழ்நாட்டு தங்கங்கள்! - யார் இவர்கள்?

தமிழ்நாட்டில் இருந்தும் இந்திய அணிக்குத் தொடர்ந்து வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் சர்வதேச அளவில் ஜொலித்து வருகிறார்கள். அந்த வரிசையில், சமீபத்தில் முடிந்த U-19 உலகக்கோப்பை தொடரில் தங்களின் முக்க... மேலும் பார்க்க

`பாகிஸ்தானுக்கு தோல்வி பயத்தை காட்டிய நெதர்லாந்து!' - முதல் ஆட்டமே திக்... திக்! | T20 WC 2026

T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியே ரசிகர்களை நாற்காலியின் நுனிக்கே கொண்டு வந்துவிட்டது. கொழும்பில் நடைபெற்ற இப்போட்டியில் பாகிஸ்தான் – நெதர்லாந்து அணிகள் நேருக்கு நேர் மோதின. டாஸ் வென்... மேலும் பார்க்க

T20 WC: இந்தியா vs பாக் மோதல் டு கரீபியன் மந்திரம் வரை! - ICC டி20 உலகக்கோப்பை வரலாறு - ஓர் பார்வை

டெஸ்ட் மேட்ச், ஒன்டே, போன்ற வடிவங்களைக் கொண்ட கிரிக்கெட்டை கூடுதல் விறுவிறுப்பாகவும் ரசிகர்களின் ரசனை ஆகவும் மாற்றியதும் தான் டி20 கிரிக்கெட்.குறைந்த நேரம்… அதிக அதிரடி… ஒவ்வொரு பந்திலும் முடிவு மாறக்... மேலும் பார்க்க

IND vs ENG: அதிரடி காட்டிய சூர்யவன்ஷி; U19 உலகக்கோப்பையை 6வது முறையாக வென்ற இந்திய அணி!

U19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.ஜிம்பாப்வேயில் உள்ள ஹாராரே மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போ... மேலும் பார்க்க

U19 World Cup: 15 சிக்ஸ்,15 பவுண்டரி,175 ரன்கள் - அதிரடி காட்டிய சூர்யவன்ஷி; குவியும் பாராட்டுகள்!

யு19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணியின் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்களை விளாசி சாதனைப் படைத்திருக்கிறார்.யு19 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போ... மேலும் பார்க்க

T20 WC: "வங்கதேசத்திடம் சொன்னதுபோல் இந்தியாவிடம் ஐசிசி சொல்லுமா?" - நாசர் ஹுசைன் கேள்வி

டி20 உலகக்கோப்பை கிரிக்​கெட் தொடர் வரும் பிப்​ர​வரி 7 ஆம் தேதி இந்​தியா மற்றும் இலங்​கை​யில் தொடங்​க இருக்கிறது. முஸ்தபிசுர் ரஹ்மானை ஐபிஎலில் இருந்து நீக்கியதைத் தொடர்ந்து பாதுகாப்புக் காரணங்களைச் சுட... மேலும் பார்க்க