செய்திகள் :

U19 World Cup : தீபேஷ், அம்ப்ரிஷ்!உலகக்கோப்பை அணியில் ஜொலித்த தமிழ்நாட்டு தங்கங்கள்! - யார் இவர்கள்?

post image

தமிழ்நாட்டில் இருந்தும் இந்திய அணிக்குத் தொடர்ந்து வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் சர்வதேச அளவில் ஜொலித்து வருகிறார்கள். அந்த வரிசையில், சமீபத்தில் முடிந்த U-19 உலகக்கோப்பை தொடரில் தங்களின் முக்கியமான பங்களிப்பை அளித்து, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்கள் வேகப்பந்து வீச்சாளர் தீபேஷ் மற்றும் ஆல்ரவுண்டர் R.S. அம்ப்ரிஷ்.

தீபேஷ் தேவேந்திரன்

தமிழ்நாட்டைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான தீபேஷ் தேவேந்திரன், தனது அசத்தலான பந்துவீச்சுத் திறமையால் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி கவனம் பெற்றார். அதன் பலனாக, தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) தொடரில் சீகம் மதுரை பேந்தர்ஸ் அணிக்குத் தேர்வு செய்யப்பட்டார். இந்த வாய்ப்பே அவரை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்றது.

தீபேஷ் தேவேந்திரன்
தீபேஷ் தேவேந்திரன்

அவரது திறமைக்கு கிடைத்த அங்கீகாரமாக, இந்திய U-19 அணியின் கதவு திறந்தது.

2025 ஆம் ஆண்டு U-19 ஆசியக் கோப்பை தொடரில் தீபேஷ் விளையாடிய 5 போட்டிகளில் 14 விக்கெட்களை வீழ்த்தி, தனது பந்துவீச்சுத் திறமையை சர்வதேச அளவிலும் நிரூபித்தார்.

இதனைத் தொடர்ந்து U-19 உலகக்கோப்பை தொடரில் தேர்வான தீபேஷ், தொடர் முழுவதும் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி 15 விக்கெட்களை கைப்பற்றினார். முக்கிய தருணங்களில் எதிரணி பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்திய அவரது பந்துவீச்சு, இந்திய அணி கோப்பையை வெல்வதில் முக்கிய பங்காற்றியது என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.

R.S. அம்ப்ரிஷ்

தமிழ்நாட்டின் ஆல்ரவுண்டர்கள் வரிசையில் முக்கிய இடம் பிடித்தவர் R.S. அம்ப்ரிஷ்.

2026 ஆம் ஆண்டுக்கான U-19 உலகக்கோப்பை இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட இவர், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரு துறைகளிலும் அணிக்கு மதிப்பான பங்களிப்பை அளித்தார்.

இடதுகை பேட்ஸ்மேனாகவும், வலதுகை மிதவேக பந்துவீச்சாளராகவும் விளங்கும் அம்ப்ரிஷ், டாப் மற்றும் நடுவரிசையில் அணியின் தேவைக்கேற்ப விளையாடும் திறன் கொண்டவர். ‘ஹார்ட் லெந்த்’ பந்துகளின் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தும் அவரது பந்துவீச்சு, அவரது முக்கிய பலமாக பார்க்கப்படுகிறது.

 R.S. அம்ப்ரிஷ்
R.S. அம்ப்ரிஷ்

ரஞ்சி டிராபி, TNPL, U-19 இங்கிலாந்து சுற்றுப்பயணம் என தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அம்ப்ரிஷ், சமீபத்தில் முடிந்த U-19 உலகக்கோப்பை தொடரில் 12 விக்கெட்களும், 157 ரன்களும் எடுத்தார்.

குறிப்பாக, இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் மூன்று முக்கிய விக்கெட்களை வீழ்த்தி, இந்திய வெற்றிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தார். இதன் மூலம், தனது திறமையை உலக கிரிக்கெட் அரங்கில் பறைசாற்றினார்.

இந்த இரு வீரர்களும், தமிழ்நாடு கிரிக்கெட்டின் நாளைய முகங்களாகவும், இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால நம்பிக்கைகளாகவும் இருக்க வாழ்த்துகள்.!

`பாகிஸ்தானுக்கு தோல்வி பயத்தை காட்டிய நெதர்லாந்து!' - முதல் ஆட்டமே திக்... திக்! | T20 WC 2026

T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியே ரசிகர்களை நாற்காலியின் நுனிக்கே கொண்டு வந்துவிட்டது. கொழும்பில் நடைபெற்ற இப்போட்டியில் பாகிஸ்தான் – நெதர்லாந்து அணிகள் நேருக்கு நேர் மோதின. டாஸ் வென்... மேலும் பார்க்க

T20 WC: இந்தியா vs பாக் மோதல் டு கரீபியன் மந்திரம் வரை! - ICC டி20 உலகக்கோப்பை வரலாறு - ஓர் பார்வை

டெஸ்ட் மேட்ச், ஒன்டே, போன்ற வடிவங்களைக் கொண்ட கிரிக்கெட்டை கூடுதல் விறுவிறுப்பாகவும் ரசிகர்களின் ரசனை ஆகவும் மாற்றியதும் தான் டி20 கிரிக்கெட்.குறைந்த நேரம்… அதிக அதிரடி… ஒவ்வொரு பந்திலும் முடிவு மாறக்... மேலும் பார்க்க

IND vs ENG: அதிரடி காட்டிய சூர்யவன்ஷி; U19 உலகக்கோப்பையை 6வது முறையாக வென்ற இந்திய அணி!

U19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.ஜிம்பாப்வேயில் உள்ள ஹாராரே மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போ... மேலும் பார்க்க

U19 World Cup: 15 சிக்ஸ்,15 பவுண்டரி,175 ரன்கள் - அதிரடி காட்டிய சூர்யவன்ஷி; குவியும் பாராட்டுகள்!

யு19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணியின் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்களை விளாசி சாதனைப் படைத்திருக்கிறார்.யு19 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போ... மேலும் பார்க்க

T20 WC: "வங்கதேசத்திடம் சொன்னதுபோல் இந்தியாவிடம் ஐசிசி சொல்லுமா?" - நாசர் ஹுசைன் கேள்வி

டி20 உலகக்கோப்பை கிரிக்​கெட் தொடர் வரும் பிப்​ர​வரி 7 ஆம் தேதி இந்​தியா மற்றும் இலங்​கை​யில் தொடங்​க இருக்கிறது. முஸ்தபிசுர் ரஹ்மானை ஐபிஎலில் இருந்து நீக்கியதைத் தொடர்ந்து பாதுகாப்புக் காரணங்களைச் சுட... மேலும் பார்க்க

T20 World Cup: 20 அணிகள்; இந்தியாவில் 5 மைதானங்கள்; ஜியோ ஸ்டார் ஒளிபரப்பு - உலகக்கோப்பை முழு விவரம்!

2026 ஆம் ஆண்டிற்கான டி 20 உலகக்கோப்பைத் தொடர் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. அதுகுறித்த முழுத் தகவல் இங்கே!ஐசிசி டி20உலகக்கோப்பைகிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த 10வது ஐசிசி டி20 ... மேலும் பார்க்க