செய்திகள் :

IND vs ENG: அதிரடி காட்டிய சூர்யவன்ஷி; U19 உலகக்கோப்பையை 6வது முறையாக வென்ற இந்திய அணி!

post image

U19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

ஜிம்பாப்வேயில் உள்ள ஹாராரே மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஆயுஷ் மத்ரே முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

தொடக்க வீரர்களாக ஆரோன் ஜார்ஜ் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி களம் இறங்கினர். தொடக்கத்திலேயே ஆரோன் ஜார்ஜ் தனது விக்கெட்டை இழந்தார்.

இந்திய அணி
இந்திய அணி

அதிரடி காட்டிய சூர்யவன்ஷி

அதன்பின் களம் இறங்கிய கேப்டன் ஆயுஷ் மாத்ரே ஒரு முனையில் பொறுமையாக ஆடி வர, மறுமுனையில் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி, இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்தார்.

பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆயுஷ் மாத்ரே அரைசதம் கடந்த நிலையில் க்ரீன் ஓவரில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் களம் இறங்கிய வீரர்கள் அனைவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், வைபவ் சூர்யவன்ஷி 80 பந்துகளில் 175 ரன்கள் எடுத்துத் 26-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

விக்கெட்களை இழந்த இங்கிலாந்து...

இதன் மூலம் இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்கள் எடுத்தது.

இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சில் திணறி ஆரம்பத்திலேயே விக்கெட்களை இழந்தது.

தொடக்கத்திலிருந்து பொறுமையாக விளையாடிய பென் டவ்கின்ஸ் 66 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

பின்னர் பார்ட்னர்ஷிப் அமைக்க முடியாமல் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது.

சூர்யவன்ஷி
சூர்யவன்ஷி

சாதனைப் படைத்த இந்திய அணி!

நம்பிக்கை அளிக்கும் வகையில் காலேப் ஃபால்கனர் மற்றும் ஜேம்ஸ் மின்டோ இணை பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினாலும், அந்த முயற்சி நீண்ட நேரம் கைக்கொடுக்கவில்லை.

அதிகபட்சமாக காலேப் பால்கனர் 115 ரன்கள் எடுத்து கடைசி வரை போராடினார். இறுதியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் மட்டுமே எடுத்து, 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

175 ரன்கள் எடுத்த வைபவ் சூர்யவன்ஷி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா தனது 6-வது U-19 உலகக்கோப்பை பட்டத்தை வென்று சாதனைப் படைத்திருக்கிறது.

U19 World Cup: 15 சிக்ஸ்,15 பவுண்டரி,175 ரன்கள் - அதிரடி காட்டிய சூர்யவன்ஷி; குவியும் பாராட்டுகள்!

யு19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணியின் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்களை விளாசி சாதனைப் படைத்திருக்கிறார்.யு19 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போ... மேலும் பார்க்க

T20 WC: "வங்கதேசத்திடம் சொன்னதுபோல் இந்தியாவிடம் ஐசிசி சொல்லுமா?" - நாசர் ஹுசைன் கேள்வி

டி20 உலகக்கோப்பை கிரிக்​கெட் தொடர் வரும் பிப்​ர​வரி 7 ஆம் தேதி இந்​தியா மற்றும் இலங்​கை​யில் தொடங்​க இருக்கிறது. முஸ்தபிசுர் ரஹ்மானை ஐபிஎலில் இருந்து நீக்கியதைத் தொடர்ந்து பாதுகாப்புக் காரணங்களைச் சுட... மேலும் பார்க்க

T20 World Cup: 20 அணிகள்; இந்தியாவில் 5 மைதானங்கள்; ஜியோ ஸ்டார் ஒளிபரப்பு - உலகக்கோப்பை முழு விவரம்!

2026 ஆம் ஆண்டிற்கான டி 20 உலகக்கோப்பைத் தொடர் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. அதுகுறித்த முழுத் தகவல் இங்கே!ஐசிசி டி20உலகக்கோப்பைகிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த 10வது ஐசிசி டி20 ... மேலும் பார்க்க

Dhoni: "இதுவரை இருந்ததிலேயே மிகவும் ஆபத்தான அணிகளுள் ஒன்று" - டி20 உலகக்கோப்பை குறித்து தோனி

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7-ம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கவிருக்கிறது.மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் கோப்பையை எந்த அணி கைப்பற்றப் போகிறது என்ற எதிர்பார்... மேலும் பார்க்க

WCT20: வார்ம்-அப் போட்டியில் வலுவை காட்டிய இந்தியா! - உலகக் கோப்பை இந்திய அணி காம்பினேஷன் இது தானா?!

10-வது டி20 உலகக் கோப்பை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் போட்டிகள் பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், நேற்று இந்தியா – செளத் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே பயிற்சி ஆட்டம் நடை... மேலும் பார்க்க

T20 World Cup: இந்தியா Vs பாகிஸ்தான் போட்டி இல்லையென்றால் இத்தனை சிக்கல்களா? - ஓர் அலசல்!

பாகிஸ்தான் அணி டி 20 உலகக்கோப்பையைப் புறக்கணிக்கும் முடிவில் இருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், நேற்று (பிப்.1) டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை மட்டும் புறக்கணிக்கிறோம் என்று... மேலும் பார்க்க