செய்திகள் :

Dhoni: "இதுவரை இருந்ததிலேயே மிகவும் ஆபத்தான அணிகளுள் ஒன்று" - டி20 உலகக்கோப்பை குறித்து தோனி

post image

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7-ம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கவிருக்கிறது.

மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் கோப்பையை எந்த அணி கைப்பற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்திருக்கின்றன.

indian team
indian team

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தற்போதைய இந்திய அணி குறித்து பேசியிருக்கிறார். அதில், "ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் எனக்கு மிகவும் பிடித்த அணி இந்திய அணிதான்.

சூர்யகுமார் தலைமையிலான தற்போதைய இந்திய அணியில் உள்ள வீரர்கள், அதிக அழுத்தமான சூழல்களைக் கையாண்ட அனுபவம் கொண்ட வீரர்களாக இருக்கின்றனர்.

இதுவரை இருந்ததிலேயே மிகவும் ஆபத்தான அணிகளுள் தற்போதைய டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியும் ஒன்று" என்று தெரிவித்திருக்கிறார்.

இதனைத்தொடர்ந்து அந்த நேர்காணலில் பிரபலமடைந்த பிறகும் ஏன் ராஞ்சியில் வசிக்கிறீர்கள் என்று தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்குப் பதிலளித்த அவர், "சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானபோது, நான் ராஞ்சியை விட்டு சென்றுவிடுவேன்.

இந்தச் சிறிய நகரத்தில் என்னால் வாழ முடியாது எனச் சீனியர் வீரர் ஒருவர் என்னிடம் பந்தயம் கட்டினார்.

தோனி
தோனி

அப்போது நான் அவரிடம் ஏன் இந்த ஊரை விட்டு செல்ல வேண்டும்? இங்கு சந்தோஷமாக இருக்கிறேன் என்றேன்.

அவர் சொல்லி இப்போது 20 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் நான் இன்னும் ராஞ்சியில்தான் இருக்கிறேன். எனக்கு இந்த நகரம் மிகவும் பிடிக்கும்" என்று தெரிவித்திருக்கிறார்.

WCT20: வார்ம்-அப் போட்டியில் வலுவை காட்டிய இந்தியா! - உலகக் கோப்பை இந்திய அணி காம்பினேஷன் இது தானா?!

10-வது டி20 உலகக் கோப்பை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் போட்டிகள் பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், நேற்று இந்தியா – செளத் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே பயிற்சி ஆட்டம் நடை... மேலும் பார்க்க

T20 World Cup: இந்தியா Vs பாகிஸ்தான் போட்டி இல்லையென்றால் இத்தனை சிக்கல்களா? - ஓர் அலசல்!

பாகிஸ்தான் அணி டி 20 உலகக்கோப்பையைப் புறக்கணிக்கும் முடிவில் இருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், நேற்று (பிப்.1) டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை மட்டும் புறக்கணிக்கிறோம் என்று... மேலும் பார்க்க

T20 World Cup: "பாதிப்புகளை ஏற்படுத்தும்; சிந்தித்து முடிவெடுங்கள்" - பாகிஸ்தானுக்கு ஐசிசி கண்டனம்

டி20 உலகக்கோப்பை கிரிக்​கெட் தொடர் வரும் பிப்​ர​வரி 7-ம் தேதி இந்​தியா மற்றும் இலங்​கை​யில் தொடங்​க இருக்கிறது. பாதுகாப்புக் காரணங்களைச் சுட்டிக்காட்டி இந்தியாவில் நடக்கும் டி20 உலகக்கோப்பையில் விளையா... மேலும் பார்க்க

K.L Rahul: "கிடைக்கும் விஷயங்களை மகிழ்ச்சியாக அனுபவமிக்க வேண்டும்"- ஓய்வு குறித்து கே.எல். ராகுல்

இந்திய அணியின் நட்சத்திர வீரரான கே.எல். ராகுல் கெவின் பீட்டர்சன் உடனான நேர்காணலில் ஓய்வு குறித்துப் பேசியிருக்கிறார். நேர்காணலில் பேசிய கே.எல்.ராகுல், "ஓய்வு குறித்து நான் யோசித்திருக்கிறேன். என்னைப் ... மேலும் பார்க்க

T20 WC 2026 : "உலகக் கோப்பையை முதன்முறையாக வீட்டில் அமர்ந்து பார்ப்பது.!"- மனம் திறந்த ரோஹித்

டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடர் வரும் பிப்​ர​வரி 7-ம் தேதி இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் தொடங்​க இருக்கிறது. இந்நிலையில் நடப்பு சாம்பியனான இந்​திய அணி தனது முதல் ஆட்​டத்​தில் தொடக்க நாளில் அமெரிக... மேலும் பார்க்க

BBL: ரன் ஓட மறுத்த ஸ்மித்; வெறுப்படைந்த பாபர் அசாம்! - Big Bash தொடரில் நடந்தது என்ன? | Video

பிக் பேஷ் லீக்கின் நேற்றைய ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் பாபர் ஆசம் இடையே நடந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஆஸ்திரேலியாவில் பிக் பேஷ் லீக் (BBL) டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்ற... மேலும் பார்க்க