செய்திகள் :

பத்மா: 'அதே யூனிஃபார்ம்ல வர சொல்லிதான் மரியாதை செய்யணுமா?' - நெட்டிசன் கேள்விக்கு பார்த்திபன் பதில்

post image

கீழே கிடந்த 360 கிராம் தங்கத்தை உரியவர்களிடம் எடுத்துக்கொடுத்த தூய்மைப் பணியாளர் பத்மா தான் கடந்த சில நாள்களாக வைரல்.

அவரை நேரில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் உள்பட பலர் பாராட்டி வருகின்றனர்.

பத்மாவை நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன் அவரது 'ஸ்டைலில்' பாராட்டியிருக்கிறார். அது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளதாவது...

"தங்கத்தின் மதிப்பு ஏற ஏற, மனிதத்தின் மரியாதை குறைந்துகொண்டே போய், ஒரு கிராம் ஒரு லட்ச ரூபாயை நெருங்கும்போது, லட்சக்கணக்கான உயிர்கள் கொல்லப்படுவது உறுதியாகிவிடும்.

 பார்த்திபன்
பார்த்திபன்

வருடத்தில் 360 நாளாவது உழைக்கும் துப்புரவு பணியாளர் திருமதி பத்மா அவர்கள், குப்பையில் கிடந்த 360 கிராம் நகையை உரியவரிடம் சேர்ப்பித்து, அந்த ஒரு செயலின் மூலம் உலக மகா உன்னத மனுஷியாக அவதாரம் எடுத்திருக்கிறார்.

என்னை Chief Guest-ஆக அழைத்த எத்திராஜ் கல்லூரிக்கு, நான் வெறும் Guest-ஆகவும் Chief-ஆக திருமதி பத்மாவை அழைத்துச் சென்று, பாதணி அணிவித்து, பாத பூஜை செய்து, புடவை போர்த்தி, 'உலக அழகி' என்ற கிரீடம் சூட்டி நான் பேரழகன் ஆனேன்..." என்று வீடியோவுடன் பதிவிட்டுள்ளார்.

கமென்டிற்கு 'ரிப்ளை'

இந்தப் பதிவிற்கு கீழ், நெட்டிசன் ஒருவர், "எல்லாரும் கூப்டு மரியாதை செலுத்துறீங்க ஓகே, ஆனா அவங்கள அதே யூனிஃபார்ம்ல எல்லா இடத்துலையும் கூப்டு மரியாதை செலுத்துறீங்களே, அது ஏன்?" என்று கமென்ட் செய்துள்ளார்.

அதற்கு பார்த்திபன், "அது அவங்களா ஆசைப்பட்டு அப்படி வந்தது. அதை அவங்க மரியாதையா பாக்குறாங்க. நாமும் அப்படி பார்ப்போமே!!!" என்று பதிலளித்துள்ளார்.

`தன் உயிரை தியாகம் செய்து..' - தேனீக்களிடமிருந்து 20 குழந்தைகளை காப்பாற்றிய அங்கன்வாடி பெண் ஊழியர்

மத்திய பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தில் உள்ள மாதவாடா என்ற கிராமத்தில் உள்ள அங்கன்வாடியில் கஞ்சன் பாய் என்ற பெண், சமையல் வேலை செய்து வந்தார். அவர் அங்கன்வாடியில் சமைத்துக் கொண்டிருந்தபோது அங்கு 20 கு... மேலும் பார்க்க

`குழந்தைங்க பசிக்கும், கல்விக்கும் முன்னாடி பயம் பெருசில்ல...' - ஊக்கமூட்டும் கேப் ஓட்டுநர் நந்தினி

வாழ்க்கை நமக்குச் சவால்களைத் தரும்போது, அதைக் கண்டு அஞ்சி ஓடாமல், அந்தச் சவால்களையே ஏணியாக மாற்றி முன்னேறுபவர்கள் மிகச் சிலரே. அந்த வகையில், ஹைதராபாத் நகரின் பரபரப்பான சாலைகளில் தன்னுடைய மூன்று குழந்த... மேலும் பார்க்க

`பசிக்கு மதம் தெரியாது’- 25 ஆண்டுகளாக வடலூர் சபை அன்னதானத்திற்கு அரிசி, காய்கறி அனுப்பும் இஸ்லாமியர்

`இதைவிட கொடுப்பினை வேறு என்ன இருக்க முடியும் ?’கடலூர் மாவட்டம், வடலூரில் அமைந்திருக்கும் வள்ளலாரின் சத்தியஞான சபையில், ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அன்றைய தினம் உலகம் முழு... மேலும் பார்க்க

"மேதி என் தாய்": நீலகிரி பெட்ட குரும்பர் சமூகத்தின் முதல் இளம் போட்டோகிராபர்!

நீலகிரி மாவட்டத்தில் தோடர்கள், கோட்டர்கள், பணியர்கள், நாடோடிப் பழங்குடிகள், காட்டுநாயக்கர்கள், குரும்பர்கள் என ஐந்திற்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில், குறும்பர் இனக்குழுவி... மேலும் பார்க்க

மனைவிக்கு பக்கவாதம்; சைக்கிள் ரிக்‌ஷாவில் 300 கி.மீ பயணம் - 70 வயது முதியவரின் காதல்!

ஒடிசாவை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது மனைவிக்கு சிகிச்சை கொடுக்க 300 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல பணமில்லாமல் சைக்கிள் ரிக்‌ஷாவில் அழைத்து சென்றது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற... மேலும் பார்க்க

அவசர நிலை முதல் அயோத்தி வரை: இந்திய வரலாற்றைக் குரலால் செதுக்கிய மார்க் டல்லி காலமானார்!

தெற்காசியாவின் மிகச்சிறந்த பத்திரிகையாளரும், பிபிசி (BBC) செய்தி நிறுவனத்தின் இந்திய முகமாகப் போற்றப்பட்டவருமான மார்க் டல்லி (90), டில்லியில் நேற்று காலமானார். அக்டோபர் 24, 1935-ல் கொல்கத்தாவில் பிறந்... மேலும் பார்க்க