பத்மா: 'அதே யூனிஃபார்ம்ல வர சொல்லிதான் மரியாதை செய்யணுமா?' - நெட்டிசன் கேள்விக்க...
Gold: வெளிநாட்டிலிருந்து குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி வருகிறீர்களா? இனி உங்களுக்கு இந்தச் சலுகை!
துபாய், சிங்கப்பூர், அமெரிக்கா, ஹாங்காங் போன்ற நாடுகளில் இந்தியாவை விட, தங்க விலை குறைவுதான்.
அதனால், அங்கே செல்லும் நம் மக்கள் தங்கம் வாங்கி வருவதில் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், அதற்கும் ஒரு செக் உண்டு.
குறிப்பிட்ட அளவிற்கு மேல், வெளிநாடுகளிலிருந்து வாங்கி வரும் 'தங்க நகைகளுக்கு' வரி கட்ட வேண்டும். தங்க நகையாக இல்லாமல், தங்க நாணயம், தங்க ஆபரணமாக வாங்கினால், எத்தனை அளவாக இருந்தாலும், வரி கட்ட வேண்டும்.

தற்போது தங்க நகையைக் கொண்டு வரும் நடைமுறைகளில் சிறிய தளர்வுகளை அறிவித்துள்ளது மத்திய அரசு.
முன்பு, பெண்களும், 15 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளும் ரூ.1 லட்சம் மதிப்பு வரையில் 40 கிராம் எடை உள்ள தங்க நகைகளைக் கொண்டு வரலாம்.
ஆண்கள் ரூ.50,000 மதிப்பு வரையில் உள்ள 20 கிராம் எடை உள்ள தங்க நகைகளைக் கொண்டு வரலாம்.
அதாவது ரூ.1 லட்சம் வரை 40 கிராமிற்குள் எத்தனை நகை வாங்கி வர முடிகிறதோ, அவ்வளவு நகைகளைத்தான் வாங்கி வர முடியும்.
இப்போதைய வழிமுறையின் படி,
இனி பெண்களும், குழந்தைகளும் 40 கிராம் தங்க நகைகளும், ஆண்கள் 20 கிராம் தங்க நகைகளும் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வாங்கி வரலாம்.
ஆனால், இந்த நகைகளுக்கு இவ்வளவு மதிப்புதான் இருக்க வேண்டும் என்கிற சட்டம் இனி இல்லை.


















