பத்மா: 'அதே யூனிஃபார்ம்ல வர சொல்லிதான் மரியாதை செய்யணுமா?' - நெட்டிசன் கேள்விக்க...
திருச்சி: 7 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த உறவினர்; 58 வயது முதியவர் சிக்கியது எப்படி?
திருச்சி, காஜா பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் ( வயது: 58). சம்பவத்தன்று இவரது வீட்டில் பேரன், பேத்திகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது, உறவினர் ஒருவரது 7 வயது பெண் குழந்தையும் விளையாடுவதற்காக அங்கு வந்துள்ளார். அப்போது, ஸ்டீபன் ராஜ் அந்த 7 வயது குழந்தையைத் தனியாக தனது அறைக்கு அழைத்துச் சென்று, அந்தச் சிறுமிக்குப் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது பற்றி தகவல் அறிந்த அந்தக் குழந்தையின் தாயார் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

அதன்பின்னர், இந்தச் சம்பவம் குறித்து திருச்சி கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர் புகார் செய்தார். அந்தப் புகாரின் பேரில் கோட்டை காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து 7 வயது பெண் குழந்தைக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஸ்டீபன் ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 7 வயது சிறுமிக்கு அவரது உறவினரான 58 வயது முதியவர் பாலியல் தொல்லை கொடுத்து கைதாகியுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


















