செய்திகள் :

சத்தீஷ்கர்: பிரேக் அப்பில் முடிந்த இன்ஸ்டா காதல்; போனை பிளாக் செய்த காதலனை குத்திக் கொன்ற காதலி

post image

சத்தீஷ்கர் மாநிலம் பிலாஷ்பூர் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்தவர் காம்தா பிரசாத்(25). அவர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார்.

பிரசாத்திற்கு இன்ஸ்டாகிராம் மூலம் ரோஷ்னி(22) என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. 6 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட இந்த அறிமுகம் நாளடைவில் காதலாக மாறியது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பிரசாத் தனது காதலியின் போன் அழைப்புகளையும், மெசேஜ்களையும் தவிர்த்து வந்தார்.

அதோடு தனது காதலியின் போன் நம்பரை தனது போனில் பிளாக் செய்துவிட்டார். இதையடுத்து பிரசாத் வேறு ஒரு பெண்ணைக் காதலிப்பதாக ரோஷ்னி நினைத்தார். எனவே கோபத்தில் தனது காதலன் வீட்டிற்கு கத்தியுடன் ரோஷ்னி சென்றார்.

கைது
கைது

அங்கு சென்று காதலன் வீட்டுக் கதவைத் தட்டினார். காதலன் கதவைத் திறந்தவுடன் பிரசாத்திடம் போனைக் கொடுக்கும்படி ரோஷ்னி கேட்டார். ஆனால் பிரசாத் போனைக் கொடுக்க முடியாது என்று தெரிவித்தார் .

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ரோஷ்னி, தான் கொண்டு வந்திருந்த கத்தியால் பிரசாத்தின் நெஞ்சில் குத்தினார். அவர் சத்தம் போட்டு தரையில் விழுந்தார். அவர்களது சத்தத்தைக் கேட்டு பிரசாத்துடன் தங்கி இருப்பவர்கள் ஓடி வந்தபோது பிரசாத் ரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்தார்.

நண்பர்கள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் பிரசாத் இறந்து போனார். இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து ரோஷ்னியைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். போலீஸார் ரோஷ்னியிடம் விசாரித்தபோது காதலனை மிரட்டுவதற்காகத்தான் கத்தியை எடுத்து வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

'இந்த' செய்கைகளும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு தான் - நீதிமன்றம் தீர்ப்பு

இன்னும் பலருக்கும் பாலியல் தொந்தரவுகளுக்கான வரையறைகள் என்னவென்று தெரிவதில்லை. ஒரு பெண்ணிடம் ஆபாசமாகப் பேசினாலோ, தவறாக நடந்துகொண்டாலோ தான் பாலியல் தொந்தரவுகள் என்று நினைக்கப்படுகின்றன. ஆனால், உண்மையில்... மேலும் பார்க்க

தேயிலை தோட்டத்தில் கிழிந்த உடைகள்; வனத்தில் உடல் பாகங்கள் - கோத்தகிரியை உறைய வைத்த பழங்குடி மரணம்!

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகில் உள்ள கூவக்கரை பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் 50 வயதான வெள்ளியங்கிரி. கூலித்தொழிலாளியான இவர் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வேலை செய்து குடும்பம் நடத்தி வந்திர... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: தேர்தலில் போட்டியிட தடையாக இருந்த 6 வயது மகளை கொன்ற கொடூர தந்தை - என்ன நடந்தது?

மகாராஷ்டிராவில் வரும் 5-ம் தேதி பஞ்சாயத்து மற்றும் ஜில்லா பரிஷத் தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் போட்டியிட வேண்டியிட விரும்புபவர்களுக்கு இரண்டு குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும்... மேலும் பார்க்க

ராமேஸ்வரம்: காணிக்கைப் பணத்தில் கைவைத்த சிவபக்தை; கோயிலில் தொடரும் உண்டியல் திருட்டு

காசிக்கு நிகரான புனித தலமாக விளங்கி வரும் ராமேஸ்வரத்தில் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு நாடு முழுவதிலும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பத்தர்கள் வந்து செல்கின்றனர்.விழா காலங்கள் ... மேலும் பார்க்க

கோவை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை - இறப்பதற்கு முன்பு செய்த `செயல்!'

கோவை, பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாந்திமேடு, தம்பு நகர் பகுதியைச் சேர்ந்தவர் கமலேஷ் (48). இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்த... மேலும் பார்க்க

நெல்லை: திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்ட நிலையில் மணப்பெண் உயிரிழப்பு; ஆணவக்கொலையா?- நடந்தது என்ன?

நெல்லை, பேட்டை செக்கடி தெருவைச் சேர்ந்தவர் பச்சிராஜன். இவர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி, ரேவதி. தனியார் பள்ளி ஆசிரியை. இவர்களது முதல் மகளுக்கு திருமணமான... மேலும் பார்க்க