செய்திகள் :

மகாராஷ்டிரா: தேர்தலில் போட்டியிட தடையாக இருந்த 6 வயது மகளை கொன்ற கொடூர தந்தை - என்ன நடந்தது?

post image

மகாராஷ்டிராவில் வரும் 5-ம் தேதி பஞ்சாயத்து மற்றும் ஜில்லா பரிஷத் தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் போட்டியிட வேண்டியிட விரும்புபவர்களுக்கு இரண்டு குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும்.

இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாண்டெட் மாவட்டத்தில், அண்டை மாநிலமான தெலங்கானாவின் யெடபல்லி என்ற இடத்தில் உள்ள கால்வாய் ஒன்றில் 6 வயது பெண் குழந்தையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உடலை மீட்டு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். குழந்தை யார் என்பது குறித்து தெரிந்து கொள்ள குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தனர்.

அதனை பார்த்த மகாராஷ்டிராவை சேர்ந்த ஒருவர் குழந்தை யார் என்பதை அடையாளம் காட்டினார். குழந்தையின் பெயர் பிராச்சி என்று தெரிய வந்தது. இதையடுத்து நாண்டெட் மாவட்டத்தில் உள்ள குரேர் என்ற கிராமத்தை சேர்ந்த அக்குழந்தையின் தந்தை பாண்டுரங்கை பிடித்துச்சென்று விசாரித்தனர்.

விசாரணையில் போலீஸாரின் விசாரணையை திசை திருப்பும் வகையில் பாண்டுரங்க் தகவல்களை கொடுத்தார். ஆனால் அவரது வாக்குமூலம் சந்தேகத்தை ஏற்படுத்தியதால் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

தேர்தலில் போட்டியிட மகள் கொலை

இந்த விசாரணையில் பாண்டுரங்க் தனது 6 வயது மகளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். சலூன் கடை நடத்தி வரும் பாண்டுரங்க் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட பாண்டுரங்க் திட்டமிட்டார். ஆனால் இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனால் பாண்டுரங்கிற்கு ஒரு மகன் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தன. இதில் மகள்கள் இரண்டு பேரும் இரட்டை குழந்தைகள் ஆவர். இது குறித்து பாண்டுரங்க் தற்போது பஞ்சாயத்து தலைவராக இருக்கும் ராமச்சந்திர ஷிண்டேயிடம் கலந்து ஆலோசித்தார்.

இதில் ஒரு குழந்தையை மறைத்துவிடுவது என்று முடிவு செய்தனர். அதன் படி குழந்தையை தத்து கொடுக்கலாம் என்று நினைத்தனர். ஆனால் குழந்தையின் பிறப்பு சான்றிதழில் பாண்டுரங்க் பெயர் இருந்ததால் அத்திட்டத்தை கைவிட்டனர். அதன் பிறகு குழந்தையை எங்கேயாவது விட்டுவிடலாம் என்று நினைத்தனர். ஆனால் திரும்ப வந்துவிட்டால் பிரச்னை ஏற்படும் என்று கருதி அத்திட்டத்தையும் கைவிட்டனர். இறுதியில் குழந்தையை கால்வாயில் பிடித்து தள்ளி கொலை செய்து விட்டு அதனை விபத்து போன்று காட்டிவிடலாம் என்று திட்டமிட்டனர்.

குரேர் கிராமத்தில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் தெலங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டம் தொடங்குகிறது. இதையடுத்து பாண்டுரங்க் தனது மகளை இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்று நிஜாம் சாகர் கால்வாயில் தள்ளிவிட்டு சென்றுவிட்டார். அருகில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஏதோ தண்ணீரில் விழுதாக சத்தம் கேட்டு ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் சிறுமி இறந்து போயிருந்தாள். இதையடுத்து கிராம மக்கள் இது குறித்து போலீஸிற்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் பாண்டுரங்க் மற்றும் பஞ்சாயத்து தலைவர் ராமச்சந்திரா ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ராமேஸ்வரம்: காணிக்கைப் பணத்தில் கைவைத்த சிவபக்தை; கோயிலில் தொடரும் உண்டியல் திருட்டு

காசிக்கு நிகரான புனித தலமாக விளங்கி வரும் ராமேஸ்வரத்தில் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு நாடு முழுவதிலும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பத்தர்கள் வந்து செல்கின்றனர்.விழா காலங்கள் ... மேலும் பார்க்க

கோவை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை - இறப்பதற்கு முன்பு செய்த `செயல்!'

கோவை, பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாந்திமேடு, தம்பு நகர் பகுதியைச் சேர்ந்தவர் கமலேஷ் (48). இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்த... மேலும் பார்க்க

நெல்லை: திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்ட நிலையில் மணப்பெண் உயிரிழப்பு; ஆணவக்கொலையா?- நடந்தது என்ன?

நெல்லை, பேட்டை செக்கடி தெருவைச் சேர்ந்தவர் பச்சிராஜன். இவர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி, ரேவதி. தனியார் பள்ளி ஆசிரியை. இவர்களது முதல் மகளுக்கு திருமணமான... மேலும் பார்க்க

UP: 9 ஆண்டு காதல்; 2 மாதத் திருமண வாழ்க்கை; கழுத்தை நெரித்து கணவன் கொலை; மனைவி சிக்கியது எப்படி?

உத்தரப்பிரதேசத்தில் 9 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்த காதல் கணவனை மனைவி இரண்டு மாதத்தில் கொலை செய்துள்ளார்.அங்குள்ள பரேலி என்ற இடத்தில் வசிப்பவர் ஜோதி. இவர் அரசு பஸ்சில் ஒப்பந்த அடிப்படையில் நடத்துந... மேலும் பார்க்க

சபரிமலை தங்கக் கொள்ளை வழக்கு: சென்னையில் நடிகர் ஜெயராமிடம் விசாரணை; சாட்சியாக மாற்ற முடிவா?

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் உன்னிகிருஷ்ணன் போற்றி உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்ட... மேலும் பார்க்க

கடலூர்: காதலில் விழுந்த மருமகள்; கண்டித்த மாமனாரை பெட்ரோல் ஊற்றி எரித்த காதலன்

கடலூர் மாவட்டம் மாளிகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முந்திரி விவசாயியான ராஜேந்திரன், கடந்த 29-ம் தேதி இரவு அதே பகுதியைச் சேர்ந்த கந்தன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் பண்ருட்டிக்கு சென்று கொண்டிருந்தார்.... மேலும் பார்க்க