செய்திகள் :

சபரிமலை தங்கக் கொள்ளை வழக்கு: சென்னையில் நடிகர் ஜெயராமிடம் விசாரணை; சாட்சியாக மாற்ற முடிவா?

post image

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் உன்னிகிருஷ்ணன் போற்றி உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சபரிமலை கோயில் கருவறையின் முன்பகுதியில் இரு புறமும் உள்ள துவார பாலகர்கள் சிற்பம், திருநடை, கொடி மரம் உள்ளிட்டவைகளில் இருந்து தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

துவார பாலகர்கள் சிற்பத்தின் மீது பொதியப்பட்ட கவசங்கள் மற்றும் கருவறை திருநடை ஆகியவற்றில் செம்பு பொதியப்பட்டு அதன்மீது தங்கம் பூசப்பட்டுள்ளது. தங்கம் பூசும் பணி சென்னை ஸ்மார்ட் கிரியேசன்ஸ் நிறுவனத்தில் வைத்து நடந்துள்ளது.

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில்
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில்

தங்கம் பூசப்பட்ட கோயில் திருநடை போன்றவை பல வி.ஐ.பிக்களின் வீடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பூஜைகள் நடத்தி அதற்காக பணம் வசூலிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதில் நடிகர் ஜெயராம் வீட்டில் வைத்தும் கோயில் திருநடைகள் பூஜை செய்யப்பட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து சென்னையில் உள்ள நடிகர் ஜெயராமின் வீட்டில் வைத்து அவரிடம் சிறப்பு விசாரணைக்குழுவினர் விசாரணை நடத்தினர். அதில் அவர் உன்னிகிருஷ்ணன் போற்றியிடம் ஏற்பட்ட பழக்கம் குறித்து தெரிவித்துள்ளார்.

சிறப்பு விசாரணைக்குழுவிடம் நடிகர் ஜெயராம் அளித்த வாக்குமூலம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ஜெயராம் அளித்த வாக்குமூலத்தில், "சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் தரிசனத்துக்குச் செல்லும்போது அங்கு வைத்து உன்னிகிருஷ்ணன் போற்றியைப் பார்த்தேன். அதிலிருந்து அவரிடம் பழக்கம் ஏற்பட்டது. பூஜைகளுக்காகப் பலமுறை அவர் எனது வீட்டுக்கு வந்துள்ளார்.

உன்னிகிருஷ்ணன் போற்றி மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. அவரது பணப் பரிவர்த்தனைகளோ, மோசடி செயல்கள் குறித்தோ எனக்கு தெரியாது.

உன்னிகிருஷ்ணன் போற்றி
உன்னிகிருஷ்ணன் போற்றி

சபரிமலை கோயில் திருநடைகளுக்கு சென்னை ஸ்மார்ட் கிரியேசன்ஸ் நிறுவனத்தில் வைத்து பூஜைகள் நடத்தியபோதும் அதில் நான் கலந்துகொண்டேன். கோட்டயம் இளம்பள்ளி கோயிலில் இருந்து திருநடையை ஊர்வலமாக எடுத்துச் சென்றபோதும் அதில் நான் கலந்துகொண்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.

நடிகர் ஜெயராமைச் சாட்சியாக மாற்ற சிறப்பு விசாரணைக் குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திருநடை உபயமாக வழங்குவதாகக் கூறி உன்னிகிருஷ்ணன் போற்றி பலரிடம் பணம் வசூலித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது குறித்தும் சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வருகிறது.

கடலூர்: காதலில் விழுந்த மருமகள்; கண்டித்த மாமனாரை பெட்ரோல் ஊற்றி எரித்த காதலன்

கடலூர் மாவட்டம் மாளிகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முந்திரி விவசாயியான ராஜேந்திரன், கடந்த 29-ம் தேதி இரவு அதே பகுதியைச் சேர்ந்த கந்தன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் பண்ருட்டிக்கு சென்று கொண்டிருந்தார்.... மேலும் பார்க்க

ஐடி சோதனையின் போது விபரீதம்: விசாரணையின்போதே தற்கொலை செய்துகொண்ட தொழிலதிபர் சிஜே ராய்!

தென்னிந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான 'கான்ஃபிடன்ட் குழுமத்தின்' (Confident Group) நிறுவனர் மற்றும் தலைவர் சி.ஜே. ராய் (57). கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த இவர், ரியல் எஸ்டேட் துறையில் மிக... மேலும் பார்க்க

குளித்தலை: `ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்; யாருக்காக ஆட்சி நடத்துகிறது திமுக?' - அண்ணாமலை கண்டனம்!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் தொகுதியின் தி.மு.க சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பழனியாண்டி. இவருக்குச் சொந்தமான கல்குவாரி, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, சிவாயம் பகுதியில் செயல்பட்டு ... மேலும் பார்க்க

கல்குவாரிக்குச் செய்தி சேகரிக்கச் சென்றவர்கள் மீது தாக்குதல்; திமுக எம்.எல்.ஏ மீது குற்றச்சாட்டு!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் தொகுதியின் தி.மு.க சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பழனியாண்டி. இவருக்குச் சொந்தமான கல்குவாரி, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, சிவாயம் பகுதியில் செயல்பட்டு ... மேலும் பார்க்க

`உன் சகோதரியை கொலை செய்கிறேன்' - மனைவியை அடித்து கொன்று மைத்துனருக்கு போனில் தகவல் கொடுத்த கணவர்

டெல்லி போலீஸில் சிறப்பு ஆயுத பிரிவில் பணியாற்றி வந்தவர் காஜல் செளதரி(27). இவருக்கு கடந்த 2023ம் ஆண்டு அன்குர் என்பவருடன் திருமணம் நடந்தது. இத்தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார். அதோடு காஜல் இப்போது 3 மாத... மேலும் பார்க்க

வேலூர்: சிறுமியிடம் பாலியல் சீண்டல்; பேச மறுத்ததால் மிரட்டல் - தீயணைப்பு வீரர் கைது

வேலூர் மாவட்டம், லத்தேரி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் சசிகுமார், வயது 31. இவர், வேலூர் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரராக பணிபுரிந்து வருகிறார். இவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் இரு பெண் குழந்த... மேலும் பார்க்க