செய்திகள் :

குளித்தலை: `ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்; யாருக்காக ஆட்சி நடத்துகிறது திமுக?' - அண்ணாமலை கண்டனம்!

post image

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் தொகுதியின் தி.மு.க சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பழனியாண்டி. இவருக்குச் சொந்தமான கல்குவாரி, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, சிவாயம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தக் கல்குவாரியில் செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் தொலைக்காட்சியின் திருச்சி மாவட்டச் செய்தியாளர் கதிரவன், கேமராமேன் செபாஸ்டின், சமூக ஆர்வலர் சுடலைக்கண்ணு, வழக்கறிஞர் திருமலை ராஜன், உதவியாளர் ராஜமாணிக்கம் ஆகிய 5 பேர் சென்றிருக்கின்றனர்.

அப்போது, குளித்தலை - மணப்பாறை நெடுஞ்சாலையில் இருந்து ட்ரோன் மூலம் முழுவதுமாக எம்.எல்.ஏ-வின் கல்குவாரியை கவர் செய்து வீடியோ, போட்டோ எடுத்துள்ளனர்.

குளித்தலை காவல் நிலையம்

நெடுஞ்சாலைக்கும், குவாரிக்கும் இடையே 8 கிலோ மீட்டர் இடைவெளி உள்ளது. அப்போது, அந்த ட்ரோன் பறந்து கொண்டு வருவதைப் பார்த்த ஒருவர் மூலமாக, குவாரிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அங்கிருந்து கிளம்பி வந்த 50-க்கும் மேற்பட்ட நபர்கள், அவர்களை கடுமையாகத் தாக்கி அவர்கள் கைவசம் வைத்திருந்த 2 கேமராக்கள், ட்ரோன் ஆகியவற்றையும் சுக்குநூறாக அடித்து உடைத்ததோடு, அவர்களை கடத்தியும் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு ஸ்ரீரங்கம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ பழனியாண்டி சுமார் 50 அடியாட்களை வைத்து தாக்குதல் நடத்த வைத்ததாகக் காயமடைந்தவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். 2 மணி நேரத்திற்கும் மேலாக பத்திரிகையாளர்களை தொடர்பு கொள்ள முடியாத சூழல் இருந்து வந்தது.

இது குறித்து கரூர் மாவட்ட எஸ்.பி ஜோஸ் தங்கையா உத்தரவின் பெயரில், குளித்தலை டி.எஸ்.பி செந்தில்குமார் தலைமையில் காவல்துறையினர் பத்திரிகையாளர்களை மீட்கச் சென்றனர். அதனைத் தொடர்ந்து, செய்தியாளர் கதிரவன், கேமராமேன் செபாஸ்டின் உள்ளிட்ட இருவரையும் குளித்தலை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

எம்.எல்.ஏ பழனியாண்டி

மேலும், இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த வழக்கறிஞர் திருமலை ராஜன், உதவியாளர் ராஜமாணிக்கம் ஆகிய இருவரும் குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், நிருபர் மற்றும் ஒளிப்பதிவாளரை தாக்கிய எம்.எல்.ஏ தரப்பு மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், ``கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த கிருஷ்ணராயபுரம் பகுதியில் நடைபெறும், சட்டவிரோத கல்குவாரி கொள்ளைக் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற @NewsTamilTV24x7 செய்தியாளர் திரு. கதிரவன், ஒளிப்பதிவாளர் திரு. செபாஸ்டின் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல், கடும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது.

அண்ணாமலை
அண்ணாமலை

திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி நடத்தும் சட்டவிரோத கனிமச் சுரண்டலை கேள்வி கேட்டதற்காக, ஊடகவியலாளர்களைக் கொலை செய்யும் நோக்கத்துடன் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இந்த ரவுடிகள், முழுக்க முழுக்க திமுகவின் பாதுகாப்பிலேயே செயல்படுகிறார்கள் என்பது தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும். திமுக அரசு, யாருக்காக ஆட்சி நடத்துகிறது? கடத்தல்காரர்களுக்கும், ரவுடிகளுக்குமா?

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்குப் பொறுப்பான அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். சட்டவிரோத கல்குவாரி கொள்ளைக்குப் பின்னால் உள்ள அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

கல்குவாரிக்குச் செய்தி சேகரிக்கச் சென்றவர்கள் மீது தாக்குதல்; திமுக எம்.எல்.ஏ மீது குற்றச்சாட்டு!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் தொகுதியின் தி.மு.க சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பழனியாண்டி. இவருக்குச் சொந்தமான கல்குவாரி, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, சிவாயம் பகுதியில் செயல்பட்டு ... மேலும் பார்க்க

`உன் சகோதரியை கொலை செய்கிறேன்' - மனைவியை அடித்து கொன்று மைத்துனருக்கு போனில் தகவல் கொடுத்த கணவர்

டெல்லி போலீஸில் சிறப்பு ஆயுத பிரிவில் பணியாற்றி வந்தவர் காஜல் செளதரி(27). இவருக்கு கடந்த 2023ம் ஆண்டு அன்குர் என்பவருடன் திருமணம் நடந்தது. இத்தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார். அதோடு காஜல் இப்போது 3 மாத... மேலும் பார்க்க

வேலூர்: சிறுமியிடம் பாலியல் சீண்டல்; பேச மறுத்ததால் மிரட்டல் - தீயணைப்பு வீரர் கைது

வேலூர் மாவட்டம், லத்தேரி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் சசிகுமார், வயது 31. இவர், வேலூர் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரராக பணிபுரிந்து வருகிறார். இவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் இரு பெண் குழந்த... மேலும் பார்க்க

சென்னை: விடுதியில் பெண்கள் உடைமாற்றுவதை வீடியோ எடுத்த நபர்; சிசிடிவி காட்சியை வைத்து பிடித்த போலீஸ்!

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சிலர், கடந்த 28-ம் தேதி சென்னையில் நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து... மேலும் பார்க்க

சென்னை: Trible Murder Case; மூன்று பேர் கைது - கொலைக்கான காரணம் தெரியாமல் திணறும் போலீஸ்

சென்னை அடையாறு இந்திரா நகர், 1வது அவென்யூவில் உள்ள பைக் ஷோரூம் அருகில் கிடந்த சாக்கு மூட்டையிலிருந்து ரத்தம் வழிவதாக அடையாறு போலீஸாருக்கு கடந்த 26-ம் தேதி தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்துக்குச் ... மேலும் பார்க்க

சபரிமலைக் கோயில் தங்கம் திருட்டு: `செல்வம் பெருகும் என்றார்கள்' - விசாரணையில் நடிகர் ஜெயராம்

இந்தியாவிலிருந்து ரூ.10,000 கோடி கடனுடன் தப்பி ஓடிய தொழிலதிபர் விஜய் மல்லையா, 1998-99 காலக்கட்டத்தில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குத் 32 கிலோ தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களைத் தானமாக வழங்கினார். அந்தத்... மேலும் பார்க்க