செய்திகள் :

DMK vs Congress: டெல்லி டு சென்னை... கே.சி வேணுகோபால் வருகையின் அஜெண்டா என்ன? | பரபரக்கும் பவன்

post image

தமிழக காங்கிரஸில் இப்போது இரண்டு கோஷ்டிகள் மல்லுக்கட்டுகின்றன. கே.சி.வேணுகோபால், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி தரப்போ, "40 முதல் 70 தொகுதிகள்வரை வேண்டும்; இல்லையெனில் அமைச்சரவையில் அதிகாரப் பங்கு வேண்டும். எதுவும் கிடைக்காவிட்டால் விஜய்யின் த.வெ.க பக்கம் ஒதுங்குவதிலும் தவறில்லை" என அதிரடி காட்டுகின்றனர்.

ஆனால், ப.சிதம்பரம் மற்றும் செல்வப்பெருந்தகை தரப்போ, "வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு... தி.மு.க-வே பாதுகாப்பானது" எனப் பிடிவாதம் பிடிக்கிறார்கள். இதனால் இரண்டு கட்சிகளின் தலைமையும் கூட்டணிகுறித்து பொதுவெளியில் பேச வேண்டாமெனத் தெரிவித்திருக்கிறது.

மாணிக்கம் தாகூர்

மதுரையில் மூண்ட தீ!

இப்படியான சூழலில் மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் தி.மு.க எம்.எல்.ஏ கோ. தளபதி பேசிய பேச்சுதான் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது. "காங்கிரஸில் இருக்கும் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்றோர் எம்.பி-க்களாகிவிட்டார்கள். அதனால் அடுத்தவன் எம்.எல்.ஏ ஆனால் என்ன, ஆகாவிட்டால் என்ன என்கிற மனநிலையில் இருக்கிறார்கள். அதிகாரத்தில் பங்கு கேட்டு நிபந்தனை விதிக்கும் இவர்களுக்கு அடுத்த முறை 'சீட்'டே கொடுக்கக்கூடாது" என அவர் ஆவேசப்பட, காங்கிரஸ் தரப்பில் அனல் பறந்தது.

இதற்குப் பதிலடி கொடுத்த மாணிக்கம் தாகூர், "மதுரை வடக்கு தொகுதியை இந்த முறை காங்கிரஸே கேட்கும். அதிகார திமிருடன் செயல்படுபவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டிய நேரம் இது" எனச் சீறினார். ஜோதிமணியோ, "கூட்டணி தர்மத்திற்காக இதுவரை பொறுத்திருந்தோம், இனியும் பொறுக்க மாட்டோம்" என 'வார்னிங்' கொடுத்திருந்தார்.

இப்படியாக இருதரப்பிலும் நிலவும் பிரச்சினைக்கு முடிவு கட்டும் விதமாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியைச் சந்திக்கச் சென்றார் தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி. சுமார் 40 நிமிடங்கள் நீடித்த அந்தச் சந்திப்பு நடைபெற்றது.

திமுக எம்எல்ஏ கோ. தளபதி
திமுக எம்எல்ஏ கோ. தளபதி

ராகுல் - கனிமொழி: 40 நிமிட மீட்டிங்!

அப்போது பேசிய கனிமொழி, "தமிழக காங்கிரஸில் நடக்கும் குழப்பங்களுக்குக் கிரிஷ் சோடங்கரும், மாணிக்கம் தாகூரும்தான் முக்கியக் காரணம். வரப்போகும் தேர்தல் நமக்கு மிக முக்கியமானது. காங்கிரஸுடன் கைகோத்தே தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்பதுதான் அண்ணனின் (மு.க.ஸ்டாலின்) விருப்பம்" எனக் கனிமொழி விவரித்ததாகக் கூறப்படுகிறது.

அதற்கு ராகுல், "கடந்தமுறை 40 தொகுதிகள் வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். ஆனால் நீங்கள் (தி.மு.க) அம்மாவிடம் (சோனியா காந்தி) பேசினீர்கள். எனவேதான் குறைந்த இடங்களுக்குச் சம்மதித்தேன். ஆனால், இந்த முறையும் அதைத் தொடர முடியாது. கூட்டணிக்குள் காங்கிரஸுக்கு உரிய மரியாதையும் அந்தஸ்தும் வழங்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது.

இதற்குப் பதிலளித்த கனிமொழி, "நாங்கள் மாதந்தோறும் எம்.எல்.ஏ-க்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து வருகிறோம். அந்த ரிப்போர்ட்படி, காங்கிரஸின் 12 சிட்டிங் எம்.எல்.ஏ-க்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கினால் தோல்வி நிச்சயம் எனத் தெரிகிறது. அப்படியிருக்கையில் கூடுதல் இடங்களை எப்படிக் கொடுக்க முடியும்? கடந்த முறை வெற்றி வாய்ப்புள்ள இடங்களையே உங்களுக்காகத் தியாகம் செய்தோம். அதேபோல் இந்த முறை நீங்களும் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு அட்ஜஸ்ட் செய்ய வேண்டும்" எனச் சொல்லிவிட்டு வந்ததாகத் தகவல்.

கனிமொழி - ராகுல் காந்தி

இந்தச் சூழலில் இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, "தி.மு.க - காங்கிரஸ் பேச்சுவார்த்தை சுமூகமாகப் போய்க்கொண்டிருக்கிறது. கூட்டணிகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பைத் தி.மு.க தலைவர் விரைவில் வெளியிடுவார்" எனத் தெரிவித்தார்.

இதற்கிடையில், 'காங்கிரஸை விமர்சித்துப் பேசிய எம்.எல்.ஏ கோ. தளபதிமீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்தார். இதனால் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்குள் மீண்டும் சலசப்பு ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய பரபரப்பான சூழலில்தான், நாளை மறுநாள் கே.சி. வேணுகோபால் தமிழகம் வருகிறார்.

இதுகுறித்து சத்தியமூர்த்தி பவன் சீனியர்கள் சிலர் கூறுகையில், "அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால் நாளை மறுநாள் மதியம் 12.10 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில் சென்னை புறப்படுகிறார். பிற்பகல் 3.30 மணிக்குச் சென்னை வரும் அவர், பல்லாவரத்தில் நடைபெறும் காங்கிரஸ் நடைப்பயணத்தில் பங்கேற்கிறார். அதன்பின் புதுச்சேரி நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு சென்னை திரும்பும் அவர், தனியார் ஹோட்டலில் தங்குவார்.

அண்ணா அறிவாலயம்

அப்போது கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடர்பாகத் தி.மு.க மேலிடத்தைச் சந்திக்க வாய்ப்பிருக்கிறது. அந்தச் சந்திப்பில் ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகளை அழுத்தமாக முன்வைப்பார். அதன் பிறகு இரு கட்சிகளுக்கும் இடையிலான கூட்டணிகுறித்த அறிவிப்பு வெளியாகலாம்" என்றனர்.

கூட்டணியைக் காப்பாற்ற வேணுகோபால் 'தூது' போகிறாரா அல்லது 'துண்டிப்பு'க்கு அச்சாரம் போடுகிறாரா என்பது விரைவில் தெரிந்துவிடும்!

சென்னை: 'திமுகவை புகழ்ந்து தள்ளிய பாஜக கவுன்சிலர்!' - ஜாலியாக கலாய்த்த உடன்பிறப்புகள்!

மேயர் பிரியா தலைமையில் சென்னை மாநகராட்சிக் கூட்டம் இன்று ரிப்பன் பில்டிங்கில் நடந்திருந்தது. எப்போதும் எதிர்க்கருத்துகளை முன்வைத்து அமளி செய்யும் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன், இன்று திடீரென திமுகவை ஏகத... மேலும் பார்க்க

`இன்னும் இரண்டே மாதங்களில் எம்.எல்.ஏ' - குலுங்கி சிரித்த மேயர் பிரியா - மாநகராட்சி கூட்டத்தில் கலகல!

மேயர் பிரியா தலைமையிலான மாநகராட்சிக் கூட்டம் ரிப்பன் பில்டிங்கில் இன்று நடந்திருந்தது. இந்தக் கூட்டத்தில் ஐ.யூ.எம்.எல் கட்சியின் 61 வது வார்டு கவுன்சிலர் பாத்திமா முஷாபர், `மேயருக்கு எம்.எல்.ஏவாக ப்ரம... மேலும் பார்க்க

`விஜய் அறையிலேயே உட்கார்ந்து கொண்டு அரசியல் செய்வது சரியா?' - செல்லூர் ராஜூ கேள்வி

மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெத்தானியாபுரம் 63 வது வார்டு ஈபி காலனியில் புதிய நியாய விலைக் கடையை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திறந்து வைத்தார்.அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும... மேலும் பார்க்க

சீமான் போட்டியிடும் தொகுதிக்கு பாஜக பொறுப்பாளராகும் அண்ணாமலை - அதிர்ச்சியில் நாதக முகாம்!

சீமான் போட்டியிடுவதாக கூறப்படும் காரைக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு பா.ஜ.க-வின் தேர்தல் சுற்றுபயண பொறுப்பாளராக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டிருப்பது, நாம் தமிழர் கட்சி முகாமில் பேசுபொர... மேலும் பார்க்க

"மதுரை வடக்கு காங்கிரஸுக்கு.. திருப்பி அடிக்கவும் தெரியும்!" - தளபதியை சீண்டும் மாணிக்கம் தாகூர்

மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கும், திமுகவினருக்குமிடையே கூட்டணி சண்டை சூடுபிடித்துள்ளது. மூன்று நாட்களுக்கு முன் மொழிப்போர் தியாகிகள் நிகழ்வு ஒன்றில் பேசிய மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ-வு... மேலும் பார்க்க