என்னை இப்படி பார்க்கணும்னு அவர் ஆசைப்பட்டார்..! - Karthigaichelvan | KS | Disco ...
PT Usha: பி.டி.உஷா கணவர் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
கேரள மாநிலம், கோழிக்கோட்டைச் சேர்ந்த பிரபல தடகள வீரங்கனை பி.டி. உஷா. சர்வதேச தடகளப் போட்டிகளில் இந்தியா சார்பில் போட்டியிட்டு பதக்கங்களை வென்று சாதனை படைத்தவர். தற்போது இவர் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருக்கிறார். இவர் கணவர் சீனிவாசன். மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் துணை காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர், கோழிக்கோடு மாவட்டம், திக்கோடியில் வசித்து வந்தார். இந்த நிலையில், நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பி.டி.உஷா டெல்லி சென்றிருந்த நிலையில், இன்று சீனிவாசன் மயங்கி விழுந்துள்ளார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கின்றனர். சீனிவாசன் மறைவுக்கு அரசியல் தலைவர்களும், விளையாட்டு வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான பி.டி.உஷாவின் கணவர் சீனிவாசன் மறைந்த செய்தியறிந்து வருத்தமுற்றேன். அன்புக்குரியவரை இழந்து தவிக்கும் பி.டி.உஷா மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.















