`இன்னும் இரண்டே மாதங்களில் எம்.எல்.ஏ' - குலுங்கி சிரித்த மேயர் பிரியா - மாநகராட்...
சென்னை: விடுதியில் பெண்கள் உடைமாற்றுவதை வீடியோ எடுத்த நபர்; சிசிடிவி காட்சியை வைத்து பிடித்த போலீஸ்!
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சிலர், கடந்த 28-ம் தேதி சென்னையில் நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினர். அப்போது பெண்கள் குளித்துவிட்டு உடைகளை மாற்றியிருக்கிறார்கள். அதை மர்ம நபர் ஒருவர், தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார். அதைக் கவனித்த 29 வயது இளம்பெண், கூச்சலிட்டிருக்கிறார். உடனே வீடியோ எடுத்த நபர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றிருக்கிறார். இளம்பெண், விவரத்தைக் கூறியதும் அங்கிருந்த பெண்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அதைத் தொடர்ந்து வீடியோ எடுத்தவரைப் பிடிக்க அவர்கள் முயன்றனர். அப்போது அந்த நபர் பீர்பாட்டிலை உடைத்து அவர்களை மிரட்டிவிட்டு தப்பிச் சென்று விட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கோயம்பேடு காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. உடனடியாக போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று அங்கிருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதோடு விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தவர்களின் விவரங்களையும் சேகரித்தனர். போலீஸாரின் விசாரணையில் இந்தக் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது கடலூர் மாவட்டம், திட்டக்குடியைச் சேர்ந்த பெரியதுரை (40) எனத் தெரியவந்தது. உடனடியாக அவரைக் கைதுசெய்து குற்றச் செயலுக்குப் பயன்படுத்திய செல்போனையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் பெரியதுரை கோவையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வருவது தெரியவந்தது. சம்பவத்தன்று நண்பர்களைச் சந்திக்க அவர் சென்னை வந்த இடத்தில்தான் பெண்கள் உடைமாற்றுவதை ரகசியமாக வீடியோ எடுத்த குற்றச்சாட்டில் வசமாக சிக்கியிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.
















